தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 1 தேர்வு விடைத்தாளில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த சர்ச்சை குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தோம். இந்த சர்ச்சைகள் மையம் கொண்டது, அப்போலோ பயிற்சி மையம் நடத்தும் ஷாம் ராஜேஸ்வரனை!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்த முறைகேடு குறித்து செய்தி வெளியான நேரத்தில், குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், 74 பேர் வெற்றி பெற்றிருந்தனர். அந்த 74 பேரில் 62 பேர் அப்போலோ பயிற்சி மையத்தில் படித்தவர்கள். தேர்வில் தோல்வியடைந்த ஸ்வப்னா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். அதில், ‘குரூப் 1 தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. அதற்கேற்ப, ஒரே கோச்சிங் சென்டரில் படித்த 62 பேர் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, இந்த முறைகேடுகள் பற்றி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’ என அவர் கோரியிருந்தார். உயர் நீதிமன்றம், இதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதன்பிறகுதான், தனியார் கோச்சிங் சென்டர்கள் இந்த விவகாரத்துக்குள் வந்தன. தனியார் கோச்சிங் சென்டர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வு தொடர்பாக ஏதேனும் டீல் பேசினவா என மத்திய குற்றப் புலனாய்வு போலீஸார் விசாரித்தனர். அந்தத் தனிப்படையில், டி.எஸ்.பி மகேஸ்வரி, குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண், ஏ.டி.சி சியாமளா தேவி ஆகியோர் இடம் பெற்றனர். அவர்கள் ஷாம் ராஜேஸ்வரன் நடத்தும் அப்போலோ பயிற்சி மையத்தில் சோதனை நடத்தினர். ஷாம் ராஜேஸ்வரனுடன் தொலைபேசியில் உரையாடிய அனைவரையும் அழைத்து விசாரித்தனர். டி.என்.பி.எஸ்.சி-யின் தனி அதிகாரியான காசிராம்குமாரும் ஷாம் ராஜேஸ்வரனும் பேசிய ஆதாரம் ஒன்று கிடைத்தது. அதையடுத்து காசிராம்குமாரை போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். அதில், “நானும் ஷாம் ராஜேஸ்வரனும் 1995-லிருந்து நண்பர்கள். அவருக்கு நான் சில உதவிகளைச் செய்துள்ளேன்” என்று காசி ராம்குமார் கூறியுள்ளார். அதையடுத்து, ஷாம் ராஜேஸ்வரனைக் கைது செய்ய போலீஸார் முயன்றனர். அவர், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, “25 வருட நண்பர்கள் தொலைபேசியில் பேசியதை ஆதாரமாக வைத்து, ஷாம் ராஜேஸ்வரனைக் கைது செய்ய முடியாது. வலுவான ஆதாரங்கள் எதுவும் இப்போதைக்கு இல்லாததால், ஷாமைக் கைது செய்ய தடை விதிக்கிறேன்” என்று உத்தரவிட்டார். இந்த விவகாரம் குறித்து ஷாம் ராஜேஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டோம். தற்போது முன்ஜாமீன் பெற்றிருப்பதால், இது பற்றி தம்மால் எதுவும் பேச முடியாது என்று அவர் கூறிவிட்டார்.

ஷாம் ராஜேஸ்வரன் தரப்பில் நம்மிடம் பேசிய சிலர், “டி.என்.பி.எஸ்.சி-யில் முறைகேடு என்று செய்திகள் வந்த நேரத்தில், குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகி, எங்கள் பயிற்சி மையத்தில் படித்த 62 பேர் வெற்றிபெற்றனர். இதைச் சம்பந்தமே இல்லாமல், இந்த விவகாரத்தில் இணைத்துவிட்டனர். எங்கள் பயிற்சிமுறைக்குக் கிடைத்த வெற்றி இது. பெரும் உழைப்பைக் கொட்டி, நாங்கள் கேள்வி வங்கி தயாரித்து வைத்துள்ளோம். அதை வைத்து நாங்கள் எங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம்.

இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள், எங்களிடம் ஒருமுறைகூட விசாரணை நடத்தவில்லை. மாறாக, இந்தத் தொழிலில் எங்களுக்கு எதிராக உள்ள போட்டியாளர்கள் சொல்லும் தகவலை வைத்து மட்டும் ஆதாரங்களைத் தேடுகின்றனர். ஷாமிடம் ஒருநாள் விசாரணை நடத்தினாலே, இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்பது புரிந்துவிடும். அதை அவர்கள் இதுவரை செய்யவில்லை. அதுபோல குரூப் 1 தேர்வு பிரிலிமினரி, மெயின், இன்டர்வியூ என மூன்று நிலைகளில் நடப்பது. இதில், மூன்று நிலைகளிலும் முறைகேடு செய்து 74 காலிப்பணியிடங்களுக்கு 62 பேரை தேர்ச்சி பெற வைப்பது என்பது சாத்தியமா? இந்த நடைமுறைகள் எதுவும் தெரியாமல், எங்களை இந்த விவகாரத்தில் இழுத்துவிட்டுள்ளனர்” என்றனர்.

முன்னாள் சென்னை மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமிமீதும் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார் ஸ்டாலின். இதுகுறித்து துரைசாமியிடம் பேசினோம். ‘‘கடந்த 13 ஆண்டுகளில், எங்கள் மையத்தின் மூலம் ஏறத்தாழ ஐந்தரை லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சிலர் வழிகாட்டுதல் களைப் பெற்றுள்ளனர்; சிலர் படிப்பதற்குத் தேவையான புத்தகங்களைப் பெற்றுள்ளனர்; சிலர் முழுமையாக இங்கு தங்கிப் படித்துள்ளனர். அப்படிப் படித்தவர் களில், மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியா முழுவதும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு மனிதநேய அறக்கட்டளை உதவி செய்துள்ளது. சுமார் 15 ஆயிரம் பேர் இங்கு படித்துத் தேர்வுகளில் வென்று அரசு ஊழியர்களாக இருக்கின்றனர். அவர்களைத் தேர்வுக்குத் தயார்படுத்தி, அவர்கள் தேர்வு அறைக்குள் செல்லும்வரைக்கும் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம். பிறகு தேர்வை எழுதுவதும் வெற்றி பெறுவதும் அந்த மாணவரின் சாமர்த்தியம்.

இதில் என்ன முறைகேட்டை நாங்கள் செய்தோம்? அப்படி டி.என்.பி.எஸ்.சி புகார் தந்துள்ளதா, இங்கு படித்த மாணவர்கள் யாராவது புகார் சொன்னார்களா, போலீஸ் புகார் சொன்னதா? யாரும் எந்தப் புகாரும் சொல்லாத போது, யாரோ ஒருவர் அறிக்கைவிடுகிறார் என்றால், அதை செய்தியாக்கி விளக்கம் கேட்பது என்ன நியாயம்? மு.க.ஸ்டாலினுக்கும் எனக்குமான அரசியல் பனிப்போர், கொளத்தூரில் 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலிருந்து தொடர்கிறது. ஸ்டாலின் கேட்டது போல சி.பி.ஐ விசாரணையை நான் முழுமனதாக வரவேற்கிறேன். அப்போதுதான், உண்மை வெளிப்பட்டு, இதில் எங்கள் பக்கம் எந்தத் தவறும் இல்லை என்பது நிரூபணமாகும். இந்தப் பிரச்னையை விசாரிக்கும் சி.பி.ஐ., 2011-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சி முடியும் நேரத்தில் அவசர அவசரமாக நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி நியமனங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்.

சிவில் சர்வீஸ் கோச்சிங் பல லட்ச ரூபாய் புழங்கும் பிசினஸ். நாங்கள் இதுவரை இலவசமாகத் தந்த பயிற்சிகளை வேறு யாராவது தந்திருந்தால், 270 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கலாம். இந்த 270 கோடி ரூபாய் தனியார் பயிற்சி மையங்களுக்குப் போவதை சைதை துரைசாமி தடுக்கிறார். அவர்களின் வருவாய் இழப்புக்கு நான் காரணமாகிவிட்டேன். அதனால், அவர்கள் அவதூறு பரப்புகிறார்கள்’’ என்றார் அவர்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை சென்னை மத்தியக் குற்றப் பிரிவின் டீம்-2 விசாரித்தது. டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் காசிராம்குமார், புகழேந்தி, சிவசங்கர், லஞ்சம் கொடுத்த ராம்குமார், அவரின் நண்பர் குமரேசன், உதவி செக்ஷன் ஆபீசர் பெருமாள், கான்ட்ராக்டர் பால்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சாம் ராஜேஸ்வரன் வீடு, அலுவலகங் களில் ரெய்டு, விசாரணை நடந்தது. சென்னை மத்தியக் குற்றப் பிரிவின் கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் மல்லிகா மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் ஷியாமளா தேவி நேரடி விசாரணை நடத்துகிறார். விசாரணை டீமில், உதவி கமிஷனர் மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் ஆகியோர் இருக்கின்றனர். விசாரணை குறித்து ஷியாமளாதேவியிடம் கேட்டபோது, ‘‘வழக்கின் இந்தக் கட்டத்தில் இந்த விவகாரம் குறித்து நான் எந்தக் கருத்தும் சொல்வதற்கில்லை” என்றார்.

ஒரு போட்டித் தேர்வுக்காகத் திறமையுடன் படித்துவிட்டுச் சென்று, நேர்மையாக எழுதினாலே வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழ்நாடு முழுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி என்ற அமைப்பு, ஒளிவுமறைவற்ற தேர்வுமுறையை வைத்திருக்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது தமிழக போலீஸின் கடமை.

- ஜோ.ஸ்டாலின்

முந்தைய பகுதி: “கலெக்டர் காலிங்... டி.என்.பி.எஸ்.சி ஆபீஸர் காலிங்!”