Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே...

குழாயில் தண்ணீர் வரவில்லையே... பையனுக்குப் பள்ளிக்கூடக் கட்டணம் கட்டியாகணுமே... அம்மாவை

நமக்குள்ளே...

மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல வேண்டுமே... இப்படி தினம் தினம் ஏகப்பட்ட பிரச்னைகள் அல்லது ஒப்பந்தங்களுடன்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இவையெல்லாம், வாழ்க்கையின் அங்கங்களாகவே மாறிவிட்டவை. ஆனால், குடிகெடுக்கும் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி, கொடி பிடிக்க வேண்டும்; வளமான நிலங்களைப் பாலைவனமாக்கத் துடிக்கும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்; வாழ்க்கையையே பலி கேட்கும் ஸ்டெர்லைட் ஆலையின் மாசுக்கு எதிராகப் போராட வேண்டும்... இவையும் தினசரி வாழ்க்கையாக மாற ஆரம்பித்தால், வாழ்க்கை நரகம்தானே?

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகப் போராட வேண்டிய கட்டாயம் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இதோ... போர்க்களமாக மாறிக்கிடக்கிறது தென்கோடியிலிருக்கும் தூத்துக்குடி. ‘ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளால் காற்றும் நிலத்தடி நீரும் விஷமாகிக்கொண்டிருக்கின்றன’ என்று கொதித்தபடி, 99 நாள்களாக அறவழியில் போராட்டம் நடத்திவந்தனர் பொதுமக்கள். நூறாவது நாளன்று, காவல் துறையினரால் கண்மூடித்தனமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். இதுவரை 13 உயிர்கள் பறிபோயிருப்பதாகச் சொல்கிறது, அதிகாரபூர்வ அறிவிப்பு. துப்பாக்கி தூக்கும் முன்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், காவல்துறையினரால் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதற்கு, உயிரைப் பறித்திருக்கும் குண்டுகளே சாட்சி. 17 வயது மாணவி ஸ்னோலின், தாடைப்பகுதியில் சுடப்பட்டு உயிரிழந்திருக்கிறார். இன்னொரு பெண், தலை சிதறி இறந்திருக்கிறார்.

குடும்பம் குடும்பமாக மக்கள் போராடத் தொடங்கியபோதே தீர்வு கண்டிருக்க வேண்டிய அரசு இயந்திரம், மூன்று மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தது? தானாகவே போராட்டம் நீர்த்துப்போகட்டும் என்று காத்திருந்ததா? சமூக விரோதிகளை ஒடுக்கவே கடும் நடவடிக்கை என்று ஒவ்வொரு முறையும் அறிவிக்கிறது அரசு. ஆனால், அரசாங்கத்தால் இப்படிப்பட்ட பொய்யான முத்திரை குத்தி வளர்மதி, நந்தினி, திவ்யபாரதி எனக் கைது செய்யப்படுபவர்கள், நீதிமன்றங்களால் நிரபராதிகள் என்று விடுவிக்கப்படுவதுதானே இங்கே நிதர்சனமாக இருக்கிறது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடும் சுற்றுச்சூழல் மாசை உண்டாக்கி வந்த பசிஃபிக் காஸ் கம்பெனியை எதிர்த்துத் தனி ஒருத்தியாக நீதியை நிலைநாட்டிய பெண்மணி எரின் ப்ரோக்கோவிச். அதேபோல, தூத்துக்குடியில் ஆயிரமாயிரம் எரின் ப்ரோக்கோவிச்கள். குழந்தைகளைத் தோளில் சுமந்தபடி வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்க முனைவது, செய்திகளில் நாம் சட்டெனக் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல.

ஜனநாயகமென்பது... பிரச்னைகளுக்கு சுமுகமாகத் தீர்வை எட்டுவதுதான், துப்பாக்கியைத் தூக்குவதல்ல!

உரிமையுடன்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism