Published:Updated:

உணவும் உணர்வும்

உணவும் உணர்வும்
பிரீமியம் ஸ்டோரி
உணவும் உணர்வும்

அறுசுவை ப.தினேஷ்குமார்

உணவும் உணர்வும்

அறுசுவை ப.தினேஷ்குமார்

Published:Updated:
உணவும் உணர்வும்
பிரீமியம் ஸ்டோரி
உணவும் உணர்வும்
உணவும் உணர்வும்

ஷாஷா திருப்பதி, பாடகி

``வெளிநாட்டு உணவுன்னாலே எனக்கு பீட்சாதான் ரொம்பப் பிடிக்கும். அதுக்கடுத்து, `பிரெஞ்சு குசின்' எனக்கு வெரி வெரி ஃபேவரிட். சில வருஷங்களுக்கு முன்னாடி ஜெர்மனி போயிருந்தேன். முதன்முறையா அப்போதான் பிரெஞ்சு உணவுகள் சாப்பிட்டேன். அதுக்கப்புறம் எப்போ ஐரோப்பா போனாலும் பிரெஞ்சு குசின் சாப்பிடாமல் திரும்பறதில்லை. நீங்களும் சாப்பிட்டுப்பாருங்க... செம டேஸ்ட்டி!’’

உணவும் உணர்வும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உமாதேவி, பாடலாசிரியர்

``முதன்முதல்ல நான் சமைக்கும்போது, வெண்டைக்காயை நறுக்கி, தண்ணீர்ல போட்டுட்டேன். அப்படிப் போடக்கூடாதுனு எனக்குத் தெரியாது. என்னைப் பார்க்க வந்த பக்கத்து வீட்டு அக்கா, அதைப் பார்த்துட்டு சிரிச்சாங்க. `இது மாதிரி பண்ணவே கூடாது. வெண்டைக்காய் பிசுபிசுன்னு இருக்கும். அதைத் தண்ணீர்ல போட்டுட்டா சமைக்க முடியாது’ன்னு சொன்னாங்க. ஒரு மாதிரியாகிட்டேன். தண்ணீர்ல போட்ட வழுவழு வெண்டைக்காயை அள்ளிக் காட்டினாங்க. எனக்கு அழுகை வராத குறை. இப்படித்தான் என் சமையல் வாழ்க்கை தொடங்குச்சு!’’

உணவும் உணர்வும்

அருள்மொழி, வழக்குரைஞர்

``எங்க அம்மா எது செய்தாலுமே சிறப்பா இருக்கும். குறிப்பா, பொரியல் ரொம்ப ருசியா இருக்கும். எந்தப் பொரியல் செய்தாலும் அந்தக் காயோட நிறம் மாறாமல், எண்ணெய் மினுக்காமல், காய் தீய்ந்தும் போகாமல் அப்படியே வெந்து வாசனையோடு பொலபொலன்னு இருக்கும்.

இதற்கடுத்து அம்மாவோட ஸ்பெஷல்னா சேலத்தில் பிரசித்திபெற்ற `சந்தவம்’. இதை, அவ்வளவு சுலபமா செய்ய முடியாது. நேரம், உழைப்பு அதிகம் எடுத்துக்கும். செய்வதற்குக் குறைந்தபட்சம் ரெண்டு பேராவது தேவை. எங்களுக்குப் பிடிக்கும் என்பதால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அம்மா மிகவும் சுவையாகச் செய்து கொடுப்பார்.

அசைவத்தில் எங்க அம்மா செய்யும் பூரி கொத்துக்கறி மிகச் சிறப்பா இருக்கும்.’’

உணவும் உணர்வும்

சித்ரா, சின்னத்திரை நட்சத்திரம்

``எனக்கு ஃபிஷ் ஃப்ரைனா உசுரு. இதுக்காகவே மகாபலிபுரத்துல இருக்கிற `மூன்ரேக்கர்ஸ்’ ரெஸ்டாரன்ட்டுக்கு அடிக்கடி போவேன். ஃபிஷ் ஃப்ரைல தொக்கும் சேர்த்துக் கொடுப்பாங்க. அது வேற லெவல்!

மீனை வாயில வைக்கும்போதே வழுக்கிட்டுப் போயிடும்.  பிளேட் பிளேட்டா மீனை சாப்பிடும் ஒரே ஆள் நான்தான். அவ்வளவு ருசியா இருக்கும். இதுக்காகவே மாலை 4 மணிக்கு மகாபலிபுரத்துக்குக் குடும்பத்தோடு ஒரு ட்ரிப் போயிட்டு, டின்னர் சாப்பிட்டுட்டு வருவோம்.’’

உணவும் உணர்வும்

காயத்ரி, நடிகை

``எனக்கு ஸ்வீட்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதுலயும் ‘ரசமலாய்’னா ஒரு வேலையும் ஓடாது. பாதாம் பாலில் ஊறிப்போய் இருக்கும் அந்த ரசகுல்லா மாதிரியான குட்டி ஜாமுனைப் பார்த்தாலே சாப்பிடணும்னு தோணும். அதுதான் அந்த ஸ்வீட்டின் ஸ்பெஷல். என்னதான் பிடிச்ச ஸ்வீட்டா இருந்தாலும் கடைகள்லதான் சாப்பிடுவேன். வீட்டுல செய்ததில்லை. வீட்டுல அம்மா கொழுக்கட்டை செஞ்சு தருவாங்க. காரத்துல தட்டை, சீடை, முறுக்கு... இதையெல்லாம் விரும்பிச் சாப்பிடுவேன்.’’

உணவும் உணர்வும்

கே.பாலபாரதி,

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி


``எனக்கு தினையரிசிக் கஞ்சி அல்லது தினையரிசிச் சோறும் அதனுடன் முருங்கைக் குழம்பும் வைத்துச் சாப்பிட மிகவும் பிடிக்கும். சிறுவயதில் இந்தச் சுவையுடன்தான் நான் வளர்ந்தேன். அந்தக் காலத்தில் எங்கள் கிராமங்களிலேயே தினை விளையும். ஒருவித மஞ்சள் நிறத்துடன் நைஸாக இருக்கும்.

இது தவிர, கேப்பைக் களியும் கம்மங்கூழும்  விரும்பி அருந்துவேன். கம்பில் நிறைய சத்துகள் இருக்கின்றன. எங்களுடைய கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் கம்புதான் பயன்படுத்துவார்கள். கம்மஞ்சோற்றை உருட்டி மண்பானையில் போட்டுவிடுவோம். அடுத்த நாள் காலையில் அதைக் கரைத்துக் குடிப்போம். அதோடு பச்சை வெங்காயம் சேர்த்துக்கொண்டால்  இன்னும் சுவை கொடுக்கும். உணவில் நிறைய சிறுதானியங்கள் சேர்ப்பது எங்கள் வழக்கம்.

எனக்குப் பிடித்த தினையை இப்போது பார்ப்பதே அரிதாக இருக்கிறது. இருந்தாலும், கேழ்வரகை அரைத்து, கேழ்வரகு தோசை செய்து சாப்பிட்டு வருகிறோம்.’’

உணவும் உணர்வும்

குட்டி ரேவதி, எழுத்தாளர்

``பேலியோ உணவு பற்றி நியாண்டர் செல்வன் எழுதிய `பேலியோ டயட்’ புத்தகம் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களுள் ஒன்று. தமிழில் உணவு பற்றி வெளிவந்த புத்தகங்களுள் மிகவும் முக்கியமானது இது. உணவு பற்றியும் மனித உடல் பற்றியும் நோய்கள் இல்லாமல் வாழ்வது பற்றியும் சிறப்பாக எழுதியிருப்பார். இந்த நூல் மூலம் தமிழர்களுக்கு பேலியோ உணவு முறையைப் பரிந்துரைக்கிறார் நியாண்டர். மேலும், இதில் புற்றுநோய், நீரிழிவு இல்லாமல் வாழ்வது பற்றி ஆழமான கண்ணோட்டத்தில் நன்கு ஆய்வுசெய்து எழுதப்பட்டிருக்கும். ஒரு நண்பர் சிபாரிசு செய்ததன் மூலம் இந்தப் புத்தகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பேலியோ உணவுமுறையைத்தான் பின்பற்றுகிறோம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism