Published:Updated:

``#MeToo கிராமங்களையும் சென்றடைய வேண்டும்!” சமூக ஆர்வலர் செம்மலர்

``#MeToo கிராமங்களையும் சென்றடைய வேண்டும்!” சமூக ஆர்வலர் செம்மலர்

``இது பெண்கள் மட்டும் பேசும் விஷயமல்ல. ஆண்களும் பேச முன்வர வேண்டும். ஏன்னா, நமக்கு என்ன பிரச்னை இருக்கு எனப் பெண்களாகிய நமக்குத் தெரியும். ஆண்களுக்குத்தான் அது புரியவில்லை."

``#MeToo கிராமங்களையும் சென்றடைய வேண்டும்!” சமூக ஆர்வலர் செம்மலர்

``இது பெண்கள் மட்டும் பேசும் விஷயமல்ல. ஆண்களும் பேச முன்வர வேண்டும். ஏன்னா, நமக்கு என்ன பிரச்னை இருக்கு எனப் பெண்களாகிய நமக்குத் தெரியும். ஆண்களுக்குத்தான் அது புரியவில்லை."

Published:Updated:
``#MeToo கிராமங்களையும் சென்றடைய வேண்டும்!” சமூக ஆர்வலர் செம்மலர்

``தேசிய ஊடகங்கள் #Metoo-வுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கும்போது, இந்தப் பிரசாரத்துக்குப் பின்னாடி ஓர் அரசியல் இருக்கு என்றுதான் தோணுது. ஏன்னா, இங்கே இது மாதிரி எவ்வளவோ பிரச்னைகளை வந்து போயிருக்கு. அப்போ யாரும் பெரிசா யாருமே கண்டுக்கலை. அதுக்காக, இந்தப் பிரசாரமே பொய்யானதுனு சொல்ல வரலை. இப்படியான விஷயங்களைத் தினமும் பலதரப்பட்ட பெண்கள் சந்திச்சுட்டுத்தான் வர்றாங்க. அவங்களுக்காகப் படித்த பெண்கள் பொதுவெளியில் பேசறது நேர்மறையான மாற்றமே” என்கிறார், சமூக ஆர்வலர் செம்மலர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பேராசிரியை செம்மலர், #MeToo குறித்த தன் கருத்தையும், பன்முகம்கொண்டு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூகம் எப்படி இந்த விஷயத்தை அணுக வேண்டும் என்பதைக் குறித்தும், விசாலமான பார்வையுடன் பேசுகிறார்.

``இந்தப் பிரசாரம், வெளிப்படையாகப் பேசும் பிரபலங்களுடனோ, மேல்தட்டு மக்களுடனோ மட்டுமே நின்றுவிடக் கூடாது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களிடமும் சென்றடைய வேண்டும். தினம் தினம் ஏதோ ஒரு வகையில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை இது. ஆனால், பாலியல் தொல்லை குறித்தும், வன்முறை குறித்தும் பேசவே பேசக் கூடாது எனச் சொல்லிச் சொல்லி வளர்ந்த சமூகத்தில், இப்படியான மாற்றங்கள் நிச்சயம் தேவை. அரியலூர் நந்தனி பாலியல் வன்முறையால் கொலை செய்யப்பட்டு, அவரின் உடல் அழுகிய நிலையில் இருந்தபோது நமக்குத் தெரியவருது. சில நாள்கள் பேசினோம். அப்புறம் என்ன ஆச்சுன்னு யாருமே பேசலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குஜராத் கலவரத்தில், இஸ்லாமியப் பெண்கள் என்ற ஒரே காரணத்துக்காக, கர்ப்பிணிகள் என்றும் பார்க்காமல், வயித்தைக் கிழிச்சு எவ்வளவு கொடூரமான முறையில் கொல்லப்பட்டாங்க? அதுபற்றி சில நாள்களிலே மறந்துட்டோம். என்னைக் கேட்டால், இப்படியான சமூகக் கொடூரங்களுக்கும் இந்த #MeToo பிரசாரத்தைக் கொண்டுபோகணும். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுடன் நின்னுடாமல், கடுமையான சட்டங்களையும் அதனை முறையாச் செயல்படுத்தவும் போராடணும். அப்போதான், அடுத்து இப்படிச் செய்ய நினைக்கும் ஆண்களுக்கு அச்சம் உண்டாகும்” என்கிறார் செம்மலர்.

சிம்பயாஸிஸ் யுனிவர்சிட்டி (Symbiosis University), சட்டக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற புகார்கள் அதிக அளவில் வருகிறதே?

``உண்மையைச் சொல்லப்போனால், பாலியல் புகார்கள் குறித்த விழிப்பு உணர்வு, கல்வி நிறுவனங்களுக்கு இல்லை. Internal Complaints Committee இருக்க வேண்டும் என்றுதான் சட்டம் சொல்கிறது. ஆனால், எந்தக் கல்வி நிறுவனங்களும் அதைக் கடைப்பிடிப்பதே இல்லை. நீங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், எத்தனை கல்வி நிறுவனங்கள் இத்தகைய கமிட்டியை அமைத்திருக்கிறது என்று விசாரியுங்கள். உங்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும். இதனால்தான், நாம் தொடர்ந்து இந்தச் சமூக சிக்கலைப் பற்றிப் பேச வேண்டும். இன்னும் கல்விப் போய்ச்சேராத குக்கிராமங்களில், இதுகுறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு பேராசிரியராக, இளைய தலைமுறைகளிடம் இதுபோன்ற விஷயங்களில் சிறிதளவு விழிப்பு உணர்வு இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். இது பெண்கள் மட்டும் பேசும் விஷயமல்ல. ஆண்களும் பேச முன்வர வேண்டும். ஏன்னா, நமக்கு என்ன பிரச்னை இருக்கு எனப் பெண்களாகிய நமக்குத் தெரியும். ஆண்களுக்குத்தான் அது புரியவில்லை. நான் இதுபோன்ற முயற்சிகளில்தான் ஈடுபட நினைக்கிறேன். ஆண்களுடன் சேர்ந்து இந்த விஷயத்தைச் சிந்தித்தால்தான், ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்” என்கிறார் செம்மலர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism