பிரீமியம் ஸ்டோரி

ங்களின் நிகரற்ற ஆதரவின் பலத்தோடு, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது ‘விகடன் தடம்’. கடந்த இரண்டு ஆண்டுக்காலப் பயணத்தில், உங்களின் கருத்துகளும், விமர்சனங்களும், பங்களிப்புகளும் எங்களைப் பெரிதும் வலுப்படுத்தி வந்திருக்கின்றன. தொடர்ச்சியான உங்கள் ஆதரவை வேண்டுவதோடு, நன்றிகளையும் உரித்தாக்குகிறோம். 

தலையங்கம்
தலையங்கம்

வரலாற்றில் மனித இனத்தை இவ்வளவு தூரம் பயணிக்கச் செய்தவை கேள்விகள்தாம். புரிபடாத பதில்களை விசாரிக்கத்தான் இலக்கியங்களைப் படைக்கிறோம்; இந்த வாழ்வை இன்னும் இன்னுமென வாழ்ந்து பார்க்கிறோம்; ஓயாது சகல வழிகளிலும் உரையாடித் தீர்க்கிறோம். இது 25-வது சிறப்பிதழ் என்பதால், தமிழின் முக்கியமான 25 ஆளுமைகளிடம் 25 கேள்விகளைத் தொடுத்து, பதில்களைத் தொகுத்திருக்கிறோம். மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் எனப் பல்வேறு துறை சார்ந்த கேள்விகளும் பதில்களும், இன்றைய சூழலில் ஓர் உரையாடலைத் தோற்றுவிக்கும் என நம்புகிறோம். உரையாடும் சத்தமே ஒரு சமூகத்தின் உயிர்ப்புள்ள இசை; அது எங்கும் பரவ வேண்டும்.

காலத்தில் தடம் பதித்து இணைந்து நடப்போம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு