Published:Updated:

அனுமதியின்றி தொடுவதும் அத்துமீறலே!

அனுமதியின்றி தொடுவதும் அத்துமீறலே!
பிரீமியம் ஸ்டோரி
அனுமதியின்றி தொடுவதும் அத்துமீறலே!

பதறவைத்த பரிசோதனைசு.சூர்யா கோமதி

அனுமதியின்றி தொடுவதும் அத்துமீறலே!

பதறவைத்த பரிசோதனைசு.சூர்யா கோமதி

Published:Updated:
அனுமதியின்றி தொடுவதும் அத்துமீறலே!
பிரீமியம் ஸ்டோரி
அனுமதியின்றி தொடுவதும் அத்துமீறலே!

கில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் (NEET), சமீபத்தில் தேசமெங்கும் நடத்தப்பட்டது. அதில், தேர்வறைக்குச் செல்லும்முன் பரிசோதனை என்ற பெயரில், மாணவிகளைக் கம்மலில் ஆரம்பித்து மூக்குத்தி, கொலுசு, துப்பட்டா வரை அகற்றச் சொன்னது, பின்னலை அவிழ்த்துத் தலைவிரி கோலமாக்கியது, மாணவர்களின் மீசையில் பரிசோதனை(!) செய்தது என நாளைய மருத்துவர்கள் ஏதோ குற்றவாளிகள் போலவே சோதனைக்குள்ளாக்கப்பட்டார்கள். ஏற்கெனவே ஒருவிதப் பதற்றத்துடன் தேர்வுக்குச் சென்ற மாணவர்களை, இந்தச் சோதனைகள் இன்னும் பதற்றமடையச் செய்தன. பல்வேறு கண்டனங்களுக்கும் ஆளான இந்த நடவடிக்கைகள் குறித்து நிபுணர்களிடம் பேசினோம்.

அனுமதியின்றி தொடுவதும் அத்துமீறலே!

வசந்திதேவி, கல்வியாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்

‘`நம் நாட்டில் இதுவரை கல்லூரிச் சேர்க்கை முதல் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்வரை எத்தனையோ தேர்வுகளுக்குத் தேர்வறைக்குச் செல்வதற்கு முந்தைய சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், ‘நீட்’ தேர்வுக்கு நடத்தப்படும் சோதனை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்தத் தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாடு பற்றி சிபிஎஸ்இ பத்து நாள்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது. அதை மீறியவர்களிடம் சோதனை செய்வதையோ, அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதையோ தவறு என்று சொல்ல முடியாது. ஆனால், மாணவர்களை பலர் முன்னிலையில் உள்ளாடை வரை சோதிப்பது எல்லாம் அத்துமீறல்; அது மாணவர்கள்மீது நடத்தப்பட்ட வன்முறை. என்னைப் பொறுத்தவரை, ‘நீட்’ தேர்வுக்கான சிஸ்டமே தவறு என்பேன். இதில் ‘ஃப்ரிஸ்க்கிங்’ முறை, உச்சபட்ச அநியாயம். தேர்வெழுதுவதற்கு முன்பு அமைதியான மனநிலை அவசியம். ஆனால், இந்தக் குளறுபடிகளால் மாணவர்கள் மேலும் பதற்றமடையவே செய்தார்கள். இந்த அராஜகத்துக்காக சிபிஎஸ்இ அமைப்பு மீது வழக்கு தொடுக்க வேண்டும்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுமதியின்றி தொடுவதும் அத்துமீறலே!
அனுமதியின்றி தொடுவதும் அத்துமீறலே!

அருள்மொழி, வழக்கறிஞர்

‘`தேர்வெழுதச் செல்பவர்களை எப்படி யெல்லாம் பரிசோதிக்கலாம் என்பது குறித்து முறையான சட்ட வரையறை எதுவும் இல்லை. அந்தக் காரணத்தாலேயே என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறார்கள். சோதனைக்கென்று ஒருமுறை இருக்கிறது. மீசை, மூக்குத்தியில் எல்லாமா  `பிட்’ கொண்டுவர முடியும்? இப்படி பலர் முன்னிலையில் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள், சிபிஎஸ்இ மீது வழக்கு தொடுக்க முடியும். இதே நிலை நீடித்தால், அடுத்த ஆண்டு மொட்டைத்தலையுடன் தேர்வெழுத வரச்சொல்லி அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்போதும் நம் மாநில அரசு அனைத்துக் களேபரங்களையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும். இன்னொரு பக்கம், தமிழகத்தைப்போல வேறெந்த மாநிலத்திலும் மாணவர்கள் இவ்வளவு அராஜக சோதனை முறைக்கு உள்ளாக்கப் படவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.”

அனுமதியின்றி தொடுவதும் அத்துமீறலே!

நப்பின்னை, உளவியல் ஆலோசகர்

‘`இத்தனை வருடங்களாகக் கஷ்டப்பட்டுப் படித்ததன் பலன் கைகூட, ஒரு நுழைவுத் தேர்வு. அப்படிப்பட்ட முக்கியமான ஒரு தேர்வு நாளன்று, வீட்டிலிருந்து கிளம்புவதில் சில நிமிடங்கள் தாமதம் என்றால்கூட மாணவர்கள் மனநிலையை அது ஆட்டம்காண வைக்கும். அப்படி யிருக்க, பலர் முன்னிலையில் மேலாடை, உள்ளாடையைப் பரிசோதனை செய்வது எல்லாம் நிச்சயம் தேர்வு நேரப் பதற்றத்தை அதிகரிக்கவே செய்திருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கும். அடுத்த நிமிடமே, அந்த அதிர்ச்சிகளில் இருந்தெல்லாம் மீண்டு அவர்கள் தேர்வெழுத ஆரம்பிக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய சவால்? பிள்ளைகளுக்கு  `குட் டச் பேட் டச்’ போதிக்கிறோம். நம் உடலை நம் அனுமதியின்றி யாரும் தொடுவது அத்துமீறல். ஆனால், செக்கிங் என்ற பெயரில் சிபிஎஸ்இ தேர்வு அமைப்பே பலர் முன்னிலையில் மாணவர்களிடம் இப்படி உடை, உடல் ரீதியாக  அத்துமீறியிருப்பதற்குக் கண்டங்கள் மட்டும்தானா... தண்டனை எதுவும் இல்லையா? தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தேர்வாணையம் பக்கபலமாக இருக்க வேண்டும்; அவர்களை இப்படிப் படுத்தியெடுக்கக் கூடாது.’’

முறையாகவும் நாகரிகமாகவும் தேர்வு நடத்துவதற்கு இவர்கள் தகுதியானவர்களா என்பதற்கும் ஒரு தேர்வு தேவையோ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism