Published:Updated:

என் ஊர் !

படைக்கும் பிரம்மாவுக்கு கோயில் படைத்தோம் !க.பூபாலன் படங்கள்: எஸ்.தேவராஜன்

புலியூர் காட்டுசாகை

##~##

பா.ம.க-வில் இருந்து விலகி, பரபரப்பு கிளப்பிய  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்வேல் முருகன், தன் சொந்த ஊரான புலியூர் காட்டுசாகை குறித்து இங்கே பேசுகிறார்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அந்தக் காலத்தில் எங்கள் ஊர் மற்றும் அதன் சுற்றுவட்டாரமே பெரும் காடாகத்தான் இருந்ததாம். அப்போது இந்தப் பகுதியில் புலிகள் அதிகமாகவாழ்ந்த தாகவும் அதனாலேயே புலியூர் என்ற பெயர் வந்ததாக வும் சொல்வார்கள். முப்போகமும் விளையும் பூமி எங்கள் செம்மண் பூமி. ஊரைச் சுற்றி சித்தேரி, வெங்கலத்தான் ஏரி, பெருமாள் ஏரி, ஊத்துக்கேணி, வணித்தான் ஏரி, சின்னகுள்ளான் ஏரி, புறா குட்டை என்று ஏராளமான நீர்நிலைகள் உள்ளன.  வேறுஎங்கும் காணப்படாத ஆர்ட்டீசியன் ஊற்றும் இங்கே உண்டு. கோடை காலத்திலும் வற்றாத கிணறுகள் ஊற்றெடுத்து தண்ணீர் ததும்பிக்கொண்டு இருக்கும். இப்போதோ நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணற்றுக்குள் தண்ணீரை எட்டிப் பார்க்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

என் ஊர் !

எங்கள் ஊர் அந்தக் காலத்தில் காடாக இருந்தது என்பதற்கு நெய்வேலியே எடுத்துக்காட்டு. எங்கு பார்த்தாலும் முந்திரிக் காடாகக் காட்சி அளிக்கும் செம்மண் பூமி அது. சோழர்கள் காலத்தில் வெங்கலத்தான் ஏரியில் ஒரு தேர் மூழ்கி விட்டதாம். அதை வெளியே எடுக்கவேண் டும் என்றால், கர்ப்பிணிப் பெண்ணை பலி கொடுக்கவேண்டும் என்று சொல்லப் பட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட் டதாம். கிணற்றின் ஆழத்துக்காகச் சொல்லப் பட்ட சம்பவம் இது.

என் ஊர் !

கி.பி. 12-ம் நூற்றாண்டில் பராந்தகச் சோழனால் வெட்டப்பட்ட பெருமாள் ஏரியில் கிடைக்கும் மீன்கள் அவ்வளவு ருசியாக இருக்கும். படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கு  வேறு எங்கும் கோயில்களோ சிலைகளோ கிடையாது. ஆனால், இங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாவுக்கு பஞ்சலோக சிலை உள்ளது. இத்துடன் அம்மனுக்கும் சேர்த்து மொத்தம் 16 பஞ்ச லோகச் சிலைகள் இங்கு உள்ளன.

என் ஊர் !

புலியூரில் இருக்கும் தொடக்கப் பள்ளியில்தான் படித்தேன். அப்போது எல்லாம் ஓராசிரியர் பள்ளிதான். கட்டியாங்குப்பம் ராமு வாத்தியார் என்றால் எல்லோருக்கும் பயம். ஆனால், நான் மட்டும் அவரை எதிர்த்துக் கேள்விகேட்டுக் கொண்டே இருப்பேன். ஒரு கட்டத்தில் என் மீது பிரியம் வந்து என்னை வகுப்புத் தலைவனாக்கி, பள்ளியின் சாவியையும் என் கையில் கொடுத்தார். நான்தான் தினமும் வகுப்பைத் திறந்து, கூட்டிச் சுத்தம் செய்வேன். விடுமுறை நாட்களில் செல்வகுமரன் ரைஸ்மில்லுக்குச் சென்று, அங்கு இருக்கும் புறாக்களை அடித்து அங்கேயே சமைத்து சாப்பிடுவதில் எனக்கும் நண்பர்களுக்கும் அவ்வளவு கொண் டாட்டம்! இரவானால் போதும்,  சாப்பாடு முடித்துவிட்டு முந்திரிக் காட்டுக்கு நண்பர்களுடன் எலி வேட்டைக்குச் சென்றுவிடுவோம். முந்திரிக் காட்டு நிழலில் நொண்டி ஆட்டம், கில்லி, பம்பரம் என்று எங்கள் கால்தடம் பதியாத இடங்களே இல்லை. எனக்கு 15 வயதாக இருக்கும்போது, குள்ளஞ்சாவடிக்கு விடுதலைப்புலிகள் பயிற்சிக்கு வந்தனர். அவர்களுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

என் ஊர் !

நான் சிறுவனாக இருந்தபோது, இப்போது தே.மு.தி.க-வில் இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர். எங்கள் ஊருக்கு அவர் வரும்போது ஏகப்பட்ட கார்கள் அணிவகுக்கும். அந்த சைரன் கார் அணிவரிசையைப் பார்க்க ஊருக்குள் கூட்டம் களைகட்டும். பண்ருட்டியாருக்கு உதவியாளராக இருந்தவர், என் சித்தப்பா. எனவே, பண்ருட்டியார் என்னை அப்போது செல்லமெல்லாம் கொஞ்சியிருக்கிறார்.

வன்னியர் சங்கத்தின் மூலம் நேரடி அரசிய  லுக்கு வந்து தமிழகத்தின் பல பகுதி களுக்கும் சுற்றித் திரிந்து இருக்கிறேன். இப்போது, எந்த மண்ணில் இருந்து என் வாழ்க்கை தொடங்கியதோ அதே மண்ணில் இருந்து புதிதாக ஓர் அரசியல் வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறேன். நிச்சயம் இந்த மண் என்னை வாழவைக்கும் என்ற நம்பிக்கை உண்டு!''