பார்க்கும்போதே ருசிக்கத் தூண்டுகின்றன அந்த உணவு வகைகள். ஆனால், அவையெல்லாம் செயற்கை மாதிரிகள் என்று தெரியவரும்போது, விரிகின்றன நம் கண்கள். ஆம், `தாய் க்ளே'யில் வடிவமைக்கப்படும் மினியேச்சர் ஃபுட் வகைகள் இப்போது ட்ரெண்ட். ‘`மினியேச்சர் நூடுல்ஸ் செய்யலாமா..?” என்று அதை நமக்குக் கற்றுத்தர ஆயத்தமாகிக்கொண்டே பேசுகிற சென்னையைச் சேர்ந்த நேகா, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவி; மினியேச்சர் ஃபுட் செய்யக் கற்றுத்தரும் கிராஃப்ட் ஆசிரியர்.

மினியேச்சர் நூடுல்ஸ்
தேவையானவை:
* தாய் கிளே - 50 கிராம்
* பெட்ரோலியம் ஜெல்லி
* ஃபெவிக்கால்
* ஆயில் பெயின்ட் - பச்சை, மஞ்சள், சிவப்பு, கறுப்பு வண்ணங்கள்
* சிறிய பவுல்
* கட்டர்
* கத்தரிக்கோல்
* பாலிதீன் பேப்பர்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்முறை:
படம் 1: சிறிதளவு தாய் க்ளேயில் மஞ்சள் நிற ஆயில் பெயின்டைச் சேர்க்கவும்.
படம் 2: மஞ்சள் நிறம், க்ளேயில் நன்கு மிக்ஸாகும்வரை கைகளால் பிசையவும்.
படம் 3: மஞ்சள் நிறம் போன்றே சிவப்பு, பச்சை, கறுப்பு நிற ஆயில் பெயின்ட்டுகளையும் க்ளேயில் ஒன்றன் பின் ஒன்றாகக் கலந்து, செய்துவைத்துக்கொள்ளவும்.
படம் 4: ஒரு பாலிதீன் பேப்பர் மீது சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவிக்கொள்ளவும்.
படம் 5: அந்த பாலிதீன் பேப்பர் மீது, செய்து வைத்துள்ள கறுப்பு நிற க்ளே உருண்டையை வைத்துச் சப்பாத்திபோல தேய்த்துக்கொள்ளவும்.
படம் 6: தேவையில்லாத பகுதியைக் கட்டரால் `கட்' செய்துவிடவும்.
படம் 7: `கட்' செய்து எடுத்த தட்டு போன்ற பகுதியை பவுலின் பின்புறம் வைத்து ஒருமுறை லேசாக அழுத்தி எடுக்கவும்.
படம் 8: இப்போது நூடுல்ஸ் வைப்பதற்கான தட்டு தயார்.


படம் 9: அடுத்ததாக, மஞ்சள் க்ளேயை படத்தில் காட்டியுள்ளது போல கைகளால் தேய்த்துக்கொள்ளவும். இது நூடுல்ஸ் போன்ற வடிவத்தைக் கொடுக்கும்.
படம் 10: நூடுல்ஸ் வடிவங்களைச் செய்து வைத்துள்ள கறுப்பு நிற தட்டில் ஃபெவிக்கால் கொண்டு படத்தில் காட்டியுள்ளது போல ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டவும்.
படம் 11: இப்போது சிவப்பு, பச்சை நிறங்கள் கலக்கப்பட்ட தாய் க்ளேயைக் காய்கறி துருவல்கள் போல் செய்து நூடுல்ஸ் மேல் தூவி அலங்கரித்துக் காயவிடவும்.
படம் 12: கண்களைக் கவரும் மினியேச்சர் நூடுல்ஸ் தயார்.