Published:Updated:

ஆயுள் காப்பீடு பாலிசியில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

ஆயுள் காப்பீடு பாலிசியில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
ஆயுள் காப்பீடு பாலிசியில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

ஆயுள் காப்பீடு பாலிசி விஷயத்தில் ஏதேனும் ஒரு தவறு நேர்ந்தாலும் நாம் பெரிதும் நேசிப்பவரை அது பாதிக்கக்கூடும். நல்வாய்ப்பாக, திட்டமிட்ட முன்தயாரிப்புடன், கவனத்தோடு இருந்தால் பெரிய தவறுகள் நேராமல் தவிர்க்கலாம். ஆயுள் காப்பீடு பாலிசி தொடர்பாக பெரும்பாலும் நேரக்கூடிய தவறுகள் என்னென்ன எனப் பார்ப்போம்.

ஆயுள் காப்பீடு பாலிசியில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
பாலிசி எடுக்காமல் விட்டுவிடுவது

ஆயுள் காப்பீடு பாலிசியைப் பொறுத்தவரை, செய்யக்கூடிய மிகமோசமான தவறு, எந்தவிதமான பாலிசியும் எடுக்காமல் விட்டுவிடுவது. எடுக்காமல் விட்டுவிட்டு, பின்னர் அதற்காக விதவிதமான சாக்குபோக்குகள் சொல்லிக்கொண்டிருப்பதைக் காணலாம். மனைவி, குழந்தைகளுடன் இருக்கும் இளம் வயதுக்காரர், திடீரென  இறந்துபோவதை பலமுறை கேள்விப்பட்டிருப்போம். அவர் ஆயுள் காப்பீடும் எடுத்திருக்க மாட்டார். அந்தச் சூழலில், அந்த திடீர் இழப்பைத் தாங்கமுடியாமல் தவிப்பதோடு மட்டுமல்லாமல், பெரும் பொருளாதாரச் சிக்கலிலும் அந்தக் குடும்பம் சிக்கித் தவிப்பதைக் காணமுடியும்.

குறைவான காப்பீட்டுத்தொகை

தேவைக்கேற்ப இல்லாமல் குறைவான தொகைக்குக் காப்பீடு எடுக்கும் தவற்றை பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள். காப்பீட்டுத்தொகை போதுமான அளவுக்கு இல்லாமல்போனால், எது தேவையோ அதை வாங்காமல் மலிவான ஒன்றை வாங்குவது போலாகிறது. தொடக்கத்தில், போதுமான காப்பீட்டுத்தொகைக்கு பாலிசி எடுத்திருந்தாலும்கூட அதை அவ்வப்போது மறுபரிசீலனை செய்யாவிட்டால் அதுவே நாளடைவில் குறைவான காப்பீட்டுத் தொகையாக மாற வாய்ப்புள்ளது. பணவீக்க மதிப்பு, பணி, சம்பள உயர்வு, வாழ்க்கைத் தரம் போன்றவை மாற்றமடைந்திருக்கலாம். வருமானமும் வாழ்க்கைத்தரமும் அதிகரித்த சூழலில் குடும்பத் தலைவர் திடீரென மரணிக்க நேர்ந்தால் அந்த வாழ்க்கைத் தரத்தைத் தொடர்வதற்கு அந்தக் காப்பீட்டுத் தொகை போதுமானதாக இருக்காது. அதன் காரணமாக, வீடு, கல்லூரிப் படிப்பு போன்றவற்றை இழந்து, பல ஆண்டுகள் நிதிப் பிரச்னையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.

திருமணம், குழந்தைப் பிறப்பு, அடமானக் கடனை அடைத்தல், பணி ஓய்வு போன்ற நிகழ்வுகள், காப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்யத் தூண்டும். ஒரு முழுமையான காப்பீடு என்பது பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதாக இருக்க வேண்டும். பாலிசி இன்னமும் பயன்பாட்டில் உள்ளதா? பயனாளிகள் தற்போது உள்ளனரா? யார் இந்த பாலிசியின் உரிமையாளர்? எனது தற்கால & எதிர்காலத் தேவைகளுக்கேற்ப சரியான தொகைக்கு காப்பீடு செய்திருக்கிறேனா? தேவையில்லாமல் பணம் கட்டுகிறேனா? காப்பீட்டு நிறுவனம் தற்போதும் நல்ல நிலையில் இயங்குகிறதா? அனைத்தும் சரியாக இருந்தால் அந்தப் பாலிசி எனது நிதி இலக்குக்குப் போதுமானதாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

ஆயுள் காப்பீடு பாலிசியில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

மலிவான பாலிசியைத் தேர்ந்தெடுத்தல்

அனைவருமே நல்ல காப்பீட்டைப் பெற விரும்புகிறார்கள். ஆனால், தேவைக்கேற்ற சரியான பாலிசியைத் தேர்ந்தெடுக்காமல் மிகக் குறைந்த பிரீமியமுள்ள பாலிசியைத் தேர்ந்தெடுத்தால் அது உங்களை (உங்கள் குடும்பத்தை) பின்னாளில் பெரிதும் பாதிக்கும். இன்ஷூரன்ஸ் முகவர் பாலிசிகளை ஒப்பிட்டு உங்களுக்குத் தேவையான சரியான பாலிசியை அதிக செலவின்றி செய்துகொடுப்பார்.
பாலிசி எடுக்குமுன் தயவுசெய்து இவற்றை சரிபார்க்கவும்:

எனது சூழலுக்கேற்ற சரியான பாலிசியைத் தேர்வு செய்திருக்கிறேனா?

இறப்பு ஈட்டுத்தொகை எனது குடும்பத்துக்குப் போதுமானதாக உள்ளதா?

இன்ஷூரன்ஸ் நிறுவனம் மிகவும் நல்ல முறையில் இயங்குகிறதா?

கோரிக்கைகளுக்கு (Claim) சரியாக செட்டில்மென்ட் செய்ததாக நல்ல மதிப்பு உள்ளதா?

அலுவலகம் தரும் ஆயுள் காப்பீட்டுப் பாலிசியை மட்டும் சார்ந்திருத்தல்

பணியாளர்களுக்கான சலுகையின் ஒரு பகுதியாக அலுவலகத்தில் வழங்கப்படும் குழு ஆயுள் காப்பீட்டு வசதியை பல பணியாளர்கள் பெற்றிருக்கக்கூடும். நம் குடும்பத்தைக் காக்க இந்தப் பாலிசி மிகவும் நல்ல விஷயம்தான் என்றாலும் இறப்பு இழப்பீடு பெரும்பாலும் குறைவானதாகவும் குடும்பத்துக்கு போதுமானதாக இல்லாமலும் இருக்கக்கூடும். பாலிசிக்கான கவரேஜும் அந்த நிறுவனத்தில் பணியாற்றும்வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். இத்தகைய சூழல் உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றாமல் விட்டுவிடக்கூடும். ஆனால், தனிப்பட்ட முறையில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆயுள் காப்பீடு, உங்கள் தேவைக்கேற்றதாகவும், உங்கள் ஆயுள் முழுக்க தொடர்வதாகவும் இருக்கும்.

மனைவிக்கு காப்பீடு செய்யத் தவறுவது

கணவன் தானே குடும்பத்துக்காகச் சம்பாதிப்பவர் என்று கணவன் பெயரில் மட்டுமோ அல்லது வேலைக்குச் செல்லும் மனைவியாக இருந்தால் மட்டும் மனைவிக்கும் சேர்த்தோ பாலிசி எடுக்கும் தவற்றை பலரும் செய்கிறார்கள். காப்பீடு என்பதை வருமானத்தின் மாற்று ஏற்பாடு என்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள். வீட்டு நிர்வாகத்தை மட்டும் கவனிக்கும் மனைவி எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கிறார் என்றும் சிந்திக்க வேண்டும். குழந்தைகளையும் முதியோர்களையும் அக்கறையோடு கவனித்துக்கொள்பவர் அவர் தானே? குடும்பத்தை நடத்திச்செல்பவர் அவர் தானே? துணி துவைப்பதும் வீட்டைப் பராமரிப்பதும் அவர்தானே? இதில், ஏதேனும் தவறு இருக்கிறதா? இந்த வேலைகள் வருமானத்தைத் தருவதில்லை எனினும் குடும்ப நலனுக்கு மிகவும் முக்கியமானவை. ஒருவேளை உங்கள் மனைவி இல்லாத நிலை ஏற்பட்டால் இவற்றுக்காக நீங்கள் வெளியே சென்று கூடுதலாக நிறைய செலவழிக்க வேண்டியிருக்கும். 

அடுத்த நடவடிக்கை

ஆயுள் காப்பீடு என்பது உங்களுடைய நிதி வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒன்றாகும். இதைச் செய்யத் தவறினால் விளைவு மோசமானதாக இருக்கும். காப்பீட்டோடு இணைந்திருந்தால் உங்களுடைய ஒட்டுமொத்த சூழலையும் மீட்டெடுக்க உதவும். எனவே, இன்டகிரேடட் (www.integratedindia.in) ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அதை எடுக்க பரிந்துரை செய்கிறது.