Published:Updated:

நாலு பேருக்கு நல்லதுன்னா...

வில்லிவாக்கம் வள்ளல்

##~##

''எங்கள் வில்லிவாக்கம் பாபாநகர் 6-வது தெருவில் சிவதாணு என்பவர்  சனிக்கிழமைதோறும் பிச்சைக்காரர்கள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் என அனைவருக்கும் கொஞ்சம் பணமும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் கொடுத்துவருகி றார்'' என்று, வில்லிவாக்கம் சாம்பசிவம் என்ற வாசகர் தொலைபேசியில் சொன்ன தகவல் இது. அந்தச் சேவை உள்ளத்தைச் சந்திக்க உடனே வில்லிவாக்கம் கிளம்பினோம்.

நாலு பேருக்கு நல்லதுன்னா...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரயில் நிலையத்தில் இறங்கி, 'பாபா நகருக்கு எப்படிங்க போறது?’ என்று கேட்டால், 'அதோ போகுதே கூட்டம் அது கூட போங்க. பாபா நகர் வந்துடும்’ என பதில் வருகிறது.  அங்கே பார்த்தால் அரசு நிவாரண உதவி பெறுவதைப் போல, ஒருவர் பின் ஒருவராக மூட்டை முடிச்சுகளுடன் அணிவகுத்துச் சென்றது  நீண்ட நெடிய வரிசை. ஆச்சர்யத்தோடு நானும் இணைந்துகொண்டேன்.

முன்னால் நின்று இருந்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம், 'ஒரு ஆளுக்கு எவ்வளவு பணம் தர்றாங்க?’ என்று விசாரிக்கத் தொடங்கியதும் அலர்ட் ஆனார். ''ஆமா, நீ எங்கே இருந்து  வர்ற?'' என்றார். விவரம் சொன்னதும், ''அழகாப் படம் புடிச்சி நீ பத்திரிகையில போட்டுட்டுப் போயிடுவே. அதைப் பாத் துட்டு கூட்டம் குவியும். மவராசன் குடுக்குறதுலயும் மண்ண அள்ளிப்போட பாக்கிறே?'' என்று கோபத்தின் உச்சிக்குப் போனவரைச் சமாதானப்படுத்திப் பேசவைத்தேன். ''என்பேரு நாகப்பன். ஆந்திரா மாநிலம் புத்தூர். வலது கை, கால் பக்கவாதத்தில விழுந்துடுச்சு. இந்த எசமான்தான் வாராவாரம் படியளக்குறாரு. ஒன்றரை வருஷமா வந்துட்டு இருக்கேன். நானும் என் புள்ளைங்களும் இவங்களுக்கு ஏழேழு ஜென்மத் துக்கும் கடமைப்பட்டிருக்கோம்'' என்றார். ''என் பேரு பாட்ஷா. ஊரு திருவள்ளூர். ஒரு விபத்தில் கால் துண்டாயிடுச்சு. இப்ப செயற்கைக்கால்தான். வாராவாரம் புள்ளை குட்டிகளை அழைச்சிட்டு வந்துடுவேன்'' என்கிறார் மற்றொருவர்.

நாலு பேருக்கு நல்லதுன்னா...

காலை 7 மணிக்குச் சூடுபிடித்தது பண உதவி வைபவம். பணம் பெற வந்தவர்களில் சிலரே வாலன்டியராக மாறி, சிவதாணுவுக்கு உதவி செய்யத் தொடங்கினார்கள். ஆட்கள் வர வர வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் என தரம் பிரிக்கப்பட்டு மஞ்சள், பச்சை, ரோஸ், வெள்ளை நிற பேண்டுகள் கையில் அணிவிக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு

நாலு பேருக்கு நல்லதுன்னா...

70, வயதானவர்கள், பிச்சைக்காரர்களுக்கு

நாலு பேருக்கு நல்லதுன்னா...

  50, குழந்தைகளுக்கு

நாலு பேருக்கு நல்லதுன்னா...

10. தவிர, அனைவருக்கும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் தரப்படுகிறது. பணம் பெற்றவர்களுக்கு உள்ளங்கையில் 'தொகை வாங்கப்பட்டது’ சீல் வைக்கப்படுகிறது. வந்தவர்கள் அனைவருக்கும் பணம் கொடுத்து முடித்தபோது, காலை மணி 11.30. பணத்தைக் கட்டில் இருந்து பிய்த்துக் கொடுத்துக் களைத்துப்போய் அமர்ந்து இருந்த சிவதாணுவைச் சந்தித்தேன். முதலில் பேச மறுத்தவர், சில விஷயங்களை மட்டும் பகிர்ந்துகொண்டார்.

நாலு பேருக்கு நல்லதுன்னா...

''ஸ்ரீசிவதாணு அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் செய்யப்படும் இந்தச் சேவை, ஏழைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. இந்த டிரஸ்ட் ஆரம்பித்து ஒன்றரை வருடம் ஆகிறது. பணம் தருவது தவிர, தீபாவளிக்கு ஏழைகளுக்கு சேலை, வேட்டியும் தருகிறோம். கடந்த தீபாவளிக்கு மட்டும் ஏழு லட்சம் ரூபாய் செலவானது. செலவு முழுவதும் 'சிவதாணு அறக்கட்டளையைச் சார்ந் தது. வேறு எந்த அமைப்பு, நிறுவனம் மற்றும் தனிநபர் களிடம் இருந்தும் இதற்காக நன்கொடை பெறுவது இல்லை. வாராவாரம் 2,000 பேர் வரை வருகிறார்கள். இதை நீங்கள் எழுதினால் வரும் ஆட்களின் எண்ணிக்கை கூடும். என்ன செய்வது அவர்களுக்கும் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

உள்ளூர் மக்களைவிட குண்டூர், சித்தூர், புத்தூர், கடப்பா, நெல்லூர் என ஆந்திராவில் இருந்தும் தமிழ்நாட்டின் மற்ற  மாவட்டங்களில் இருந்தும்தான் அதிகமா வர்றாங்க. ஏன், எதுக்கு செய்றீங்கனு காரணம் கேட்காதீங்க. தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. எனக்கு மூன்று பையன்கள், ஒரு பொண்ணு. நல்ல படிப்பு, வெளிநாட்டு வேலைனு எல்லாரும் வசதியா இருக்காங்க. 'நானும் நல்லா இருக்கணும். மக்களும் நல்லா இருக்கணும்’கிற எண்ணம்தான் இந்த உதவிக்குக் காரணம். மத்தபடி எனக்கு விளம்பரம் பிடிக்காது. வந்ததுக்கு ரொம்ப நன்றி. நிறையப் பேசிட்டேன். போயிட்டு வாங்க'' என வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார். இதைத் தவிர வழக்கறிஞரான சிவதாணு வாரந்தோறும் இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்குகிறாராம்.

நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க!

நாலு பேருக்கு நல்லதுன்னா...

- தி.முத்துராஜ்