Published:Updated:

திருப்பூர் ஆன திருப் போர்!

Tiruppur
News
Tiruppur

பாரதிவாசன்

திருப்பூர் ஆன திருப் போர்!
திருப்பூர் ஆன திருப் போர்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'ப
தியம் கலைக்கூடம்’ மூலம் இலக்கிய நிகழ்வுகள் மற்றும் குறும் படப் பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருபவர் பாரதிவாசன். பல கவிதை நூல்களை வெளியிட்டு இருக்கும் இவர், 'பதியம்’ என்னும் இதழையும் நடத்திவருகிறார். இவர் தன் சொந்த ஊரான திருப்பூர் குறித்த நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

''திருப்பூரை வணிக நகரமாகத்தான் எல்லோருக்கும் தெரியும். உண்மையில் திருப்பூர் ஒரு வரலாற்று நகரம். திருப்பூர் என்கிற பெயருக்கு நிறைய வரலாறுகள் உள்ளன. சோழன் செங்கண்ணனுக்கும் சேரன் கணைக்கால் இரும்பொறைக்கும் இங்கு போர் நடந்தது. இரும்பொறை மிகப் பெரிய வீரனாக இருந்தாலும் அந்தப் போரில் சோழன் வெற்றி பெற்றான். சேரனை சிறைப் பிடித்தான்.

யுத்த தர்மப்படி கைது செய்யப்படும் மன்னனுக்குச் சில மரியாதைகள் தரப்பட வேண்டும். ஆனால், இரும்பொறையைச் சிறையில் அவமதிக்கிறார்கள். மானமே பெரிது என நினைத்த அவன் உண்ணாமல், உறங்காமல் தன்னையே வருத்திக்கொண்டு உயிர்த் துறக்கிறான். மானத்துக்காக சேரன் உயிர்விட்ட பெருமை மிகு இடம் என்பதால் இவ்வூரை, 'திரு’ப்போர் என்று அழைத்தனர். அந்தத் திருப் போர்தான் மருவி இன்று திருப்பூர் ஆகிவிட்டது. திருப்பூரைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் குப்புசாமி கல்வெட்டு ஆய்வுகள் மூலம், தான் எழுதிய 'திருப்பூர் வரலாறு’ என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

கொங்குச் சோழர் ஆட்சிக்காலத்தில், வட நாட்டினர் சிவன் கோயிலுக்குப் பூஜை செய்ய இங்கு வந்தார்கள். அவர்கள் திருப்பூரைப் பற்றிய ஸ்தல புராணம் ஒன்று எழுதி இருக்கிறார்கள். இன்று தாராபுரம் என்று அழைக்கப்படும் விடாபுரத்தில் பாண்டவர்கள் தங்கி இருந்தார்களாம். அங்கு வந்த

திருப்பூர் ஆன திருப் போர்!

கௌரவர்கள், பாண்டவர்களின் மாடுகளைத் திருடிச் சென்றுவிடுகிறார்கள். அந்த மாடுகளை மீண்டும் பாண்டவர்கள் வெற்றிகரமாக மீட்டுத் திரும்பிய

திருப்பூர் ஆன திருப் போர்!

ஊர் என்பதால், திருப்பூர் என்று பெயர் வந்தது என்கிறது அந்த ஸ்தல புராணம்' என்று தன் ஊரின் பெருமையைச் சொல்லும் பாரதிவாசன், 'நான் ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்து  தென்னம்பாளையம் நகராட்சித் தொடக்கப் பள்ளியில 5-ம் வகுப்பு வரை படித்தேன். வறுமை காரணமாக அதற்கு மேல் படிக்க முடியவில்லை. அதன்பின்பு எல்லாம் அனுபவப் பாடம்தான். அன்றைய காலகட்டத்தில் திருப்பூர் எளிமையான நகரம். நொய்யலின் கருணையால் முப்போகம் விளையும் விவசாய பூமி. திருப்பூர் குமரன் ஒருவர் போதும் எங்கள் ஊர் புகழுக்கு.

திருப்பூருக்கு, காந்தி ஐந்து முறை வருகை தந்து உள்ளார். திருப்பூரைச் சுற்றி பருத்தி விளைச்சலினால், நெசவுத் தொழில் சிறந்து விளங்கியது. அந்நியத் துணிகளைப் புறக்கணித்த காந்தி, திருப்பூருக்கு அருகில் இருக்கும் இடுவாய், இடுவம்பாளையம் ஆகிய நெசவாளர் கிராமங்களுக்கு வந்து தங்கி இருக்கிறார். காந்தி இறந்த பிறகு அவருடைய அஸ்தி இந்தியாவில் பல்வேறு ஊர்களில்  வைக்கப்பட்டது. அவற்றில் ஒன்று திருப்பூர். அந்த இடம்தான் இன்று காந்தி நகர்.

கடந்த 78-79-களில் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் வந்த பிறகு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்பட்டது. வந்தாரை வாழவைக்கும் ஊராக மாறியது திருப்பூர். இதனால், 'திருப்பூரில் 100 ரூபாய் கீழே விழுந்துவிட்டால் குனிந்து எடுக்க மாட்டார்கள். அதை எடுத்து நிமிர்வதற்குள் 200 ரூபாய் சம்பாதித்துவிடலாம்...’ என்று சொல்வார்கள். ஆனால், இந்தப் பெருமைக்காக நாங்கள் கொடுத்த விலை மிக அதிகம். பசுமையைத் தொலைத்தோம். நொய்யலைத் தொலைத்தோம். சுத்தமானக் காற்றைத் தொலைத்தோம். ஆனால், எத்தனை தொலைத்தாலும் என் மனதை விட்டு நீங்காது என் ஊர்!'' என்று நெகிழ்கிறார் பாரதி வாசன்.

திருப்பூர் ஆன திருப் போர்!
திருப்பூர் ஆன திருப் போர்!

சந்திப்பு, படங்கள்: கி.ச.திலீபன்