
Facebook.com/ Lakshmi Saravanakumar
‘நதிகளை இணைப்பதே என் லச்சியம்.’ - ரஜ்னி ஸார். அவர் இணைக்கும் நதியில் ஜாலியாக நீச்சலடிப்பதே என் லச்சியம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
twitter.com/Thaadikkaran
பொய்யைப் பதிலாய்த் தருவாங்கன்னு தெரிஞ்சும், அதிகமாய்க் கேட்கப்பட்ட கேள்வி,
‘ஏன் லேட்டு..?’

twitter.com/mufthimohamed1
“ஜெயலலிதாவைவிட சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி” - திண்டுக்கல் சீனிவாசன்.
இதை இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது!

twitter.com/Thaadikkaran
நண்பர்கள் டூர் கேன்சல் ஆகுறதுக்கு ரெண்டே காரணம் தான்.
1. அவன் வந்தா நான் வரல.
2. அவன் வரலேன்னா நானும் வரல.

twitter.com/NicheBrain
எஸ்.வி.சேகரைத் தமிழகக் காவல்துறை பிடிக்க முடியாததற்குக் காரணம், அவரிடம் புதிய 2000/- நோட்டு எதுவும் இல்லாததுதான் என்பது நம்மில் கித்னா பேருக்குத் தெரியும்?!
twitter.com/kumarfaculty
வடிவேலு நடிக்கவந்தபிறகு தமிழ் வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிவிட்டன.

Facebook.com/Abdul Hameed Sheik Mohamed
நாற்பது ஐம்பது வருட அரசியல் அனுபவம் உள்ளவர்களை யெல்லாம் தாண்டி ராகுல் காந்தி பிரதமராக முயற்சிப்பதை மோடி கடுமையாக விமர்சித்த போது அத்வானி வாய் விட்டு கேவிக் கேவி அழுதாராம்
Facebook.com/ Salman Syed
ஒரு காமெடி பார்த்தீங்களா, சொத்துக் குவிப்பு வழக்கின் அபராதமாக ஜெயலலிதாவின் சொத்துகளில் இருந்து 100 கோடியைப் பறிமுதல் செய்து விரைவில் அரசு கஜானாவில் சேர்க்கப் போகிறார்களாம். பிறகு, அரசு கஜானாவிலிருந்து ஐம்பது கோடியை எடுத்து ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மே 2-வது ஞாயிற்றுகிழமை தமிழ் ட்விட்டர்களின் சந்திப்பு நடக்கும். இந்த வருடம் புதுச்சேரியில் நடந்தது. பல்வேறு ஊர்களில் இருந்தும் தமிழ் ட்விட்டர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்ட இந்த நிகழ்வில் சமூகம், சினிமா, புத்தகவாசிப்பு, நட்பு எனப்பல விஷயங்களும் பேசப்பட்டன. அடுத்த ஆண்டு தேனியில் சந்திப்போம் என முடிவெடுத்திருக்கிறார்கள். #TNMegaTweetup2018