Published:Updated:

அச்சுறுத்தும் அலங்காரம்... 600 பவுண்ட் மிட்டாய்... பேய்த் திருவிழா... ஹேப்பி ஹேலோவீன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அச்சுறுத்தும் அலங்காரம்... 600 பவுண்ட் மிட்டாய்... பேய்த் திருவிழா... ஹேப்பி ஹேலோவீன்!
அச்சுறுத்தும் அலங்காரம்... 600 பவுண்ட் மிட்டாய்... பேய்த் திருவிழா... ஹேப்பி ஹேலோவீன்!

அச்சுறுத்தும் அலங்காரம்... 600 பவுண்ட் மிட்டாய்... பேய்த் திருவிழா... ஹேப்பி ஹேலோவீன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அக்டோபர் 31, மேற்கத்திய நாடுகளில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் திருவிழாதான் `ஹேலோவீன் (Halloween)'. இந்நாளில், சிறியவர் முதல் முதியவர் வரை பயமுறுத்தும் வகையில் ஆடை அலங்காரம் செய்துகொண்டு, வீட்டுக்கு வீடு சென்று இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டு, `திகில்' படங்களைப் பார்த்துக்கொண்டே முழுநேரத்தையும் செலவிடுவர். முன்பெல்லாம் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்ட இந்தத் திருவிழா, மெள்ள மெள்ள தற்போது இந்தியாவிலும் பரவிவருகிறது. `அப்படி என்ன ஸ்பெஷல் ஹேலோவீனில்?' பார்ப்போம்..


இந்த விழா பார்ப்பதற்கு சந்தோஷமானதாக இருந்தாலும், இது தனிப்பட்ட ஒரு மதத்தின் நம்பிக்கையினால் உருவான பேய்கள் விரட்டும் திருவிழா. `Hallow' என்றால் `பரிசுத்தம்', `een' - என்றால் `evening' (மாலை) என்ற சொற்களைத் தழுவியே 'Halloween' என்ற வார்த்தை தோன்றியது. வெவ்வேறு கோணங்களில் இதன் வரலாறு கூறப்பட்டிருந்தாலும், பெரும்பாலானவர்கள் நம்புவது `சாவ்வின் (Samhain)' வரலாறுதான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கேலிக் (Gaelic) இன மக்கள் `சாவ்வின்' எனும் திருவிழா, அக்டோபர் 31 காலை முதல் நவம்பர் 1 மாலை வரை கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இது, அறுவடை காலம் முடிவுபெற்றது என்பதையும், குளிர்காலம் வந்துவிட்டது என்பதையும் குறிப்பதற்காகக் கொண்டாடப்படும் திருவிழா. இவர்களின் கொண்டாட்டம் சற்று வித்தியாசமானது. அக்டோபர் 31-ம் தேதி மாலை, மலை உச்சியில் விறகுகளை அடுக்கி, தீமுட்டிக் கொண்டாடப்படும் இந்த விழாவின்போது, இறந்தவர்களின் ஆன்மா வெளிவரும் என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கை. அதனால், இதில் கலந்துகொள்பவர்கள் அனைவரும், பேய்கள் இப்படிதான் இருக்கும் என்று அவர்கள் வடிவமைத்த, பயமுறுத்தும் முகமூடியை அணிந்துகொள்வார்கள். இதனால், `தன் சக பேய்தான்' என்று நிஜ பேய்கள் போய்விடுமாம் (வரலாறு பாஸ்!). அடர்த்தியான தீயை மூட்டுவதனால், அந்த ஜுவாலையோடு சேர்ந்து தீய சக்தியும் மண்ணைவிட்டு விண்ணுக்குச் செல்கிறது என்பது அவர்களின் நம்பிக்கை. சாவ்வின் திருவிழா ஒருபக்கம் இருக்க, அதே சமயத்தில் `அனைத்து ஆன்மாக்களின் தினம்' என்று நவம்பர் 2-ம் தேதி பரவலாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இந்நாளில், இறை வழிபாடு செய்யப்பட்டு, பூமியில் வாழும் இறந்துபோன ஆன்மாக்களை ஆறுதல்படுத்தி, அவற்றைப் புனிதமடையவைப்பார்கள்.


இதுபோன்ற பின்பற்றப்பட்ட நம்பிக்கை வழிபாடுதான், இன்று அனைவரும் கொண்டாடப்படும் ஹேலோவீனாக மாறியது. அன்று அவர்கள் அணிந்திருந்த முகமூடிதான், இன்று கோரமான உடைகள் மற்றும் மேக்-அப் போடுவதற்கான காரணம். இந்த நாளை எதிர்பார்த்து, மக்களைவிட உடை மற்றும் மிட்டாய் வியாபாரிகளே அதிகம் காத்திருப்பார்கள்.

`இந்நாளில் மிட்டாய் பரிமாற்றம் ஏன்?' என்ற சந்தேகம் எழாமலில்லை. அமெரிக்க மக்கள் சுமார் `600 பவுண்ட்' அதாவது 6 டைட்டானிக் கப்பலின் எடை அளவுக்கு  மிட்டாய் வாங்குகிறார்கள் என்றால் நிச்சயம் சந்தேகம் வரும்தானே! ஹெலோவீனின் முக்கிய நிகழ்வு `Trick-or-Treating'. இதில் குழந்தைகளின் பங்குதான் அதிகம். அக்டோபர் 31-ம் தேதி மாலை தொடங்கும் இந்த நிகழ்வில், குழந்தைகள் ஹெலோவீன் உடைகள் அணிந்து, ஒவ்வொரு வீடாகச் சென்று `ட்ரீட்' அதாவது மிட்டாய்களைப் பெற்றுக்கொள்வார்கள். பெரும்பாலான வீடுகளில் பெரியவர்கள் மிட்டாய்கள் கொடுத்து அனுப்புவார்கள். சிலர், வீட்டின் வெளியில் மிட்டாய்களை அடுக்கி வைத்திருப்பார்கள். இதனால், வீட்டிலிருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமல் மிட்டாய்களை எடுத்துச் செல்லலாம். யாராவது `ட்ரீட்' தர மறுத்துவிட்டால், அந்த வீட்டு உரிமையாளரின் உடைமைகளை சேதம் செய்வார்கள் குறும்புக் குழந்தைகள். இதுவே `ட்ரிக்'. என்ன ஒரு வில்லத்தனம்! ஏன் அவ்வளவு மிட்டாய்களை மக்கள் வாங்குகிறார்கள் என்று இப்போது புரிந்ததா ஃப்ரெண்ட்ஸ்!?

ஹேலோவீன் என்றதும், `முக வடிவப் பூசணிக்காயும்' நினைவுக்கு வரும். முதலில் `டர்னிப்' காயிக்குதான் கண்கள், மூக்கு, வாய் போன்றவற்றைச் செதுக்கிக் கொண்டாடினார்கள். ஆனால், பூசணியின் அதிகப்படியான விளைச்சலாலும், செதுக்குவதற்குச் சுலபமாய் இருப்பதாலும் நாளடைவில் பூசணிக்காயை உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டனர். நன்கு விளைந்த ஆரஞ்சு நிறப் பூசணிக்காயைச் செதுக்கி அதனுள் சிறு விளக்கை வைத்து, தங்கள் வீட்டு முற்றத்தில் வைத்துவிடுவார்கள். அந்தக் காலத்தில், தீய சக்திகளை விரட்டும் நம்பிக்கையால் இந்த விளக்கு வைக்கப்பட்டது. அது இன்றும் தொடர்கிறது.

அதுசரி, நீங்க எப்படி ஹெலோவீனைக் கொண்டாடிட்டு இருக்கீங்க பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு