Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

ர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்கே பிரசாரம் செய்துவரும் மோடி, வழக்கம்போல ஒரு கருத்து முத்தை உதிர்த்திருக்கிறார். ‘‘பி.ஜே.பி எப்போதும் பெண்களுக்கு மரியாதை அளிக்கும். அதனால்தான், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரைப் பாதுகாப்புத்துறை அமைச்சராக்கி இருக்கிறோம்’’ என அவர் சொல்ல, ‘பாஸ்... நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு. வழக்கம்போல உளறிட்டீங்க’ என கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள். ‘விடுப்பா விடுப்பா’ என பி.ஜே.பி-க்கு வேறு சில ஐடியாக்கள் தருகிறேன் கோவாலுவாகிய நான்!

• ‘பாதுகாப்புத்துறை அமைச்சராக என்ன? கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமராக ஆக்கிய பெருமையே பி.ஜே.பி-க்கு உண்டு’ என்று பிரசாரம் செய்யலாம். 1996-ல் பிரதமராக இருந்த வாஜ்பாய் பெருந்தன்மையாக 13 நாள்களில் ராஜினாமா செய்ததால்தான், கர்நாடகாவின் தேவ கவுடா பிரதமரானார் என அடித்துவிடலாம்.

• கன்னட மக்களை மதிப்பதால்தான்... அதாவது கன்னட மக்களின் வாக்குகளை மதிப்பதால்தான், கர்நாடகாவில் பிறந்த காவிரியைக் கேட் தாண்டவிடாமல் சாக்கு சொல்லிச் சமாளித்துவருகிறோம்’ என்று பொய்... இதுல பொய் என்ன இருக்கு? என உண்மையைச் சொல்லிப் பிரசாரம் செய்யலாம்.

கம்பேரிஸன் கோவாலு!

• ‘அகண்ட பாரதத்தை அளவெடுக்கும் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள்களும் பெங்களூரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் இஸ்ரோவின் தயாரிப்புகளே! உங்கள் மண்ணில் பிறந்த பிள்ளைகளைத்தான் வானுயர வைக்கிறோம்’ என்று கண்கலங்கப் பேசினால் ஓட்டுகள் விழ வாய்ப்புண்டு.

• ‘தென்னிந்தியா தொடங்கி இந்தோனேஷியா வரை ஆண்ட பெருமை, மண்ணின் மைந்தர்களான சோழர்களுக்கே உண்டு’ என அவர் உரையாற்றலாம். வழக்கம்போல ‘தப்பா சொல்லிட்டீங்க, அது தமிழக அரசர்குலம்’ என யாராவது வந்து திருத்தினாலும் கண்டுக்காமல் போய்விடுவார்.

• ஐ.பி.எல் சீசன் இது. எனவே, ஓட்டுகளைக் கவர ‘எனக்கு மிகவும் பிடித்த அணி ஆர்.சி.பி-தான்’ என்று சொல்லி வைக்கலாம். கூடவே, ‘ஈ சாலா கவர்மென்ட் நமதே’ என்ற ஸ்லோகனையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஓவியம்:  பிரேம் டாவின்ஸி