Election bannerElection banner
Published:Updated:

'வாயை கட்டினால்... நோயை விரட்டலாம்!'

'வாயை கட்டினால்... நோயை விரட்டலாம்!'

'வாயை கட்டினால்... நோயை விரட்டலாம்!'
'வாயை கட்டினால்... நோயை விரட்டலாம்!'

''உள்ளம் பெருங்கோயில்  ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே

என, பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்னரே ஆன்மிகத் தையும் ஆரோக்கியத்தையும் எளிமையாக ஒப்பிட்டுப் பாடி யிருக்கிறார் திருமூலர்!''- அகலாத ஆச்சரியத்துடன் பேசும் டாக்டர் கீதா சுப்ரமணியன், மருத்துவத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்ந்த அனுபவமும் பயிற்சியும் பெற்றவர்.  தென் இந்தியாவின் முதல் மூத்த பெண் இருதய நோய் நிபுணர்! இவரது ஆன்மிக ஈடுபாடும் தமிழ் ஆர்வமும் வியப்பிற்குரியது.

பழந்தமிழ்ப் பாடல் வரிகளின் துணையுடன் எளிய தமிழில் மருத்துவம் பற்றி இங்கே உரையாடுகிறார் டாக்டர் கீதா சுப்ரமணியன்.

''உனக்குள் 'சீவன்’ என்ற சிவன் இருக்கின்றான். ஆலயம் சென்று இறைவனுக்காக ஆறு கால பூஜைகளை எப்படிச் செய்கிறோமோ, அதேபோல், உடல் என்னும் ஆலயத்தின் ஆரோக்கியத்தை சரிவரப் பாதுகாப்பதுதான், உயிர் என்னும் சீவனுக்கு நீ செய்யும் பூஜை! என்கிறார் திருமூலர்.

மனம், புத்தி, உடல், உயிர், ஆன்மா இவை அனைத்தும் ஒன்றையன்று சார்ந்தவை. இவற்றை ஒரே சீராக வைத்துக் காக்கக்கூடியவை ஐம்புலன்கள்தான். இந்த ஐம்புலன்களையும் விளக்குகள் போல் பிரகாசமாய் ஒளிரச் செய்யவேண்டும்.

##~##
வாய் என்னும் கோபுர வாயிலின் வழியாக, கண்டதையும் சுவைத்து, மனம் போன போக்கில் வாழ்பவர்களுக்கு, வியாதிகள் வரிசைகட்டி வருவதுடன், உடல் 'இருண்ட கோயிலாக’ மாறிவிடும். இதனால் பாழடைந்துபோன அந்தக் கோயிலில் இருந்து 'சீவன்’ என்னும் உயிரும் வெளியே சென்றுவிடுகிறது - இப்படி ஆன்மிக தத்துவத்தையே மனித வாழ்க்கையின் தத்துவ மாக, ஆழமான கருத்துக்களுடன் விளக்குகிறது இந்தப் பாடல் வரிகள்.

'ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் பிராண சக்தியாகத் திகழ்வதுபோல், 'லப் டப்’ என்ற துடிப்பு உயிரின் ஓசையாக வெளிப்படுகிறது. 'பிறப்பு - இறப்பு என்ற இரு வார்த்தைகளுக்கும் இடைப்பட்டதுதான் இந்த மனித வாழ்க்கை’ என்பதை நமக்குச் சொல்லாமல் சொல்கிறது!

இதயத் துடிப்பு, நிமிடத்திற்கு 72 முறை இருப்பது ஆரோக்கியம். ஆனால், இன்றைய அவசர உலகில், கவலை - பரபரப்புடன் மனிதன் சுழன்றுகொண்டிருக்கையில், இதயத்தின் துடிப்பும் அளவுக்கு மீறி எகிறிக் கொண்டிருக்கிறது. விளைவு... ஓய்வே இல்லாத இதயம் களைத்துப் போய் தன் பணியை சீக்கிரமே முடித்துக்கொள்ள நேரம் பார்க்கிறது. அதனால்தான் ஞானியரும் யோகியரும் தியானம், யோகா மூலமாக இதயத் துடிப்பின் வேகத்தை 40-க்கும் கீழாகக் கொண்டுவந்து, இதயத்துக்கு அதிகப்படியான ஓய்வு தந்து உயிர் வளர்த்தனர்.

'உடலில் உள்ள ஆறு சக்கரங்களும் ஆறு நரம்பு மண்டலங்கள். அவற்றைத் தொடர்ந்து கட்டுப்படுத்தும்போது, நம் மூலாதாரக் கனல் நன்கு ஒளிர்ந்து மேல் நோக்கி சென்று மூளையின் சகஸ்ராரத்தில் சேர்ந்து, உயிரெனும் ஒளி வளர்க்கும் அமுதத்தை உருவாக்குகிறது. நமது மூளையின் அடியில் உள்ள ஹைபோதெலாமஸ் என்ற பகுதியும், பிட்யூட்டரி நாளமில்லாச் சுரப் பியும், பைனியல் பாடி (மூன்றாவது கண்ணின் மிச்சம்) என்னும் சுரப்பியும் இணைந்து செயல் பட்டு உடலில் உள்ள மற்ற நாளமில்லாச் சுரப்பி களின் செயல்பாட்டினைச் சீரமைத்து நம்மை நீண்டகாலம் வாழ வைக்கின்றன.

'வாயை கட்டினால்... நோயை விரட்டலாம்!'

நமது மூளையில் இருந்து வரும் சமிக்ஞைகள் நரம்புகளின் வழியாகப் பாய்ந்து நமது இதயத் துடிப்பின் வேகம், ரத்தக் கொதிப்பின் அளவு ஆகியவற்றை நிர்ணயிக்கின்றன. இதில் ஹைபோதெலாமஸும் பிட்யூட்டரியும் பெரும் பங்கு வகிக்கின்றன. மூளையில் கவலை ஏற்பட்டால் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவு எல்லாம் தானாகவே கூடிவிடுகிறது. ஆக, உடலின் ஆரோக்கியம் இதயத்தையும், மூளையையும் சார்ந்தே இருக்கிறது.

நாம் அறியவேண்டிய ஆரோக்கிய ரகசியம் எவ்வளவு ஆழமானது, பரந்து விரிந்தது என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டால், நம் உடல், உயிர் மீதே ஒருவித பயபக்தி ஏற்படும். நமக்காக 24 மணி நேரமும் விடாது பணி செய்யும் நம் உடலையே கோயிலாக எண்ணித் தொழலாம்!

5,000 ஆண்டுகளுக்கு முன்பே சாத்வீகம், தாமசம், ராஜசம் என உணவு வகைகளை நுணுக்கமாகத் தரம் பிரித்துள்ளது பகவத் கீதை.

'வாயை கட்டினால்... நோயை விரட்டலாம்!'

இயற்கையாகக் கிடைக்கும் காய், கனிகளே சாத்வீக உணவு வகைகள். மூளை, இதயத்துக்கு இதமான இந்த உணவு வகைகளால், நம் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.

மேல்தட்டு மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொரித்த கொழுப்பு வகை உணவுகள், உப்பு, சர்க்கரை நிரம்பிய பண்டங்கள் 'ராஜசம்’ என்றழைக்கப்படுகின்றன. இவ்வகை உணவு களால், உடலின் எடை அதிகரிப்பதோடு, அதீத கோபம், படபடப்பு என்று உடலும், மனமும் ஒருசேர பாதிப்புக்கு உள்ளாகிறது. அதனால்தான் 'வாயைக் கட்டினால், நோயைக் கட்டலாம்’ என்கிறது பழமொழி!

இது தவிர, அதீத காரம், உப்பு மற்றும் கெட்டுப்போன பழைய உணவு வகைகள்தான் 'தாமசம்’! இவ்வகை உணவுகள், சுறுசுறுப்பைக் குறைத்து, மந்த புத்தியாக்கி, பல்வேறு நோய் களுக்கு வழி வகுத்துவிடும்.

சுருக்கமாகச் சொன்னால், 'உணவுதான் உயிர்!’ என்ற ஒப்பற்ற தத்துவத்தின் வழி மனிதன் நடப்பதற்கான பாதையை வகுத்து இருக் கிறது பகவத் கீதை!

நோயின் தாக்கம் அதிகமான பிறகே ஒருவர் மருத்துவரைத் தேடி வருகிறார். அது கூடாது. ஆரம்ப காலத்திலேயே மருத்துவரை நாடி, உடலில் தீங்கு வருமுன் காப்பது நல்லது.

'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு’

- என்ற வள்ளுவன் வாய்மொழிக்கு ஏற்ப உடலின் இயல்புக்கு மாறுபாடு இல்லாத உணவைத் தேர்ந்தெடுத்து அளவோடு உண்ணவேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு,  உடல் நலம், மன நலம் இரண்டும் முக்கியம். இதைத்தான் மதங்களும், பழந்தமிழ் இலக்கியங்களும் அறி வுறுத்துகின்றன. வைத்தீஸ்வரன், மருந் தீஸ்வரன், ஹிருதயபாலீஸ்வரன், தன்வந்திரி... என கடவுளர்கள் வழியா கவும் ஆரோக்கியம் பேணியவர்கள் நாம். மனிதனுடைய எண்ணத்துக்கு மிகுந்த வலிமை உண்டு. அதிலும் பலர் சேர்ந்து ஒன்றாக பிரார்த்தனை செய்யும் போது சக்தி மிகுந்த அதிர்வு அலை ஏற்படுகிறது. இதன் விளைவாக நம் உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பி மற்றும் மூளையில் உருவாகும் சில ரசாயன மாறுதல்களினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

எல்லா மதங்களுமே அன்பு, கருணை எனும் தங்க நூலிழை இணைத்து ஆரோக்கிய நல் வாழ்வையே போதிக்கின்றன. பைபிளில் 'ஏசுவின் ஆடையைத் தொட்டாலே நோய் குண மாகிவிடும்’ என்று பார்க்கிறோம்.

குர்ஆனும்கூட, ஆரோக்கிய வாழ்வுக்கும் கருணைக்கும் மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. அதன்படி நம்மை நாம் வழிப்படுத்திக்கொண்டால், எதிர்காலம் புதிர் காலமாக இல்லாமல் நம்பிக்கை வெளிச்சம் தரும் புது வருடத்துக்கான புதிய வழிகாட்டியாக அமையும்!''- நிறைவாக முடிக்கிறார் டாக்டர் கீதா சுப்ரமணியன்.

- த.கதிரவன்
படங்கள்: வி.செந்தில்குமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு