Published:Updated:

மன அழுத்தம் இல்லை... மனநிறைவுடன் சம்பாதிக்கிறேன்! - அனு பிராஸ்பர்

மன அழுத்தம் இல்லை... மனநிறைவுடன் சம்பாதிக்கிறேன்! - அனு பிராஸ்பர்
பிரீமியம் ஸ்டோரி
மன அழுத்தம் இல்லை... மனநிறைவுடன் சம்பாதிக்கிறேன்! - அனு பிராஸ்பர்

இது இனிய மாற்றம் கு.ஆனந்தராஜ், படம் : செ.விவேகானந்தன்

மன அழுத்தம் இல்லை... மனநிறைவுடன் சம்பாதிக்கிறேன்! - அனு பிராஸ்பர்

இது இனிய மாற்றம் கு.ஆனந்தராஜ், படம் : செ.விவேகானந்தன்

Published:Updated:
மன அழுத்தம் இல்லை... மனநிறைவுடன் சம்பாதிக்கிறேன்! - அனு பிராஸ்பர்
பிரீமியம் ஸ்டோரி
மன அழுத்தம் இல்லை... மனநிறைவுடன் சம்பாதிக்கிறேன்! - அனு பிராஸ்பர்

“ஆர்வம், ஈடுபாடு, அப்டேட்...இந்த மூணும் இருந்தா ஆபீஸ் போய் சம்பாதிக்கிறதைவிட வீட்டிலிருந்தே நிச்சயமா  நிறைய சம்பாதிக்கலாம்” என தம்ஸ் அப் காட்டிச் சிரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த அனு பிராஸ்பர். ஹோம்மேட் கேக் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுவரும் இவர், ஐ.டி ஊழியர்கள் பெறும் ஊதியத்தைவிட அதிகம் சம்பாதிக்கிறார். காரணம்... கேக் மற்றும் அதைச் சார்ந்த பேக்கரி தொழிலுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவதுதான்.

“சின்ன வயசுலருந்தே சமையல் கலையில் ஆர்வம் அதிகம். சார்ட்டர்ட் அக்கவுன்ட்டன்ட் கோர்ஸ் படிச்சுட்டு, ஒரு வருஷம் வேலைக்குப் போனேன். அந்த வேலையில மன அழுத்தம் அதிகமானதால, ஸ்ட்ரெஸ் ரிலீஃபுக்காக தினமும் முன்னிரவு நேரங்களில் கேக் செய்வேன். அது என் மன அழுத்தத்துக்கு வடிகாலா அமைஞ்சது. லீவ் நாள்கள்ல இதே வேலையா இருப்பேன். பல இடங்கள்லயும் விசாரிச்சு விசாரிச்சு, கேக் தயாரிப்பு விஷயங்களைக் கத்துக்கிட்டேன். தெரிஞ்ச பலருக்கும், ஓர் அன்புப் பரிசா நான் செஞ்ச கேக்கை கொடுப்பேன்’’ என்பவர், பணி அழுத்தம் காரணமாக 2013-ல் வேலையை விட்டிருக்கிறார்.

‘`கொஞ்ச நாள் ரெஸ்ட்ல இருந்துட்டு, அப்புறம் புது வேலை தேடிக்கலாம்னு இருந்தேன். அப்போ, பொழுதுபோக்குக்காக கேக் தயாரிப்புல இறங்க, அதில் என் ஆர்வமும் அர்ப்பணிப்பும் அதிகமாகிடுச்சு. ‘இதையே பிசினஸா பண்ணலாமே’ன்னு ஃப்ரெண்ட்ஸ் ஊக்கப்படுத்தினாங்க.

மன அழுத்தம் இல்லை... மனநிறைவுடன் சம்பாதிக்கிறேன்! - அனு பிராஸ்பர்

சில ஆயிரங்கள் முதலீட்டில் அடிப்படைத் தேவைகளுக்கான பொருள்களை வாங்கினேன். கேட்கிறவங்களுக்கு மட்டும் கேக் செஞ்சு கொடுத்துட்டு இருந்தேன். இன்னும் சிலருக்கு கேக் சாம்பிள் கொடுத்தேன். இந்தச் சின்ன முயற்சிகளே, எனக்கு நிறைய ஆர்டர்களைக் கொண்டுவந்து சேர்த்தன. வெடிங் கேக் ஆர்டர் கொடுத்தவங்களுக்கு, அவர்களின் முதல் வருடத் திருமண நாளை ஞாபகம் வைத்து, இலவசமா சர்ப்ரைஸ் கேக் அனுப்புவேன். அந்தச் சின்ன முயற்சி அந்தக் குடும்பங்களையெல்லாம் என் ரெகுலர் கஸ்டமர்ஸ் ஆக்கிடுச்சு” என்பவருக்கு, சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் ரெகுலர் கஸ்டமர்களாக இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மன அழுத்தம் இல்லை... மனநிறைவுடன் சம்பாதிக்கிறேன்! - அனு பிராஸ்பர்

“சீஸன் டைம்ல ஆர்டர்ஸ் அதிகமா வரும். சில நேரங்கள்ல ஆர்டர் குறைவாக இருக்கும். அப்போ கவலைப்படாம, டூர் போயிடுவேன். பயணங்கள் தர்ற புத்துணர்ச்சியோடு அங்குள்ள மக்களுடைய டேஸ்ட், கேக் தயாரிப்பில் வந்திருக்கும் புதுமைகள், புது யுக்திகள்னு தெரிஞ்சுப்பேன். அவற்றையெல்லாம் தொழிலில் அப்ளை செய்வேன். நான் தயாரிக்கிற கேக்குகளை ‘Mistletoe’ என்கிற என் ஃபேஸ்புக் பேஜ் மூலமாக அப்லோட் பண்றேன். அதன் மூலமாகவும் ஆர்டர்ஸ் வருது. திருமண நாள், பிறந்த நாள், கல்யாணம், வளைகாப்பு, கிரஹப்பிரவேசம், பெயர் சூட்டுகிற நிகழ்வு உள்ளிட்ட குடும்ப மற்றும் ஆபீஸ் நிகழ்ச்சிகள் பலவற்றுக்கும் பல வகையான தீம்கள்ல கேக் செஞ்சுகொடுக்கிறேன். பெரும்பாலும் கஸ்டமர்களே என் வீட்டுக்கு வந்து கேக்கை எடுத்துட்டுப் போயிடுவாங்க. தேவைப்பட்டால் நானும் டோர் டெலிவரி செய்வேன்’’ என்கிறவர், வொர்க் பிரஷரில் இருந்து தப்பித்து வந்து தொடங்கிய தொழில் இது என்பதால், இதிலும் அந்த அழுத்தம் புகுந்துவிடாதபடி பார்த்துக்கொள்வதில் கவனமாக இருக்கிறார்.

மன அழுத்தம் இல்லை... மனநிறைவுடன் சம்பாதிக்கிறேன்! - அனு பிராஸ்பர்

‘`கஸ்டமர் டார்கெட் பத்தியெல்லாம் எனக்கு ஆரம்பத்தில் இருந்து இப்போ வரை எந்தக் கவலையும் இல்லை. அந்த டென்ஷனை எடுத்தா, என் முந்தைய வேலைக்கும் இதுக்கும் வேறுபாடு இல்லாமப்போயிடும். மேலும், இந்தத் தொழில்ல கிடைக்கிற ஆத்ம திருப்தியும் மனநிறைவும் மிஸ் ஆகிடும். அதனால, டார்கெட் இருக்கக் கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன். என்றாலும், தொழிலை நேசிச்சு செய்றதாலேயே வருமானத்துக்குக் குறைவில்லை. என் பெற்றோரும் என் விருப்பப்படியே விட்டுட்டாங்க” எனப் புன்னகைக்கும் அனு, மாதம்தோறும் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை லாபம் சம்பாதிக்கிறார். சீஸன் நேரங்கள்ல இன்னும் கூடுதலான வருமானம் கிடைக்கிறதாம்.

வாவ்... வாழ்த்துகள் அனு!

வெற்றி நிச்சயம்!

“கேக் தயாரிப்பில் சுகர் ஃப்ளவர் டெகரேஷன் பயிற்சிக்குப் போயிருக்கேன். மத்தபடி யூடியூப்ல பார்த்தும், நானே வித்தியாசமா செய்து பார்த்தும் கத்துகிட்டதுதான் நிறைய. பேக்கிங் தொழில்ல வீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிப்பவர்களும் உண்டு. எல்லாமே நம்ம ஆர்வத்தில்தான் இருக்கு. இத்தொழிலில் ஈடுபட நினைக்கிறவங்க, தேவைப்பட்டால் பயிற்சி எடுத்துக்கலாம். ஆரம்பத்தில் பல மாதங்களுக்கு நம்ம தயாரிப்பை, தெரிஞ்ச பலருக்கும் சாம்பிள் கொடுத்து ஃபீட்பேக் வாங்கணும். கால மாற்றத்துக்கு ஏற்ப குழந்தைங்க, யங்ஸ்டர்ஸ், பெரியவங்கனு கஸ்டமர்களை ஈர்க்கும் யுக்தியைக் கத்துக்கணும். அதுக்கு பல வகையான வடிவம், டேஸ்ட், அட்ராக்‌ஷன், ஸ்பெஷல் ஆஃபர்ஸ், சர்ப்ரைஸ் கிஃப்ட்ஸ், ஹெல்த்துக்குப் பாதிப்பு இல்லாததுனு... கேக் தயாரிப்பில் பல விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கணும். அப்புறம் என்ன, வெற்றி நிச்சயம்தான்’’ என்கிறார் அனு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism