Published:Updated:

Follow-up: குப்பைத்தொட்டி மட்டும் போதுமா?

Follow-up: குப்பைத்தொட்டி மட்டும் போதுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
Follow-up: குப்பைத்தொட்டி மட்டும் போதுமா?

Follow-up: குப்பைத்தொட்டி மட்டும் போதுமா?

ஜூனியர் விகடன் 29-4-18 இதழில், ‘குப்பைத்தொட்டியாக வரவேற்கும் மலைகளின் இளவரசி’ என்ற தலைப்பில் கொடைக்கானல் நகராட்சியின் சுகாதாரக்கேடு குறித்த கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் விளைவாக இப்போது கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 40 குப்பைத்தொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில் இவற்றை வைக்கப்போவதாக நகராட்சி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார். நகராட்சி தனது முயற்சியாக எதையும் இன்னமும் செய்யவில்லை.

Follow-up: குப்பைத்தொட்டி மட்டும் போதுமா?

இதில் வேடிக்கை என்னவென்றால், கொடைக்கானலில் தினசரி சேரும் குப்பைகளில், பாதிக்கும் மேற்பட்டவை ஹோட்டல்களிலிருந்து வருவதே. ‘அதை ஹோட்டல் உரிமையாளர்களே அப்புறப்படுத்த வேண்டும்’ என்ற நகராட்சி விதியைப் பின்பற்றினாலே பிரச்னை பெருமளவு குறைந்துவிடும். ஹோட்டல்களிலும் ரிசார்ட்களிலும் சேரும் குப்பைகளை அவர்களே சேகரித்து ஊருக்கு வெளியே இருக்கும் குப்பைக் கிடங்கிற்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். ஆனால், நகராட்சி வசம் இருக்கும் இரண்டு லாரிகளையும், ஹோட்டல்களின் குப்பைகளை எடுத்துச் செல்லவே பயன்படுத்துவதால்தான், கொடைக்கானல் முழுக்கக் கழிவுகள் தேங்கிக்கிடக்கும் நிலை ஏற்படுகிறது.

‘‘குப்பைத்தொட்டிகளை வைப்பதால் மட்டுமே பிரச்னை தீர்ந்துவிடாது. நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் காலியிடங்களை நிரப்புவதும், போதுமான குப்பை லாரிகளை வாங்குவதுமே நிரந்தரத் தீர்வு’’ என்பதே கொடைக்கானல் மக்களின் கருத்து.

- க.சுபகுணம்