Published:Updated:

பேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்!

பேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்!
பிரீமியம் ஸ்டோரி
பேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்!

டப்பிங் கலைஞர் சுப்புலட்சுமி சிவராமன் உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள் சாஹா படங்கள் : க.பாலாஜி

பேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்!

டப்பிங் கலைஞர் சுப்புலட்சுமி சிவராமன் உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள் சாஹா படங்கள் : க.பாலாஜி

Published:Updated:
பேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்!
பிரீமியம் ஸ்டோரி
பேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்!

திரையுலகினருக்கு சுப்புலட்சுமி சிவராமன்... மற்றவர்களுக்கு சுப்பம்மா... இப்படித்தான் அறியப்படுகிறார் டப்பிங் கலைஞர் சுப்புலட்சுமி. முன்னாள் காமெடி நடிகர் சிவராமனின் மனைவி. ரசிகர்களைச் சிரிக்கவைத்த சிவராமன், தன் மனைவிக்கும் மகன்களுக்கும் தீரா சோகத்தை நிரந்தரமாக்கிவிட்டுப் போனது துயரத்தின் உச்சம்.

‘`அவரை மாதிரி புருஷன் கிடைக்கிறது அபூர்வம். யார் கண்ணு பட்டுச்சோ... எனக்குக் கொடுத்து வைக்கலை....’’ - சோகம் இழையோடுகிற பேச்சைச் சட்டென நிறுத்திவிட்டு, நிகழ்காலத்துக்குள் வருகிறார்.

‘`விகடன் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்தான். விகடன் தயாரிப்புகளுக்கு டப்பிங்  பேச அடிக்கடி கூப்பிடுவாங்க. விஜய் டி.வி-யில போன வருஷம் முடிஞ்ச ‘தெய்வம் தந்த வீடு’ சீரியல்ல நடிகை ஓமணாவுக்கு ஆயிரம் எபிசோடு டப்பிங் பேசினது மறக்க முடியாதது...’’ என்கிற சுப்பம்மாவுக்கு 71 வயது. இந்த வயதிலும் குரலில் பிசிறு தட்டாதது ஆச்சர்யம்.

பேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்!

‘`காரைக்குடியில பிறந்து, அஞ்சாவது வரைக்கும் படிச்சேன். அப்பாவை விட்டுட்டு அம்மா தனியாத்தான் வாழ்ந்தாங்க. எங்களைக் காப்பாத்த அவங்களுக்கு வழியில்லை. பத்து வயசுலயே எங்கம்மா என்னை நாடக கம்பெனியில சேர்த்துவிட்டாங்க. `வைர நாடக சபா’ உள்பட அந்தக் காலத்துல பிரபலமா இருந்த நிறைய சபாக்களின் நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். ஒரு நாடகத்துல நடிச்சா பதினஞ்சு ரூபா கிடைக்கும்.

என் கணவர் சிவராமன் அந்தக் காலத்துல காமெடியனா பிரபலமா இருந்தார். ‘தூறல் நின்னுப் போச்சு’ உள்பட 500-க்கும் மேலான படங்களில் நடிச்சிருக்கார். நாங்க காதலிச்சுக் கல்யாணம் செய்துகிட்டோம். கல்யாணத்துக்குப் பிறகு நானும் படங்களில் நடிச்சுட்டிருந்தேன்.

நடிச்சுக்கிட்டே டப்பிங்கும் பேசிட்டிருந்தேன். அப்பல்லாம் மொத்தமே 50 பேர்தான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தோம். எல்லாருமே ரொம்ப பிஸியா இருந்தோம். ஹீரோயின் கேரக்டர் தவிர மற்ற கேரக்டருக்கெல்லாம் நாங்களே பகிர்ந்து மாறி மாறிப் பேசுவோம். மெள்ள மெள்ள முழுநேர டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவே மாறினேன். படங்கள், சீரியல்னு ஆரம்ப காலத்துல வாழ்க்கை நல்லாதான் போயிட்டிருந்தது...’’ - விழிகளில் உறைந்திருந்த நீர், உருகி வழிய இந்த முறை அதை அடக்க முடியாதவராகத் தொடர்கிறார் சுப்புலட்சுமி.

‘`எந்த மாதிரியான வாய்ஸ் கொடுத்தாலும் எங்களால பேச முடியும். ஆனாலும், எங்களை நம்பி வாய்ப்பு கொடுக்கப் பலரும் தயாரா இல்லை. இன்னிக்குக் கம்ப்யூட்டர் வசதியால எப்படிப்பட்ட குரலையும் விரும்பற மாதிரி மாத்திக்க முடியுது.எங்க காலத்துல அதெல்லாம் கிடையாது. பத்து டயலாக்கை நாங்க சரியா பேசியிருப்போம். கூடப் பேசறவங்க ஒரு டயலாக்கைத் தப்பா சொல்லிட்டாலும் நாங்க மறுபடி அந்தப் பத்து டயலாக்கையும் முதல்லேருந்து பேசியாகணும்.

டப்பிங் உலகம் இன்னிக்கு ரொம்பவே மாறிப்போச்சு. அதையும் மீறி நாங்க வேணும்னு கேட்கறவங்க ரொம்பக் குறைவு. அப்படிக் கூப்பிடறவங்களாலதான் என்னை மாதிரி ஆளுங்களுக்குப் பிழைப்பு ஓடுது. ஷார்ட் ஃபிலிம்களுக்குப் பேசக் கூப்பிடறாங்க. ஒரு ஷார்ட் ஃபிலிமுக்குப் பேசினா ஆயிரம் ரூபாய் வரும். மாசத்துக்கு ரெண்டு அல்லது மூணு வாய்ப்புகள் வரும். இதுக்கிடையில டி.வி சீரியல்ல சின்ன பிட்டுக்குப் பேச கூப்பிடுவாங்க. ஒண்ணுமே இல்லாம மாசக்கணக்குல இருந்திருக்கேன். அப்பல்லாம் கையில, காதுல கிடக்கிற தங்கத்தை அடகு வெச்சோ, வித்தோ சாப்பிட வேண்டியதுதான். என் ரெண்டு பிள்ளைங்களும் தங்கமானவங்க. ரெண்டு பேருமே என்னை அவங்களோடு வந்து இருக்கச் சொல்றாங்க. என் வைராக்கியம் அதுக்கு இடம்கொடுக்கலை. எனக்கு மட்டும் சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு என் கணவர் நினைவுகளைச் சுமந்துகிட்டு இந்த வாடகை வீட்டுல வாழ்ந்திட்டிருக் கேன். பிள்ளைங்க அடிக்கடி வந்து பார்த்துக்கிறாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்!

என் கணவர் இறந்தபோது அவருக்கு 43 வயசு. ஹார்ட் அட்டாக். அவருக்கு என்மேல அவ்வளவு அன்பு. அவர் போன போது கையில ஒத்தை ரூபா இல்லை.  சல்லிக்காசு சேர்த்து வைக்கலை. ரெண்டு புள்ளைங்களுக்கும் அறியாத வயசு. ஒரு மாசம் அந்த அதிர்ச்சியிலேருந்து மீள முடியாம வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். அப்புறமும் எத்தனை நாளைக்கு அப்படியே இருக்கறது? பிள்ளைகளைக் காப்பாத்தணுமேனு வெளியில வந்தேன்.  டப்பிங் பேசி சம்பாதிச்சுதான் அவங்களை ஆளாக்கினேன்.  என் கணவர் இறந்தபோது அவரை வெச்சுப் படம் பண்ணினவங்களோ, அவர் கூட நடிச்சவங்களோ மனசு வெச்சிருந்தா எனக்கும் என் பிள்ளைங்களுக்கும் ஒரு தொகையைக் கொடுத்திருக்கலாம். அவங் களும் கொடுக்கலை; எனக்கும் கேட்கணும்னு  தோணலை.

இன்னிக்கு என் மகன் ஆதேஷ் சினிமா வாய்ப்புகளுக்கு முயற்சி பண்ணிட்டிருக்கான். ‘மரகத நாணயம்’, ‘முண்டாசுப்பட்டி’னு சில படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கான். இன்னும் பெரிய வாய்ப்புகள் வரலை. இந்த நிலையில நான் உதவினு போய் நின்னா, என் மகனுடைய எதிர்காலம் பாதிக்கப்படுமோனு அதைத் தவிர்க்கறேன். என் கணவர் சினிமாவில் பெரிய இடத்துக்குப் போவார், வாழ்க்கையில எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்துடும்னு நினைச்சிட்டிருந்த நேரத்துல அவரே இல்லாம போயிட்டார். இன்னிக்கு அவருடைய கனவுகளை நனவாக்க என் மகன் முயற்சி பண்ணிட்டிருக்கான்.  என் மகன்களுடைய வாழ்க்கையாவது நல்லாருக்கணும்கிறதுதான் என் பிரார்த்தனை.’’

கணவரின் படத்தை வெறிக்கிறது சுப்பம்மாவின் பார்வை. அந்தப் பார்வையில் ஆயிரமாயிரம் அன்பும் அர்த்தங்களும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism