“வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தால்தான் எதையாவது சாதிக்க முடியும்’’ என்று யாரேனும் சொல்வதை அடிக்கடி கேட்கிறோம். `ரிஸ்க்’ என்னும் வார்த்தைக்குத் தமிழில் `ஆபத்து’ என்ற அர்த்தமும் உண்டு. அது நமது உயிருக்கு ஆபத்தாக இருக்கலாம், செய்யும் முதலீட்டில் ஏற்படக்கூடிய இழப்பாக இருக்கலாம் அல்லது வேறு இழப்பாகக்கூட இருக்கலாம்.

அறிந்தோ அறியாமலோ தினசரி வாழ்க்கையில் நாம் பல ரிஸ்க்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் ரிஸ்க் என்றே நாம் நினைப்பதில்லை. ஆனால், முதலீடு என்று வரும்போது மட்டும் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறோம். முதலீட்டில் எங்கு ரிஸ்க் இருக்கிறதோ, அங்குதான் வளர்ச்சி இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள மறுக்கிறோம்.

பணம் பழகலாம்! - 13

முதலீட்டில் ரிஸ்க் என்றால் என்ன? முதலீடு செய்த பணம் எவ்வளவு சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளது என்பதுதான் ரிஸ்க். உதாரணத்துக்கு, நீங்கள் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஆறு மாதங்கள் கழித்து அதன் மதிப்பு  95,000 ரூபாயாக உள்ளது என்றால், உங்களது முதலீடு 5 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த 5 சதவிகிதத்தைத்தான் நாம் `ரிஸ்க்’ எனக் குறிப்பிடுகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் பழகலாம்! - 13


ரிஸ்க்கை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, கணக்கிடப்பட்ட ரிஸ்க். மற்றொன்று, கணக்கிடப்படாத ரிஸ்க். உங்களை ரிஸ்க் எடுக்கச் சொல்லி ஊக்குவிப்பது, கணக்கிடப்படக்கூடிய ரிஸ்க்குகளைத்தான். கணக்கிடப்பட முடியாத அல்லது வெற்றி பெறுவதற்கு மிகவும் குறைவான வாய்ப்புள்ள ரிஸ்க்கை எடுக்க வேண்டாம்.

நீங்கள் சாலையில் பைக் ஓட்டிச் செல்லாமல் இருக்க முடியாது. அதே சமயத்தில் ஹெல்மெட் அணிவது, சரியான வேகத்தில் செல்வது, சாலை விதிகளை மதிப்பது போன்ற செயல்களால் உங்களின் ரிஸ்க்கைக் குறைக்க முடியும். அதுபோலத்தான் உங்கள் முதலீடுகளும். சரியான ஆலோசகருடன் கைகோத்திடுங்கள். முதலீடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முயலுங்கள். . முதலீடுகளைப் பரவலாக்கிக்கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுக்காதீர்கள். இவற்றைச் செய்வதால் உங்கள் முதலீடு நன்றாக வளரும். உங்கள் வாழ்க்கைத்தரம் உயரும். நீங்கள் நினைத்த இலக்குகளை அடையலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். ரிஸ்க் எடுக்காமல் இருப்பது புத்திசாலித்தனமல்ல. கணக்கிடக்கூடிய ரிஸ்க்கை எடுத்து, வருமானத்தைப் பெருக்குவதே சிறந்தது!

-வரவு வைப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism