Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

2015-ம் ஆண்டு சென்னைப் பெருவெள்ளத்தின் போதும், அதற்கடுத்த ஆண்டு வந்த வர்தா புயலின் போதும்... யார், என்ன, ஏன் என்கிற கேள்விகளே எழுப்பாமல் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ளவும் தோள் கொடுக்கவும் துணைபுரிந்தவை ஸ்மார்ட்போன்களிலுள்ள ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகள். மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் சரியான நேரத்தில், சரியான நபர்களுக்குச் சென்று சேர்ந்தன;

நமக்குள்ளே...

எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இதற்காகத்தான் சிஎன்என் நிறுவனம் ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ என்கிற அங்கீகாரத்தைச் சென்னைக் குடிமக்களுக்குக் கொடுத்தது, அன்று. ஆனால், சரியாகத்தான் செயல்படுகிறோமா என்று அழுத்தமாகக் கேள்வி எழுப்பவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம், இன்று.

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும், தங்களை ஒரு ‘சிட்டிசன் ஜர்னலிஸ்ட்’ என்றே நினைத்து சமூகப் பொறுப்புடன் செயல்படுவதில் தவறில்லை. ஆனால், போனுக்குள் வந்துவிழும் வாட்ஸ்அப் செய்திகளை, கண்களை மூடிக்கொண்டு உடனடியாகக் குறைந்தபட்சம் நூறு பேருக்காவது ஃபார்வர்டு செய்யாவிடில் பலருக்கும் பொழுது விடிவதில்லை என்பதுதான் வேதனை. அது உண்மையா, பொய்யா... படம் ஒரிஜினலா, போட்டோஷாப் செய்யப்பட்டதா... உள்நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் ஆராயும் நேரமோ, பொறுமையோ அவர்களுக்கு இருப்பதில்லை.

இப்படிப்பட்ட பகிர்தல்களில் உயிர்பறிக்கும் வதந்திகள், உணர்வுகளைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை உருவாக்கக்கூடிய தகவல்கள் எல்லாம் பரவுவது, நாம் நாகரிக சமூகம் என்று சொல்லிக்கொள்வது சரிதானா என்று யோசிக்க வைக்கிறது.

சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள கோயிலுக்குச் சென்ற சென்னையைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவரையும், `பிள்ளை பிடிக்கும் கும்பல்’ என்று சொல்லி, கிராமத்தினர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம்... அதிர்ச்சியின் உச்சம். இதில், 65 வயது மூதாட்டி ஒருவரின் உயிர் பறிபோனது கொடுமையின் உச்சம்.

குழந்தைகளைக் கடத்தும் கும்பல் என்ற தலைப்புடன் வாட்ஸ்அப்பில் வலம்வரும் வீடியோக்கள் பலவற்றிலும் இருப்பவர்கள்... மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதான பிச்சைக்காரர்களே. கடலுக்குள் ஒரு மூதாட்டியைப் போட்டுவிடுவதாகச் சில இளைஞர்கள் பயமுறுத்தும் வீடியோவும் அத்தகையதே. இவற்றையெல்லாம் நம்பி, சட்டத்தைத் தங்கள் கைகளில் பொதுமக்கள் எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கும் இந்தக் குரூர நிலை ஆபத்தானது.

ஊடக நிறுவனங்களைப்போல ஒவ்வொரு தகவலையும் அலசி ஆராய்ந்து உண்மையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான நேரமும் பொருள் வசதியும் அனைவரிடமும் இருக்காதுதான். அதற்காக, ஃபார்வர்டு பட்டனை அந்தந்த நொடியே அழுத்துவதும் சரியாக இருக்காதுதானே? குறைந்தபட்சம், நாம் அனுப்பும் / ஃபார்வர்டு செய்யும் தகவல் உண்மையா எனச் சரிபார்க்கும் அறமேனும் நமக்கு வேண்டும்தானே!

உரிமையுடன்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism