Published:Updated:

``50 நிமிடச் சாதனையை 30 நிமிடங்களில் முறியடித்தேன்" `பென்சில் சிற்பம்' நந்தினி

``50 நிமிடச் சாதனையை 30 நிமிடங்களில் முறியடித்தேன்" `பென்சில் சிற்பம்' நந்தினி

``50 நிமிடச் சாதனையை 30 நிமிடங்களில் முறியடித்தேன்" `பென்சில் சிற்பம்' நந்தினி

``50 நிமிடச் சாதனையை 30 நிமிடங்களில் முறியடித்தேன்" `பென்சில் சிற்பம்' நந்தினி

``50 நிமிடச் சாதனையை 30 நிமிடங்களில் முறியடித்தேன்" `பென்சில் சிற்பம்' நந்தினி

Published:Updated:
``50 நிமிடச் சாதனையை 30 நிமிடங்களில் முறியடித்தேன்" `பென்சில் சிற்பம்' நந்தினி

சாதிப்பதற்கு வறுமை ஒரு காரணம் இல்லை. ஆனால், அதை நிரூபிக்கப் பெரும் போராட்டங்களையும் தடைகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படித் தடைகள் தாண்டிச் சாதிக்கத் துடிக்கிறார், திருவண்ணாமலை கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த நந்தினி.

தந்தையின் துணையின்றி தாயின் அரவணைப்போடு சகோதரரின் சிறிய வருமானத்தில் இயங்கும் குடும்பம். வாழ்வின் லட்சியமான கலைத்துறை மீது ஆர்வம். கனவாக இருந்த BFA பட்டப்படிப்பை படிக்க இயலாமல், தொலைதூரக் கல்வியின் மூலம் தமிழ் இளங்கலை பயின்றுவருகிறார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், தமிழ்த்துறைச் சார்ந்த திறன் போட்டிகளில் மாநில அளவில் வெற்றிபெற்றுள்ளார். அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இன்ஸ்பியர் விருது, ஓவியம், சிற்பம், நாடகம், நடனம் என அனைத்திலும் அசத்தும் சகலகலாவல்லி.

``பள்ளி பயிலும்போதே பல போட்டிகளில் பங்கு பெறுவேன். இங்கே திறமையைப் பார்த்து மட்டுமே வெற்றி முடிவு செய்யப்படுவதில்லை. கலை, விளையாட்டு எல்லாவற்றிலும் இதுவே நிலை என அனுபவத்தில் அறிந்துகொண்டேன். அப்போதெல்லாம், `ஏன் எங்களை  தேர்வுசெய்யவில்லை' என்ற கேள்வி எழும். பல இன்னல்களைச் சந்தித்துள்ளேன். ஒரு சம்பவத்தின்போது என் கிரிக்கெட் கனவு, வெறுப்பாக மாறியது. சரியாக விளையாடாத ஒரு பெண் தேர்வுசெய்யப்பட்டாள். `ஏன் என்னைத் தேர்வுசெய்யவில்லை' என்று கேட்டதற்கு, `உன் திறமை போதாது' என நிராகரித்தனர். பணமும் செல்வாக்கும் இருந்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்தேன். தோனி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவர் சாதிக்கவில்லையா என்று கேட்கலாம். சாதித்த ஒரு தோனி மட்டுமே அனைவரின் கண்களுக்குத் தெரிகிறார். இங்கு எத்தனையோ தோனிகள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்'' என்கிற நந்தினி குரலில் நிராகரிப்பின் வலி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சில நாள்களுக்கு முன்பு யூடியூப் மூலம் ஒரு செய்தி பார்த்தேன். அதில் பல கின்னஸ் சாதனைகள் பற்றி அறிந்தேன். நான் விளையாட்டாகச் செய்யும் பென்சில் சிற்பத்தில்கூட கின்னஸ் சாதனை புரியலாம் எனத் தெரிந்தது. ஒருவரின் சாதனை நேரத்தை நான் முறியடிக்க முடிகிறதா எனச் சோதித்தேன். பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் 50 நிமிடங்களில் செய்திருந்தார். என்னுடைய முதல் முயற்சியிலேயே 50 நிமிடத்தில் செய்யப்பட்ட சாதனையை 30 நிமிடத்தில் முடித்தேன். இதற்கு முன்பும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வித்தியாசமான சாதனைகளைப் பார்த்தேன். அப்போது எனக்கு வயது 13. நாம் சாதாரணமாக எழுதுவது, பென்சில் சிற்பங்கள் செய்வது என அனைத்தையும் வித்தியாசமாக எழுத முயல்வேன். ஆனால், அந்த வயதில் எப்படி இதை வெளிக்கொணர்வது எனத் தெரியவில்லை. சுரேஷ் குமாரின் சாதனையைப் பற்றித் தெரிந்துகொண்டதும், அதுபோல நாமும் செய்துபார்க்க வேண்டும் என்ற உந்துதலே `அப்துல் கலாம்' சிற்பத்தை பென்சிலில் 30 நிமிடங்களிலேயே செய்ய முடிந்தது. இதை, `கலாம் மாணவர்கள் விழிப்புஉணர்வு இயக்கம்' முன்னிலையில் நிரூபித்துள்ளேன். முட்டை ஓடுகளில், கார்விங் முறையில் 15 நிமிடத்தில், 4 தலைவர்களின் உருவங்களை ஒருவர் செய்துள்ளார் அதனையும் முறியடிக்க முயற்சி செய்துவருகிறேன். இன்னும் பல சாதனைகள் பற்றிய திட்டம் வைத்துள்ளேன்'' என்கிறார் நந்தினி.

``படிக்கும் வேலையை விட்டு எதற்கு இதெல்லாம் என்று என் தாயிடம் 100 பேராவது சொல்லியிருப்பார்கள். இதையெல்லாம் தாண்டி சாதிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். என் நண்பர்களே, `நீயெல்லாம் எங்கே உருப்படப்போகிறாய்' என்று கிண்டல் செய்வார்கள். இந்நிலையில், `கலாம் மாணவர்கள் விழிப்புஉணர்வு இயக்கம்', என் திறமையை வெளிக்கொணர்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி என் கனவை நிறைவேற்றுவேன்'' எனத் தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் நந்தினி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism