Published:Updated:

ரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மா பக்கத்துலயே இருக்கணும்! - ஜோஷ்னா சின்னப்பா

ரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மா பக்கத்துலயே இருக்கணும்! - ஜோஷ்னா சின்னப்பா
பிரீமியம் ஸ்டோரி
ரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மா பக்கத்துலயே இருக்கணும்! - ஜோஷ்னா சின்னப்பா

எங்க அம்மாதான் பெஸ்ட் ஆர்.வைதேகி, படங்கள் : க.பாலாஜி

ரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மா பக்கத்துலயே இருக்கணும்! - ஜோஷ்னா சின்னப்பா

எங்க அம்மாதான் பெஸ்ட் ஆர்.வைதேகி, படங்கள் : க.பாலாஜி

Published:Updated:
ரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மா பக்கத்துலயே இருக்கணும்! - ஜோஷ்னா சின்னப்பா
பிரீமியம் ஸ்டோரி
ரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மா பக்கத்துலயே இருக்கணும்! - ஜோஷ்னா சின்னப்பா

``இந்த வருஷம் மதர்ஸ் டே எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஒவ்வொரு வருஷமும் மதர்ஸ் டே அன்னிக்கு

ரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மா பக்கத்துலயே இருக்கணும்! - ஜோஷ்னா சின்னப்பா

எங்க அம்மாகூட இருக்க முடியாம, ஏதாவது டோர்னமென்ட்ல ஏதோ ஒரு நாட்டுல இருப்பேன். இந்த முறை காமன்வெல்த் முடிச்சுட்டு இப்பதான் வந்தேன். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு இந்த வருஷம் அம்மாகூட சூப்பராப் போச்சு. அவங்களுக்குப் பிடிச்ச சூஷி ஃபிஷ் ஸ்பெஷல் விருந்துதான், நான் அவங்களுக்குக் கொடுத்த மதர்ஸ் டே ட்ரீட்’’ -  டபுள் சந்தோஷத்தில் செம எனர்ஜியுடன் பேசுகிறார் ஸ்குவாஷ் ஸ்வீட்டி ஜோஷ்னா சின்னப்பா.

அதிகம் பேசாத ஜோஷ்னா, அம்மா சுனிதாவைப் பற்றிப் பேசும்போது மட்டும் மடைதிறந்த வெள்ளமாகிறார்... வாய் ஓயாமல் பேசுகிறார்.

``அம்மாவும் நானும் பெரும்பாலும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணுவோம். டிரஸ்ஸோ, ஜுவல்ஸோ ஒரே மாதிரி ரெண்டு வாங்குற பழக்கம் எனக்கு உண்டு. எங்க ரெண்டு பேரையும் பார்த்தா உங்களுக்கு அம்மா பொண்ணு மாதிரித் தெரியுதா? எங்களை முதன்முறை சேர்த்துப் பார்க்கிற யாரும் அப்படிச் சொன்னதேயில்லை. `அக்கா தங்கச்சியா?’னு கேட்பாங்க. நாங்க தனித்தனியா போகும்போது `உங்க அக்கா வரலையா?’னு என்கிட்டயும், `தங்கச்சி வரலையா?’னு அம்மாகிட்டயும் கேட்பாங்க. செம காமெடியா இருக்கும். ஏன்னா, நான் அப்படியே எங்க அப்பா ஜாடை’’ - அப்பா மாதிரி சிரிக்கிறவர், கேரக்டரில் அப்படியே அம்மாவாம்!

``அம்மா ரொம்ப கூல். எதுக்குமே டென்ஷனாக மாட்டாங்க. அம்மாவைப் பார்த்துதான் இசையை ரசிக்கக் கத்துக்கிட்டேன். பயமில்லாம வாழுறதுலயும் அவங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். பத்து வயசுல `ஸ்குவாஷ்தான் என் லட்சியம்’னு சொன்னபோது, அவங்க ஒரே ஒரு கண்டிஷன் போட்டாங்க. `உன் விருப்பத்துக்கு நாங்க தடைபோட மாட்டோம். ஆனா, டிகிரி முடிக்கணும். படிக்கலைன்னா ஸ்குவாஷ் கிடையாது’னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. என் கனவை நனவாக்கணும்கிற வெறியில நானும் எத்திராஜ் காலேஜ்ல பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடிச்சேன். அன்னிக்கு `அம்மா அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்களே’னு கோபப்பட்டிருக்கேன். இன்னிக்கு படிப்பின் அருமை புரியும்போது அம்மாவின் வார்த்தைகளும் புரியுது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மா பக்கத்துலயே இருக்கணும்! - ஜோஷ்னா சின்னப்பா

நினைவு தெரிஞ்ச நாள் வரை, நானும் அம்மாவும் சரியான சண்டைக்கோழிங்களா இருந்திருக்கோம். வீட்டுக்கு லேட்டா வந்தா திட்டுவாங்க. ஃப்ரெண்ட்ஷிப் சரியில்லைன்னா திட்டுவாங்க. எனக்கு செம கோபம் வரும். அது அறியாத வயசு... இப்ப அம்மாவின் அன்பு புரியுற வயசு. அதுக்காக இப்போ எங்களுக்குள்ள சண்டையே வர்றதில்லைனு சொல்லலை. `ஐயோ பாவம் பொண்ணு ரூம் குப்பையாகிடக்கே'னு அம்மா க்ளீன் பண்ணிக்கொடுத்துட்டுப் போவாங்க. அப்போ ஜாலியா இருக்கும். ஆனா, என் டிரஸ்ஸையோ, நகையையோ வேற இடத்துல வெச்சிருப்பாங்க. நான் தேடும்போது கிடைக்காது. அம்மாகிட்ட சண்டை போடுவேன். அவங்க ஞாபகமா அதை வெச்ச இடத்துலேருந்து எடுத்துக் கொடுப்பாங்க. எங்க சண்டை இப்பல்லாம் அஞ்சு நிமிஷத்துக்கு மேல நீடிக்கிறதில்லை'’ - சண்டைக்கோழி ஜோஷ்னா, சமாதானப் புறாவான கதை, அழகு!

``எல்லா அம்மாக்களும் ஜெயிக்கிறதுக்கான வழிகளைக் கத்துக்கொடுத்து, அதை நோக்கிப் பிள்ளைகளைத் தயார்படுத்துவாங்க. ஆனா, `தோல்விகளையே சந்திக்காம வெற்றிகளை எட்ட முடியாது; தோல்விகளே இல்லாத வெற்றிருசிக்காது’னு சொன்னவங்க எங்க அம்மா. டோர்னமென்ட்டுல ஜெயிச்சா அவங்களை மாதிரி சந்தோஷப்படுறவங்க யாரும் இருக்க மாட்டாங்க. அதேநேரம் தோத்துட்டா வருத்தப்பட மாட்டாங்க. அதுதான் வாழ்க்கைனு எனக்கு அவ்வளவு அழகா புரிய வைப்பாங்க.

ஸ்குவாஷ் விளையாட ஆரம்பிச்ச முதல் நாள்லேருந்து இதுக்கு நான் பழகினதாலதான், இன்னிக்கும் காமன்வெல்த்துல கோல்டு அடிக்க முடியலைனாலும் அதை யதார்த்தமா எடுத்துக்க முடிஞ்சது. `எதிராளிகள் நம்மைவிட பலசாலிகள்... அதுக்கு ஏற்றபடி அடுத்த முறை நம்மைத்  தயார்படுத்திக்கிட்டுக் களமிறங்கணும்'னு புரியவெச்சது அம்மாவின் பக்குவம்தான்’’ - மகளின் வார்த்தைகளில் மெய்சிலிர்க்கிறது அம்மாவுக்கு.

மகளுக்கு அதைவிடவும் சிலிர்ப்பான விஷயங்கள் நிறைய இருக்கின்றன நம்மிடம் பகிர்வதற்கு.

வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் ஜோஷ்னாவுக்கு, ஒருநாள் பிரேக் கிடைத்தாலும் அம்மா மடியே சொர்க்கம்.

``சென்னையில இருந்தா, என்னை பார்ட்டி, பப்னு எங்கேயும் பார்க்க முடியாது. அம்மா செய்து கொடுக்கிற ரசம் சாதத்தையும் தயிர் சாதத்தையும் சாப்பிட்டுக்கிட்டு, அவங்க பக்கத்துல இருக்கவே விரும்புவேன்.
இன்னிக்கு நான் அடைந்திருக்கிற இந்த உயரத்தின் பின்னணியில இருக்கிறது என் ஆர்வமும் உழைப்பும் மட்டும்னு சொன்னா அது சுயநலம். அம்மாவின் தியாகம் எல்லாத்தையும்விடப் பெருசு. அப்பாவுக்கு வெளியூர்ல வேலை. எனக்கு ஒரு தம்பி இருக்கான். ஆரம்ப நாள்களில் நான் ஸ்குவாஷ் பிராக்டீஸுக்குப் போகும்போது என்கூட வர்றது, டோர்னமென்ட்டுக்குக்கூட வர்றதுனு அம்மா பயங்கர சப்போர்ட். சில நேரம் மாசக்கணக்குல வெளியூர்லயோ, வெளிநாட்டுலயோ தங்க வேண்டியிருந்திருக்கு. அப்பவும் வேற எதைப் பற்றியும் யோசிக்காம என்கூட இருந்திருக்காங்க.

ரசம் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மா பக்கத்துலயே இருக்கணும்! - ஜோஷ்னா சின்னப்பா

ஸ்குவாஷ்ல என் பெயர் ஓரளவுக்குத் தெரிய ஆரம்பிச்சுப் பிரபலமான பிறகுதான் நான் தனியே டிராவல் பண்ணப் பழகினேன். இப்பவும் என் மேட்ச் ஷெட்யூல், டோர்னமென்ட்ஸ் தகவல்கள் எல்லாம் என்னைவிட என் அம்மாவுக்குத்தான் அத்துப்படி. என்கூட டிராவல் பண்ண முடியலைன்னாலும் நான் எந்த டோர்னமென்ட்டுக்குப் போனாலும் என்னை ஏர்போர்ட்டுல டிராப் பண்றதையும் பிக்கப் பண்றதையும் மிஸ் பண்ண மாட்டாங்க.

இப்ப அம்மாகூட ஸாராவும் சேர்ந்துக்கிட்டா. ஸாரா நாங்க வளர்க்கிற நாய்க்குட்டி. ஆதரவில்லாம தெருவுல திரிஞ்சிட்டிருந்தவளைக் கூட்டிட்டு வந்து வளர்க்கிறோம். வாயில்லா ஜீவன்கள் மீது நேசம் செலுத்துறதையும் அம்மாகிட்டருந்துதான் கத்துக்கிட்டேன். இன்னிக்கு எங்க வீடு முழுக்க நாய்க்குட்டிகளும் பூனைக்குட்டிகளுமா இருக்குன்னா அதுக்குக் காரணம் அம்மாவின் அன்பு - அது அளவில்லாத அன்பு!''

அம்மாவை இறுக அணைக்கும் மகளின் கண்களில் அன்பின் அழுத்தம். அம்மாவின் கண்களிலோ ஆனந்த ஈரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism