Published:Updated:

வார்த்தைகளைக் கொட்டினால் வாழ்க்கையை இழப்பீர்கள் !

நா.இள.அறவாழி படங்கள்: ஆ.நந்தகுமார்

##~##
'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அவர் நல்லவராவதும், தீயவராவதும் 
 அன்னை வளர்ப்பினிலே...’

- பாடல் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, 'சந்தோஷ நண்பன் இல்ல’த்துக்குச் சரியாகப் பொருந் தும். காரணம், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளின் சரணாலயமாகக் கடந்த 16 வருடங்களாக இயங்கிவருகிறது இந்த இல்லம்!

ஒரு வயது முதல் 18 வயது வரை உள்ள 45 ஆண் பிள்ளைகளும் 45 பெண் பிள்ளைகளும் தங்கி உள்ள இந்த இல்லத்தின் கதை சொல்கிறார் நிர்வாகி மங்கலோரியன்.

''1994-ல் பேப்பர் பொறுக்கும் சிறுவர்கள், சாலையில் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்கள், குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகளுக்காக ஆரம்பிச்சோம்.  ஆரம்பத் தில் 35 குழந்தைகள். அதில் பாதிப் பேர் பேப்பர் பொறுக்கிட்டு இருந்தவங்க, மீதிப் பேர் சின்னச் சின்ன தப்புப் பண்ணிட்டு பயந்து ஊரைவிட்டு ஓடிவந்த குழந்தைகள். பேப்பர் பொறுக்கும் குழந்தைகள் பெரும் பாலும் ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் பழகியிருப்பாங்க.  15 வயசுல பீடி, சிகரெட், பாக்கு போட கத்துட்டுஇருப் பாங்க. அப்போ எல்லாம் தெருவுக்குத் தெரு குறைஞ்சது இது மாதிரி ரெண்டு குழந்தைங்க இருப்பாங்க.

வார்த்தைகளைக் கொட்டினால் வாழ்க்கையை இழப்பீர்கள் !

மத்தவங்களால் புறக்கணிக்கப்பட்ட இந்தக் குழந் தைங்க, முரட்டுத்தனமா இருப்பாங்க. அதனால் எடுத்த வுடனே பேச மாட்டாங்க. 'இன்னிக்கு எவ்ளோ பேப்பர் வித்துச்சு?’, 'சாப்ட்டீங்களா?’, 'மழைக் காலமா இருக்கே. எங்கேப்பாதங்கு வீங்க?’ - இப்படி அன்பா, அனுசரணையாப் பேச்சு கொடுக்கணும்.  இப்படிப் பேசப் பேசத்தான் அவங்களுக்கும் எங்க மேல நம்பிக்கை வரும். அப்புறம்தான், 'உங்களை மாதிரி இருக்கிற குழந்தைகளுக்கு இல்லம் நடத்துறோம். நீங்களும் வந்து தங்கிக்கலாம், குளிச்சிக்கலாம், சாப்பிட்டுக்கலாம். ஆனா, ஒரு நிபந்தனை. இரவு 9 மணிக்குள்ள இங்கே இருக்கணும். அதுக்கு அப்புறம் வந்தீங்கன்னா சேர்த்துக்க மாட்டோம்’னு தெளிவாச் சொல்லிடுவோம். அவங்க வந்தவுடனே அவங்ககிட்டே இருக்கிற சிகரெட் பாக்கெட், பீடிக்கட்டு, கஞ்

சாப் பொட்டலம் எல்லாத்தையும் வாங்கிட்டு, 'என்னென்ன கொடுத்திருக்கீங் களோ... அதை காலையில வாங்கிக்கங்க’னு சொல்லிடுவோம். காலையில் சிலர்கூச்சப் பட்டு வாங்காமப் போயிடுவாங்க.இன்னும் சிலர் ரொம்ப இயல்பா, தைரியமா வந்து அதையெல்லாம் கேட்பாங்க.

வார்த்தைகளைக் கொட்டினால் வாழ்க்கையை இழப்பீர்கள் !

மெள்ள வாழைப் பழத்தில ஊசி ஏத்தற மாதிரி அறிவுரைகள் சொல்வோம். கொஞ்சம் கொஞ்சமா அவங்களை இருட்டு வாழ்க்கையில் இருந்து மீட்டு படிக்கவைப்போம்.  

இந்தப் பசங்க எல்லாம் எதுக்காக வீட்டை விட்டு ஓடி வந்தாங்கனு விசாரிச்சா, ரொம்பவே கஷ்டமா இருக்கும். பெற்றோரால் புறக்கணிக்கப் பட்ட பிள்ளைகள்தான் அதிகம். ஒரு பையனோட அப்பா இறந்துட்டாங்க. அம்மா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவங்களுக்கு ரெண்டு குழந்தைங்க. யாரோட குழந்தை வீட்டில் இருக்கணும்னு பிரச்னை. கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சண்டை வர, ரெண்டு குழந்தைகளுமே வேணாம்னு கொடுமையான முடிவுக்கு வந்தாங்க. பையனை யூனிஃபார்ம் போட்டுவிட்டு 200 ரூபாய் பணமும் பையில் போட்டு ஒரு பஸ்ஸுல ஏத்திவிட்டுட்டாங்க. எங்கெங்கோ சுத்தி அந்தப் பையன் எங்கஇல்லத் துக்கு வந்து சேர்ந்துட்டான். ஆனா, அந்த இன்னொரு குழந்தை என்ன ஆகி இருக்கும்? நினைச்சாலே கலக்கமா இருக்கு.

வார்த்தைகளைக் கொட்டினால் வாழ்க்கையை இழப்பீர்கள் !

சின்னப் பசங்க வீட்ல ஏதாவது தப்புப் பண் ணிட்டா கொலைக் குத்தம் செய்த மாதிரி பெற் றோர் கண்டிக்கிறாங்க. கொட்டப்பட்டவார்த்தை களை மட்டும் இல்லை; அவங்க வாழ்க்கையையும் மறுபடியும் அள்ளி அரவணைக்கிறது கஷ்டம்னு பெற்றோர் உணரணும். இந்தத் திட்டுகளுக்காகவே பயந்து பசங்க காசைத் திருடிட்டு பஸ் ஏறி வேற ஊருக்குப் போய்டுவாங்க. கையில் காசு இருக்கிற வரைக்கும் இருந்துட்டு திரும்பச் சொந்த ஊருக் குப் போற பிள்ளைங்க ரொம்பக் குறைவு. 'இந்த ஊரில் யாருக்கும் நம்மைத் தெரியாது’னு தப்பான தொழிலில் ஈடுபடுறவங்கதான் அதிகம். அன்பு மட்டும்தான் இந்த உலகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரே மருந்து... உன்னதமான மருந்தும் அதுதான்!'' என்று மென் மையாக முடித்தார் மங்கலோரியன்.

ஆதரவற்ற இந்தக் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்கச் செய்வதோடு அவர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளை யும் நிறைவு செய்கிறார்கள் இவர்கள்.

நல்லது தொடரட்டும் !