Published:Updated:

“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்!”

“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்!”
பிரீமியம் ஸ்டோரி
“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்!”

தார்மிக் லீ - படங்கள்: தீரன் - ஓவியம்: சிவா

“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்!”

தார்மிக் லீ - படங்கள்: தீரன் - ஓவியம்: சிவா

Published:Updated:
“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்!”
பிரீமியம் ஸ்டோரி
“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்!”

 “ஒரு மதத்துக்குப் பிரச்னை வந்தா ஒரு தலைவன் வர்றான், போராட்டம் நடத்துறான். ஓர் ஆலயத்தை இடிக்கிறாங்கன்னா ஒரு கும்பல் கூடுது, போராட்டம் நடத்துது, நீங்களும் வாங்கடானு கூப்பிடுது. ‘எதுக்கு’னு கேட்டா, `சாமிக்கு பிரச்னைடா’னு சொல்றாங்க.

`மனுஷனுக்கு பிரச்னை, அதைச் சரி பண்ணணும்’னு சொன்னா யாரையும் காணோம். ஏன்?” கொதிப்பாகப் பேசுகிறார் விஜய் சேதுபதி.     

ஸ்டெர்லைட் போராட்ட மரணங்களில் ரொம்பவே கோபமாக இருக்கிறார். அவரோடு பேசினேன்.

“ ‘எங்களை வாழ விடுங்கள்’ - இதுதான் இந்தப் போராட்டத்துக்கான காரணம். அந்த ஆலையால் நாங்க அழிஞ்சிட்டு இருக்கோம். நாங்க அழியிறது மட்டுமில்லாம எங்க சந்ததியும் அழிஞ்சிடுவாங்கனு பயமா இருக்கு, காத்து கெட்டுப் போயிடுச்சு. குடிக்க நல்ல தண்ணி இல்லை.

‘இந்த ஆலை இருக்கட்டும்’னு சொல்ற எல்லாரும் முதல்ல உங்க குழந்தை குட்டிகளைக் கூட்டிட்டு எங்க வீடுகளுக்கு வாங்க. எங்ககூட இருந்து அந்தத் தண்ணியை குடிச்சுப் புழங்குங்க. நீங்க இதெல்லாம் பண்ணிட்டு,  நாங்க போராட்டம் பண்றதை தப்புனு சொல்லலாம்.

காத்து, தண்ணினு எங்க அடிப்படை உரிமைகள் எல்லாத்தையும் கெடுத்து சீரழிச்சிட்டு `அமைதியா இருங்க’னு சொன்னா எப்படிங்க சும்மா இருக்க முடியும்.

“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்!”

‘கொஞ்சநாள் போராடுவாங்க, பிறகு சோத்துப் பிரச்னை வந்ததும் போயிடுவாங்க’னு நினைச்சிருக்காங்க. ஆனா எங்க பிரச்னை இப்ப அதையும் தாண்டி போயிருச்சு. இவ்வளவு நாள் கண்டுக்காம, சில அசிங்கமான வேலைகளையும் பார்த்துட்டு கடைசியில், ‘கட்டுப்படுத்த முடியலை அதனால சுட்டுத் தள்ளிட்டோம்’னு சொல்றதுக்கு பேரு என்ன?

துப்பாக்கிச் சூடு மாதிரியான பெரிய முடிவுகளை எடுக்கும்போது அதை முன்னாடியே ஏன் சொல்லலை? திடீர்னு துப்பாக்கிச் சூடு நடத்தினது ஏற்கனவே முடிவு பண்ணப்பட்டதோனு எனக்கு சந்தேகமா இருக்கு. ஆனா ஒண்ணு, இதை யாரெல்லாம் பண்ணினாங்களோ அவங்களுக்குப் பெரிய ஆபத்து இருக்கு.”

“என்ன ஆபத்து?”


““முன்னெல்லாம் ஒரு செய்தி பேப்பரில் வந்துட்டு போயிடும். ஒவ்வொருத்தரும் பண்ணினதும் பேசினதும் அஞ்சு வருஷங்களில் மக்களுக்கும் மறந்துபோயிடும். ஆனா, இப்ப வர்ற ஒவ்வொரு செய்தியும் இழப்பும் ஆவணமாகுது. இன்னைக்கு ஒவ்வொருத்தர் கையிலயும் ஒவ்வொரு மீடியா இருக்கு. ஸ்டெர்லைட் பிரச்னையில ஆரம்பிச்சு, மீத்தேன், அனிதா இறப்பு, மே 17, நீட், ஜல்லிக்கட்டுனு எல்லாத்தையுமே மக்கள் ஞாபகம் வெச்சு இருக்கிறாங்க. இந்த ஞாபகம்தான் எலெக்‌ஷன்ல நிக்கிற ஒவ்வொருத்தருக்கும் பேராபத்தா வந்து நிக்கும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்!”

“தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கிற போராட்டங்களை ஒரு சாமானியனா எப்படி பார்க்கறீங்க?”

``இதற்குக் காரணமானவங்க அவங்களுக்கே தெரியாம ஒரு ஆபத்துக்கு  விதை போட்டிருக்காங்க. இவங்க இப்படி பண்றதால மக்கள் சக்தி ஒண்ணு இவங்களுக்கு எதிரா தானாவே சேர்ந்துட்டே இருக்கு. இது பெரிய அபாயமணி. மக்கள் மத்தியில இந்த உணர்வு இன்னும் அதிகமானா, அதை இங்க இருக்கிற எவனாலயும் அடக்க முடியாது.  முக்கியமா இந்த அரசியல் தலைவர்கள் இருக்காங்களே.. ஏன்யா மக்களை எல்லாம் மொத்தா அழிச்சிட்டு, யாரை வெச்சு, என்ன மக்களாட்சி பண்ணப் போறீங்க?

2014 தேர்தலில் இருந்த மக்கள் மனநிலை வேற... வரப்போற 2019 தேர்தலில் உள்ள மக்கள் மனநிலை வேற... முன்ன சீரியல், சினிமானு பேசிட்டு இருந்தவங்க, இப்ப அரசியல் சூழலைப் பற்றிப்பேசி நிறைய அரசியல் அறிவோட, கோபத்தோட இருக்காங்க. காத்திருங்க, நீங்க வெச்சது உங்களுக்கே திரும்ப வரும்!”

“சினிமாவுல உள்ள சிலரே அரசியலைக் கேளிக்கையாக்கி அதையே தங்களோட படத்துக்கு விளம்பரமா ஆக்கிக்கிற கலாசாரத்தை எப்படிப் பார்க்குறீங்க?”

“முதல்ல பிரபலங்கள் எல்லாரும் நீங்க நினைக்கிற மாதிரி நடந்துக்கணும்னு நினைக்காதீங்க. நான் இப்ப சொல்லிட்டு இருக்கிறது என் சொந்தக் கருத்து, இதை என் குழந்தையே ஏத்துக்குமானு தெரியாது. இந்தக் கேள்வியை எல்லாம் நீங்க கார்ப்பரேட் நிறுவனங்களைத்தான் கேட்கணும். ஏன்னா மக்களிடம் நேரடியா, அதிகமா காசு வாங்குகிறது அவங்கதான். நீங்க வாங்குற சோப்பு, சீப்புல இருந்து போடுற டிரஸ் வரைக்கும் அதிகப்படியான காசை கார்பரேட் நிறுவனங்கள்தான் வாங்குது. ஆனா, அவனை நாம எந்தக் கேள்வியும் கேட்கறதில்ல.  `உலகத்தில் எந்த மூலையில எந்தப் பிரச்னை நடந்தாலும் அதுக்குப் பின்னாடி ஒரு வியாபாரி இருப்பான்’னு `பூலோகம்’ படத்தில் ஒரு வசனம் வரும். தூத்துக்குடி மரணங்களுக்கு யார் காரணம்... ஒரு வியாபாரிதானே?”

“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்!”

“இதற்கெல்லாம் தீர்வா நீங்க அரசியல் கட்சிகளிடம் இருந்து என்ன எதிர்பார்க்குறீங்க?”

“இதற்கான தீர்வு, யார்கிட்டேயும் கையேந்தி கிடைக்கப்போறது இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிறதுகூட அரசு தலைமைதாங்கி முடிச்சு வைக்க வேண்டிய பிரச்னைதான். அதையும் மக்கள்மேல் தூக்கிப்போட்டீங்கன்னா, அவங்களால எவ்வளவுதான் போராட முடியும்?  எதுக்கெல்லாம் போராடமுடியும். எங்கள் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கத்தான் மக்கள் ஓட்டுப்போட்டு தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். அதையும் செய்யலை, இதையும் செய்யலை. ஆனா கடைசிவரை உங்களை வெச்சு செய்வோம்னு சொல்றாங்க. எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி அரசியல் பண்றாங்கனு பார்ப்போம்.”

“நீங்க அரசியலுக்கு வருவீங்களா? எப்படிப்பட்ட தலைவன் தமிழ்நாட்டுக்குத் தேவைனு நினைக்கிறீங்க?”

“நான் சத்தியமா அரசியலுக்கு வரமாட்டேன். ஏன்னா எனக்கு மக்கள் மேல அக்கறை இருக்கும் அளவுக்கு அரசியல் அறிவு கிடையாது. அதுக்கான சிந்தனையும்கூட எனக்கு இல்லை. அந்த அறிவு, சிந்தனையில்லாம, அந்த இடத்தில் போய் உட்காரக்கூடாது. ‘இங்க நடக்கிறது சரி’னு ஒரு சிலர் சொல்றாங்க, சிலர் ‘தப்பு’னு சொல்றாங்க. இதுக்கே தெளிவான முடிவை நம்மால எடுக்க முடியலை. ஆனா இப்ப இருக்கிற இளைஞர்கள் அப்படி இல்லை. நிறைய தெளிவோடு செயல்படுகிறாங்க. அரசியல் அறிவோட இயங்குறாங்க. அவங்கதான் அரசியலுக்கு வரணும். வாங்கடா பசங்களா!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism