Published:Updated:

அரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்! - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா

அரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்! -  பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா
பிரீமியம் ஸ்டோரி
அரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்! - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா

அக்கா தங்கை அசத்தல் சனா, படம் : சொ.பாலசுப்ரமணியன்

அரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்! - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா

அக்கா தங்கை அசத்தல் சனா, படம் : சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
அரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்! -  பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா
பிரீமியம் ஸ்டோரி
அரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்! - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா

“நாங்க நாலு பொண்ணுங்க. இதுக்காக அம்மாவும் அப்பாவும் ஃபீல் பண்ணதே இல்ல. எங்க எல்லோரையுமே திறமையான பொண்ணுங்களா வளர்த்தாங்க. ரெண்டு அக்காக்களும் வேறு துறைகளுக்குப் போயிட் டாங்க. நானும் மாயாவும் சினிமாவைத் தேர்ந்தெடுத்துட்டோம்...” - உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்கள், ஸ்வாகதா - மாயா சகோதரிகள். மாயா, பலருக்கும் பரிச்சயமான முகம். ஸ்வாகதா, பத்து வருடப் போராட்டத்துக்குப் பிறகு ‘கரு’ படத்தின் ‘ஆழாலிலோ’ பாடல் மூலம் பாடகியாக இடம்பிடித்திருக்கிறார்,

“நாங்க பிறந்து வளர்ந்து எல்லாம் மதுரை. சினிமாவுல நானும் தங்கச்சியும் ஓடிக்கிட்டு இருக்கிறதுக்குக் காரணம் எங்க ஃபேமிலியும் டீச்சர்ஸும் கொடுத்த சப்போர்ட்தான். சின்ன வயசுலேயே பாட்டு கிளாஸுக்கு அனுப்பி வெச்சாங்க. என் குரு விஜயலட்சுமி மேடம் என் மேலே தனி கவனம் செலுத்தி, பாட சொல்லிக்கொடுத்தாங்க...” - ஸ்வாகதா சொல்லிமுடிக்க, மாயா தொடர்கிறார்.

“அதே பாட்டு கிளாஸுக்கு அப்பா என்னையும் அனுப்பி வெச்சார். ஆனா, நான் கிளாஸுக்குப் போனாலே தூங்கிடுவேன். இவதான், அருமையா பாடக் கத்துக்கிட்டா. ஸ்கூல், காலேஜ்ல படிக்கிறப்போ பாட்டுப் போட்டியில கலந்துக்கிட்டு நிறைய பரிசு வாங்கியிருக்கா...” - அக்காவைப் பற்றிப் பெருமையாகச் சொல்கிறார் மாயா.

“சும்மா சொல்றா... மாயாவும் ரொம்ப நல்லா பாடுவா. அவளுக்குள்ள இன்னும் பல திறமைகள் இருக்கு. இவளுடைய மேடை நாடகங்களைப் பார்த்து நான் மிரண்டு போயிருக்கேன். இவளுக்கு டைரக்டர் ஆகணும்கிற ஆசையும் இருக்கு. அந்தப்  படத்துக்கு நான்தான் மியூசிக் டைரக்டர்!” - செல்லம் கொஞ்சுகிறார், ஸ்வாகதா.

அரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்! -  பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா

“புல்லரிக்குது... இவ என்னைப் பத்தி இவ்ளோ புகழ்ந்து பேசுறது” என மாயா பார்க்க, ஸ்வாகதா தொடர்கிறார்.

“எப்பவுமே நாங்க டாம் அண்டு ஜெர்ரி சிஸ்டர்ஸ்தான். ஆனா, ஒருத்தரையொருத்தர் எப்போவும் விட்டுக்கொடுத்தது இல்லை. ‘கரு’ படப் பாட்டைக் கேட்டு பல பேர் போன் பண்ணி வாழ்த்து சொல்றாங்க. கிஃப்ட்ஸ் கொடுக்குறாங்க. இசையமைப்பாளர் சாம் சி.எஸ், இயக்குநர் விஜய்... இவங்க ரெண்டு பேரும்தான் இதுக்கெல்லாம் காரணம். சாய் பல்லவிக்காகப் பாடினதுல கூடுதல் சந்தோஷம். 

‘ஏதோ பொறந்தோம், ஏதோ வளர்ந்தோம்னு இருக்கக் கூடாது. ஏதாவது சாதிக்கணும்'னு அப்பா அடிக்கடி சொல்வார். அதை மனசுல வெச்சுக்கிட்டுதான் ஓடிக்கிட்டு இருப்போம். இப்போ என் கணவரும் எனக்கு சப்போர்ட்டா இருக்கார்...” என ஸ்வாகதா நெகிழ, மாயா பேசுகிறார். 

‘`சினிமாவுல எப்போவும் சரியான கேரக்டர் ரோலைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்படுவேன். நிறைய கேரக்டர்களைத் தவிர்த்திருக்கேன். ஏன்னா, என் ‘பாய் கட்’ ஹேர் ஸ்டைலைப் பார்த்துட்டு, போதைக்கு அடிமையான கேரக்டர் போலவே கொடுத்தாங்க. எனக்கு அதிலெல்லாம் விருப்பம் இல்லை. ‘மகளிர் மட்டும்’ படத்துல பிரம்மா சார் நல்ல கேரக்டர் கொடுத்ததுனால பண்ணேன். கெளதம் சாரோட ‘துருவ நட்சத்திரம்’ படத்திலேயும் முக்கியமான கேரக்டர் கிடைச்சிருக்கு. ஷங்கர் சாரோட ‘2.0’ படத்துல ரஜினி சார்கூட நடிச்சிருக்கேன் தெரியுமா?” என மாயா விழிகளை உருட்ட, ``சினிமாவைத் தாண்டி நிறைய விஷயங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கா, மாயா. அக்காவா அவளைப் பார்த்து ரொம்பப் பெருமைப்படுறேன்” என இடை மறிக்கிறார், ஸ்வாகதா. 

“இறுக்கமான மனநிலையில இருக்கிற நோயாளிகளைப் பல கோமாளித்தனங்கள் செஞ்சு சிரிக்க வைக்கிற ‘க்ளவுனிங்’ டாக்டராக வும் மாயா இருக்கா. வெளிநாடுகள்ல எல்லா மருத்துவமனைகளிலும் இப்படி ஒருத்தர் இருப்பாங்க. இங்கே இருக்கிற எல்லா மருத்துவமனைகளிலும் இதைக் கட்டாயமாக்கணும்னு இந்தப் பேட்டி மூலமா அரசாங்கத்துக்கு வேண்டுகோள் வைக்கிறோம்” என ஸ்வாகதா சொல்ல, அக்காவை இறுகக் கட்டிக்கொள்கிறார் மாயா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism