Published:Updated:

உங்கள் குழந்தை உணவை வீணாக்காமலிருக்க, இவற்றைப் பின்பற்றுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உங்கள் குழந்தை உணவை வீணாக்காமலிருக்க, இவற்றைப் பின்பற்றுங்கள்!
உங்கள் குழந்தை உணவை வீணாக்காமலிருக்க, இவற்றைப் பின்பற்றுங்கள்!

"வாரம் முழுக்கச் சாப்பாட்டை வீணாக்காமல் இருந்த செல்லத்துக்குப் பிடிச்ச பலகாரத்தைச் செஞ்சு தரேன்" எனச் சின்னச் சின்ன பரிசுகளால் ஊக்கப்படுத்துங்கள்.

ருபுறம் சரியான உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டால் நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மறுபுறம், இலை முழுவதும் கலர் கலராக அடுக்கிவிட்டு, பாதியிலே சாப்பிடமுடியாமல் வீணாக்குகிறார்கள். நம்மில் பலர் சாப்பிட்டுத் தூக்கி எறிந்த மிச்சத்தையே விருந்தாக நினைத்துக் காத்திருப்போர் உண்டு. உணவைச் சரியான அளவில் பயன்படுத்த குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் சமுதாய கடமை. உணவை வீணாக்கும் பழக்கத்தைக் குழந்தைகள் தவிர்க்க வழி சொல்கிறார், சமூகப் பேச்சாளரான ஷியாமளா ரமேஷ் பாபு.

1. ஒரு வயதுக்குப் பின்னர், குழந்தைகளை அவர்களாகவே சாப்பிடப் பழக்கப்படுத்துவது அவசியம். எனவே, வீட்டில் உள்ள பெரியவர்கள் சாப்பிடும்போதே அவர்களையும் அமரவைத்து, அவர்களுக்கென ஒரு சிறிய தட்டில், அவர்கள் சாப்பிடும் சராசரி அளவைவிடக் கொஞ்சம் குறைவாகவே பரிமாறுங்கள். தட்டில் இருப்பதை முழுமையாகச் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் பரிமாறுவேன் எனச் சொல்லுங்கள். ஒரு முறை முழுவதுமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டால் சமத்தாகச் சாப்பிட்டுவிட்டாயே என்பது போன்ற பாராட்டுகளை வழங்குங்கள். இந்த ஊக்கம் அவர்களுக்கு நாளடைவில் உணவை வீணாக்கக் கூடாது என்ற பழக்கமாகவே மாறிவிடும்.

2. மாதம் ஒருமுறை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களுக்கு  அவர்களைக் கூட்டிச் செல்லுங்கள். சாப்பாடு என்பது, எவ்வளவு போற்றப்படவேண்டிய ஒன்று என்பதையும், சாப்பாட்டுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் குழந்தைகளுக்குப் புரியும் வகையில் சொல்லுங்கள். அதன்பின், குழந்தைகள் உணவை வீணாக்கும் சூழல் வந்தால், `செல்லம்... உன் வயசுக் குழந்தைகள் எத்தனை பேர் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டதைப் பார்த்தே. இப்படி வேஸ்ட் பண்ணலாமா?' என ஞாபகப்படுத்துங்கள்.

3. குழந்தைகளுக்குப் பல வகையான உணவுகள் பழக்கப்படாமலே இருக்கும். எனவே, அவர்கள் ஏதேனும் புதிய உணவின் பெயரைக் கேட்டாலோ, படத்தைப் பார்த்தாலோ, அதைக் கேட்டு அடம்பிடிப்பார்கள். அதை வாங்கிக்கொடுத்தால், சுவை நன்றாக இல்லையென ஒதுக்கிவிடுவார்கள். இதுபோன்ற சூழலில், `அதைவிடச் சுவையான, ஆரோக்கியமான உணவை வாங்கித் தருகிறேன்' என்று பொறுமையுடன் கூறி, ஆரோக்கியமான உணவை வாங்கிக்கொடுங்கள்.

4. உங்கள் பிள்ளை தொடர்ந்து சாப்பாட்டை வீணாக்காமல் இருந்ததா, வாரம் முழுக்கச் சாப்பாட்டை வீணாக்காமல் இருந்த செல்லத்துக்குப் பிடிச்ச பலகாரத்தைச் செஞ்சு தரேன்' எனச் சின்னச் சின்னப் பரிசுகளால் ஊக்கப்படுத்துங்கள்.

5. ஒரு சாப்பாட்டை வேண்டாம் எனத் தூக்கி எறிகையில், அதற்கான தொகையையும் குப்பையில் எறிகிறோம் என்பதை குழந்தைக்கு உணர்த்துங்கள். உண்மையிலே குழந்தையால் சாப்பிடமுடியாமல் திணறினால், அவர்களை அடிக்காமல், `நீ எவ்வளவு காசை வீணாக்கிட்டே' எனப் பொறுமையான குரலில் பேசுங்கள். இது, அடுத்தமுறை அவர்கள் உணவை வீணாக்குவதைத் தவிர்க்க உதவும். மேலும், பணத்தின் மதிப்பையும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருக்கும்.

6. காய்கள், பழங்கள், உணவு என எவற்றையெல்லாம் குழந்தைகள் வீணாக்குகிறார்களோ, அவற்றில் உள்ள சத்துகளின் பெயர்களைச் சொல்லி, `இந்தச் சத்துகளை இன்று இழந்துட்டே. சாப்பிட்டிருந்தால் இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கலாம்' என அன்பான தொனியில் பேசுங்கள்.

7. பசிக்கு ஏற்ற அளவுதான் குழந்தைகள் சாப்பிடும். நம் சாமர்த்தியத்தால் கூடுதலாகத் திணிக்க நினைப்பது தவறு. எனவே, குழந்தைகளுக்காகவே பல அளவுகளில் கிண்ணங்களில் பசிக்கு ஏற்ப அவற்றில் பதார்த்தம் வைத்துச் சாப்பிடச் சொல்லலாம்

இனி, உங்கள் குழந்தையும் சாப்பாட்டை வீணாக்காது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு