Published:Updated:

பட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்! - பத்மா பார்த்தசாரதி

பட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்! -  பத்மா பார்த்தசாரதி
பிரீமியம் ஸ்டோரி
பட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்! - பத்மா பார்த்தசாரதி

நீங்களும் செய்யலாம்சாஹா, படங்கள் : கே.மணிவண்ணன்

முத்து, மணி, கற்கள் என எல்லாவற்றிலும் நகைகள் கிடைக் கின்றன. ஆனாலும், உடைகளுக்கு மேட்ச்சாக அதே கலர்களில், அதே டிசைன்களில் செய்ய முடியுமா என்பது சந்தேகமே. பட்டு நூல் எனப்படுகிற சில்க் த்ரெட் நகைகளில்  இது சாத்தியம்.

பிங்க் புடவை, நீல பார்டர், நடுநடுவே கோல்டன் புட்டாக்கள் என்றால், அதே காம்பினேஷனில் செய்து வாங்கலாம். அதே பிங்க்கில் சல்வார், மல்ட்டி கலர் துப்பட்டா என்றால், அந்த காம்பினேஷனில் இன்னொரு செட் சில்க் த்ரெட் ஜுவல்லரி செய்து போட்டு அழகு பார்க்கலாம்.

கையைக் கடிக்காத பட்ஜெட்டில் கிடைக்கிறது; எடை குறைவு என்பதால் உடலை உறுத்தாது; பளீரென்ற தோற்றம்... இப்படி பட்டு நூல் நகைகளின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பட்டு நூல்களில் ஜிமிக்கி, வளையல்களை மட்டுமே பார்த்தவர்களுக்கு நெக்லஸ், நெத்திச்சுட்டி, கொண்டை வளையம், சேலை பின் என ஏகப்பட்ட வெரைட்டி செய்து அசத்துகிறார் கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த பத்மா பார்த்தசாரதி.

பட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்! -  பத்மா பார்த்தசாரதி

``நிறைய படிக்கணும்னு ஆசை இருந்தாலும், பெண் குழந்தைகளை அதிகம் படிக்கவைக்கக் கூடாதுங்கிற குடும்பச்சூழல்ல வளர்ந்ததால அது நடக்கலை. அஞ்சாவது வரைதான் படிக்க முடிஞ்சது. அதனாலேயே நிறைய கைவேலைகளைக் கத்துக்கிறதுல ஆர்வமானேன். அந்தந்த சீஸன்ல பிரபலமா இருக்கிற கைவினைக் கலைகளைத் தேடிப் போய் கத்துப்பேன். அந்த வகையில இப்போ ஃபேஷன்ல இருக்கிற சில்க் த்ரெட் நகைகள் செய்து ஹோல்சேலில் கடைகளுக்கு சப்ளை பண்ணிட்டிருக்கேன். வீட்டுக்காரர் மார்க்கெட்டிங் துறையில இருக்கிறதால நான் பண்ற பொருள்களை மார்க்கெட் பண்றதும் சுலபமா இருக்கு. இன்னிக்கு நான் நாலு பேருக்கு வேலை கொடுக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன். விருப்பமிருக்கிறவங்களுக்கு இந்த பிசினஸ்ல வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு...'' - உற்சாக அறிமுகம் தருகிற பத்மா, ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டி வரவேற்கிறார்.

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

சில்க் த்ரெட் எனப்படுகிற பட்டு நூல் (எல்லா கலர்களிலும்), பிளாஸ்டிக் வளையல், ஃபேப்ரிக் கம், ஸ்டோன் ரோல், கோல்டன் கலர் பால் செயின், நெக்லஸ் மோல்டு, ஜிமிக்கி மோல்டு, கத்தரிக்கோல், பெயின்ட், கேன்வாஸ் பேப்பர் (சட்டை காலர்களின் வைக்கப்படுகிற பேப்பர் அட்டை) என எல்லாவற்றுக்கும் சேர்த்து 1,000 ரூபாய் போதும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்! -  பத்மா பார்த்தசாரதி

விற்பனை வாய்ப்பு? லாபம்?

மொத்த விலையில் விற்பதாக இருந்தால் ஜிமிக்கிகளை 25 ரூபாயிலிருந்து விற்கலாம். ஜிமிக்கியின் அடிப்பாகம் மட்டும் கேட்பவர்களும் இருக்கிறார்கள். மோல்டில் நூல் மட்டும் சுற்றிக்கொடுத்தால் போதும் எனக் கேட்பவர்களுக்கு 15 ரூபாய்க்குக் கொடுக்கலாம். பாதிக்குப் பாதி லாபம் பார்க்கலாம்.

சில்க் த்ரெட் நகைகளைப் பொறுத்தவரை ஐந்து, பத்து எனச் செய்யும்போது லாபம் குறைவாகவே வரும். நூற்றுக்கணக்கில் செய்கிறபோது லாபம் அதிகரிக்கும். ஃபேன்ஸி ஸ்டோர்களில் மொத்தமாக ஆர்டர் பிடிக்கலாம். புடவைக் கடைகளில் பேசி, புடவைகளுக்கு மேட்ச்சிங்காக அவற்றுடன் செட்டாக வைத்து விற்கும்படி செய்யலாம். பியூட்டி பார்லர்களில் பேசி, மணப்பெண் அலங்காரத்தின்போது தேவைப்படுகிற நகைகளுக்கும் ஆர்டர் எடுக்கலாம்.

கடன் வசதி?

ஒரே ஒரு நூல்கண்டு, ஒரு ஜோடி வளையல் என மிகமிகக் குறைந்த முதலீட்டில் செய்து பழகலாம். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருந்தால் உள்கடன் பெற்று பிசினஸை விரிவுபடுத்தலாம்.

பயிற்சி?

சென்னையிலும் கிருஷ்ணகிரியிலும் மூன்று நாள்கள் பயிற்சியில் அத்தனையையும் கற்றுக் கொள்ளலாம். வளையல், நெக்லஸ், ஜிமிக்கி, தோடு, நெற்றிச்சுட்டி, தலைக்கானது என எல்லாவற்றுக்குமான மெட்டீரியல்களுடன் சேர்த்துப் பயிற்சிக் கட்டணம் 1,500 ரூபாய்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism