Published:Updated:

அன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி!

அன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி!
பிரீமியம் ஸ்டோரி
அன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி!

மகசூல்துரை.நாகராஜன் - படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

அன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி!

மகசூல்துரை.நாகராஜன் - படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:
அன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி!
பிரீமியம் ஸ்டோரி
அன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி!

“ஐம்பது வயசு வரைக்கும் ஒரு தொழிலதிபரா இருக்கணும். அதுக்கு பிறகு விவசாயத்துக்கு வந்துடணுங்கிறதை லட்சியமாவே வெச்சிருந்தேன். இப்போ அது நிறைவேறிடுச்சு. மனசுக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு” என்று சிலாகிக்கிறார், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன்.  

அன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி!

ஊத்துக்கோட்டையிலிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் ஐந்தாவது கிலோமீட்டரில் உள்ள தாராட்சி கிராமத்தில் இருக்கிறது, பிரபாகரனின் பண்ணை. ஒரு காலைப்பொழுதில் பண்ணையில் இருந்த பிரபாகரனைச் சந்தித்தோம்.

“எனக்கும் விவசாயத்துக்கும் துளிகூடச் சம்பந்தமில்லை. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில். அப்பா டெய்லரா இருந்தார். நான் 1985-ம் வருஷம் காலேஜ் முடிச்சிட்டு, ஒரு தனியார் கம்பெனியில வேலை செஞ்சேன். ஒரு வருஷத்துலேயே வேலையை விட்டுட்டேன். நான், என்னோட தம்பி, நண்பர் ஒருத்தர்  மூணு பேரும் சேர்ந்து ஒரு ஃபர்னிச்சர் கம்பெனி ஆரம்பிச்சோம். அப்போதே எனக்கு விவசாயத்துல அதிக ஆசை இருந்துச்சு. ஆனா, பிசினஸ் பண்ணிட்டுருந்ததால விவசாயத்துக்கு வர முடியலை. அதன்பிறகுதான் ஐம்பது வயசுக்கப்புறம் விவசாயம்னு முடிவெடுத்தேன். 2005-ம் வருஷத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா வாங்கி மொத்தம் 26 ஏக்கர் நிலத்தைச் சேர்த்துட்டோம். அதுல ஆறு ஏக்கர் நிலத்தைக் கம்பெனிக்காக ஒதுக்கிட்டோம். மீதி 20 ஏக்கர் நிலத்தை விவசாயத்துக்குனு ஒதுக்கி பயிர் செய்றோம்” என்று முன்கதை சொன்ன பிரபாகரன் தொடர்ந்தார். 

அன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி!

“2013-ம் வருஷத்துல இருந்து நெல், காய்கறிகள், மாமரங்கள்னு விவசாயத்தை ஆரம்பிச்சேன். இப்போ 12 ஏக்கர் நிலத்துல நெல் இருக்கு. ஒரு ஏக்கர் நிலத்துல தீவனப்பயிர் இருக்கு. 1 ஏக்கர் நிலத்துல மீன் வளர்ப்புக்காகப் பண்ணைக்குட்டை இருக்கு. 1 ஏக்கர் நிலத்துல மா இருக்கு. அரை ஏக்கர் நிலத்துல வாழை இருக்கு. அரை ஏக்கர் நிலத்துல கீரைகள் போட்டிருக்கேன். அரை ஏக்கர் நிலத்தை ஆடு வளர்ப்புக்காக ஒதுக்கிட்டேன். மீதி நிலத்துல உணவகம் நடத்திட்டு வர்றோம். இதுபோக 15 கோழிகள், 10 மாடுகள்னு இருக்கு.  

அன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி!

ஆரம்ப காலங்கள்ல வேலையாள்களை வெச்சு விவசாயம் செஞ்சதால அவங்க சொல்படி முதல் நாலு வருஷம் ரசாயனம் உபயோகப்படுத்திதான் விவசாயம் செஞ்சேன். போன வருஷம் என் பையன் கம்பெனி நிர்வாகப் பொறுப்பை ஏத்துக்கிட்டதால, நான் முழுசா விவசாயத்துக்கு வந்துட்டேன். இந்த ஒரு வருஷமாத்தான் இயற்கை முறைக்குப் பண்ணையை மாத்திட்டிருக்கேன். வாழை, மா, ரெண்டையும் முழு இயற்கைக்கு மாத்திட்டேன். நெல்லைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டிருக்கேன். இயற்கைக்கு மாறுன பிறகு நெல்லுல மகசூல் குறைஞ்சுடுச்சு. ஆனா, போகப்போக அதிகரிக்கும்னு நம்பிக்கை இருக்கு. 

அன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி!

இந்தப்பகுதியில ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எரமல்லி ரக நெல்லைத்தான் அதிகம் சாகுபடி செய்றாங்க. நானும் அதைத்தான் சாகுபடி செய்றேன். சராசரியா ஏக்கருக்கு 30 மூட்டை நெல் கிடைக்கும். நெல்லாவே விற்பனை செஞ்சுடுவேன். பண்ணைக் குட்டையில கட்லா, ரோகு மீன்கள் வளர்ந்துட்டுருக்கு. இனிமேதான் அறுவடையை ஆரம்பிக்கணும்.  

அன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி!

பங்கனபள்ளி, பெங்களூரா, இமாம்பசந்த்னு மா வகைகள் இருக்கு. எல்லாமே அஞ்சு வயசு மரங்கள். போன வருஷத்துலதான் முதல் அறுவடை நடந்துச்சு. மொத்தம் 200 பங்கனபள்ளி, 25 பெங்களூரா, 25 இமாம்பசந்த் மரங்கள்னு இருக்கு. இந்த மாமரங்களுக்கு வருஷா வருஷம் கவாத்து பண்ணி உரம் கொடுத்தாலே போதுமானது. எங்க ஃபர்னிச்சர் கம்பெனியில், மரத்தூள் அதிகமாகக் கிடைக்கும். அதையும் மட்க வெச்சு மாமரங்களுக்கு உரமாக்கிடுவேன்” என்ற பிரபாகரன் வருமானம் குறித்துச் சொன்னார். 

அன்று தொழிலதிபர்... இன்று இயற்கை விவசாயி!

“போன வருஷம் மாந்தோப்பை 50,000 ரூபாய்க்குக் குத்தகைக்கு விட்டேன். இந்த வருஷம், நானேதான் அறுவடை செய்யப் போறேன். மொத்தமா 600 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். மாம்பழங்களைக் கிலோ 100 ரூபாய்னு நாங்க நடத்துற உணவகத்துலயே வெச்சு, நேரடி விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இங்கே விளையுற காய்கறிகளை என்னோட உணவகத்துக்கே பயன்படுத்திக்கிறேன்” என்ற பிரபாகரன் நிறைவாக,

“இந்தப்பண்ணையை ஒரு விவசாயச் சுற்றுலாத்தலமா மாத்தணுங்கிறது என்னோட ஆசை. அதுக்கான வேலைகளைக் கொஞ்சம் கொஞ்சமாச் செஞ்சிட்டுருக்கேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பிரபாகரன், செல்போன்: 94449 93586