Published:Updated:

அர்ஜுனா விருது பெற்ற சர்வதேசக் குத்துச்சண்டை வீரர் - சாலையில் குல்ஃபி விற்கும் அவலம்

அர்ஜுனா விருது பெற்ற சர்வதேசக் குத்துச்சண்டை வீரர் - சாலையில் குல்ஃபி விற்கும் அவலம்
அர்ஜுனா விருது பெற்ற சர்வதேசக் குத்துச்சண்டை வீரர் - சாலையில் குல்ஃபி விற்கும் அவலம்

ஹரியானாவைச் சேர்ந்த சர்வதேச குத்துச்சண்டை வீரர் சாலையில் குல்ஃபி விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். 

அர்ஜுனா விருது பெற்ற சர்வதேசக் குத்துச்சண்டை வீரர் - சாலையில் குல்ஃபி விற்கும் அவலம்

ஹரியானா மாநிலம் பிவாரி பகுதியைச் சேர்ந்தவர் குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார். இவர் குறுகிய காலம் மட்டுமே விளையாடி இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 17 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதங்கங்களை வென்றுள்ளார். இவரின் சிறந்த விளையாட்டுத் திறமையை கவுரவிக்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியுள்ளது மத்திய அரசு. 

இதன்பின் ஒரு சாலை விபத்தினால் இவரால் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போயுள்ளது. தினேஷ் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் அவருக்கு விபத்து ஏற்பட்டபோதும் அவரின் தந்தை பலரிடம் கடன் வாங்கியதால், அதைத் திருப்பி செலுத்த முடியாமல் தற்போது சாலையில் நின்று குல்ஃபி விற்றுக்கொண்டிருக்கிறார் இந்தக் குத்துச்சண்டை வீரர். 

அர்ஜுனா விருது பெற்ற சர்வதேசக் குத்துச்சண்டை வீரர் - சாலையில் குல்ஃபி விற்கும் அவலம்

இது பற்றி தினேஷ் குமார் பேசும்போது, ``நான் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளேன். ஒரு விபத்தினால் தொடர்ந்து என்னால் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டது. என் தந்தை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவே நான் குல்ஃபி விற்கிறேன். முன்பு இருந்த மத்திய அரசும் தற்போதுள்ள உள்ள அரசும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. இனிமேலாவது எனக்கு உதவி செய்து ஒரு நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும். பல வீரர்களைச் சர்வதேசப் போட்டிகளுக்காகத் தயார் செய்யும் திறன் என்னிடம் உள்ளது. எனக்கு உதவிகள் கிடைத்தால் நான் நிச்சயம் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார். 

தினேஷ் பற்றி அவரின் பயிற்சியாளர் விஷ்ணு பவான் கூறுகையில், `` மிகவும் வேகமாகக் குத்துச்சண்டை வீரராகி ஜூனியர் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவர் தினேஷ், அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது விளையாட முடியாத சூழ்நிலையில் உள்ளார். அரசு அவருக்கு உதவி செய்தால் மட்டுமே அவரால் வாழ முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.