Published:Updated:

கோப்பையைப் பகிர்ந்த இந்தியா பாகிஸ்தான் -ரசிகர்கள் ஏமாற்றம்! # INDvPAK #ACT2018

கோப்பையைப் பகிர்ந்த இந்தியா பாகிஸ்தான் -ரசிகர்கள் ஏமாற்றம்! # INDvPAK #ACT2018
கோப்பையைப் பகிர்ந்த இந்தியா பாகிஸ்தான் -ரசிகர்கள் ஏமாற்றம்! # INDvPAK #ACT2018

மஸ்கட் நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் கோப்பையைப் பகிர்ந்துள்ளன. 

Photo Credit: Twitter/ Hockey India‏

 5 -வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி  ஹாக்கி தொடர் மஸ்கட் நகரில் நடைபெற்றது. அக்டோபர் மாதம் 18-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில்,  தொடரை நடத்தும் ஓமன் அணி உட்பட ஆசியாவின் சிறந்த 6 அணிகள் மோதின. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. பாகிஸ்தான் 2 -ம் இடம் பிடித்தது. அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா ஜப்பான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் மலேசிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான்  இறுதிப் போட்டியில் மோதும் ஆட்டத்தை அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 

ஆனால் , மஸ்கட் நகரில் பெய்த கன மழையால் இறுதி ஆட்டம் பாதிக்கப்பட்டது. கன மழை தொடர்ந்ததால், இறுதியில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதோடு, கோப்பையும் இரு அணிக்கும் வழங்கப்பட்டது. இதுவரை இந்தக் கோப்பையை இந்தியா, மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை கைப்பற்றியுள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாகும். லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. இதையடுத்து இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை மீண்டும் வெல்லுமா அல்லது பாகிஸ்தான் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் மழையால் ஏமாற்றம் அடைந்தனர். 

முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்துக்கான போட்டியில் மலேசிய அணி,  ஜப்பான் அணியை வீழ்த்தியது.