திருவள்ளுவருக்கு ஒரு பழக்கம் இருந்தது. சாப்பிடும்போது, இலைக்கு அருகே ஓர் ஊசியும் கிண்ணமொன்றில் சிறிது நீரும் இருக்க வேண்டும் அவருக்கு. வாசுகி அம்மையாருக்கு ஆரம்பத்தில் இந்தப் பழக்கம் ஆச்சர்யமாக இருந்தது. எதற்காக இப்படி வைக்கச் சொல் கிறார் என்று அவரிடம் கேட்கவும் தயக்கம்... அதோடு கணவரின் மேலிருந்த அபரிமிதமான பக்தி அந்தக் கேள்வியைக் கேட்கவிடாமல் தடுத்தது. ஒருநாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையி லிருந்தார் வாசுகி அம்மையார். அவர் கண்களில் ஏதோ ஓர் ஏக்கம் தென்பட்டதாகத் தோன்றியது வள்ளுவருக்கு.

``என்னிடம் எதையோ கேட்க வேண்டுமென்று நினைக்கிறாய். ஆனால், தயங்குகிறாய். என்ன விஷயம் வாசுகி... எதுவாக இருந்தாலும் கேள்!’’

வாசுகி அம்மையார், தயங்கித் தயங்கித் தன் சந்தேகத்தைக் கேட்டே விட்டார்.

``இவ்வளவுதானா? இதைக் கேட்பதற்கா இவ்வளவு நாள்களாகத் தயங்கிக் கொண்டிருந்தாய். உணவை வீணாக்கக் கூடாது என்பது நம் மரபார்ந்த வழக்கம். பருக்கைகள் இலையைத் தாண்டி விழுந்துவிட்டால் அதை அப்படியே சாப்பிட முடியாது அல்லவா? அப்படி விழுந்து விட்டால், ஊசியை எடுத்து, அதைக்கொண்டு பருக்கையைக் குத்தி, கிண்ணத்திலிருக்கும் நீரில் கழுவி, இலையில் போட்டுக்கொள்ளலாம். அதற்காகத்தான் உணவின்போது அவற்றை வைத்திருக்கிறேன்...’’

உணவின் மேன்மையை உணர்ந்திருந்தார் வள்ளுவர். ஊசியையும் கிண்ணத்தில் நிரப்பப்பட்ட நீரையும் அவர் வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தவேயில்லை என்பதுதான் கவனிக்கவேண்டியது. இந்தச் சம்பவம் கற்பனையோ, உண்மையோ... நாம் உணர்ந்துகொள்ள இதில் ஒரு செய்தி உண்டு. 1,330 குறள்களும் உணர்த்தாத செய்தி அது.

உலகம் முழுக்கக் கோடிக்கணக்கான குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்தோ, உணவோ இல்லாமல் வாடிக்கொண்டிருக்க, நாம் எவ்வளவு வீணடித்துக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் அது!

கல்யாணம் உள்ளிட்ட விசேஷங்களாக இருந்தாலும் சரி, நம் வீடாக இருந்தாலும் சரி... உணவைப் பாழாக்கி, குப்பையில் கொட்டும்போது யூனிசெஃப் அமைப்பு சொல்லும் இந்தப் புள்ளிவிவரத்தை நினைவில் கொள்வோம்... `உலக அளவில் ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் இறப்பில் பாதி, போதுமான சத்தான உணவு கிடைக்காத, ஊட்டச்சத்துக் குறைபாட்டால்தான் நிகழ்கிறது.’

ஒரு துளி சிந்தனை!

கரடுமுரடான மலையொன்றின் உச்சிக்குப் போனால் கடவுளுடன் உரையாடலாம் என்று யாரோ சொல்ல, ஒருவன் கிளம்பிப் போனான்.

``கடவுளே...’’

``சொல் என்ன வேண்டும்?’’

``பத்து லட்சம் ஆண்டுகள் என்பது உங்களுக்கு எவ்வளவு?’’

``ஒரு நிமிடம்.’’

``பத்து லட்சம் ரூபாய்?’’

``ஒரு பைசா.’’

``எனக்கு ஒரு பைசா வேண்டும். தருவீர்களா?’’

``நிச்சயமாக... ஒரு நிமிடம் பொறு’’ என்றார் கடவுள்!