Published:Updated:

மில்க் ரன் பற்றித் தெரியுமா? - 6

மில்க் ரன் பற்றித் தெரியுமா? - 6
பிரீமியம் ஸ்டோரி
மில்க் ரன் பற்றித் தெரியுமா? - 6

தொடர் / லாஜிஸ்டிக்ஸ்ரவிச்சந்திரன், டெபுட்டி மேனேஜிங் டைரக்டர், டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்

மில்க் ரன் பற்றித் தெரியுமா? - 6

தொடர் / லாஜிஸ்டிக்ஸ்ரவிச்சந்திரன், டெபுட்டி மேனேஜிங் டைரக்டர், டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ்

Published:Updated:
மில்க் ரன் பற்றித் தெரியுமா? - 6
பிரீமியம் ஸ்டோரி
மில்க் ரன் பற்றித் தெரியுமா? - 6

க்வொர்த் லூயிஸ், GST பற்றி எல்லாம் எல்லோருக்கும்  ஈஸியாகப் புரியாது. அதேபோல்தான் லாஜிஸ்டிக்ஸ். ‘ஒரு பொருளை இன்னோரு இடத்துக்குக் கொண்டு சேர்ப்பது’ - என்றுதான் லாஜிஸ்டிக்ஸ் பற்றிய பலரும் புரிந்துகொள்கிறார்கள். இதை இத்தனை எளிமையாக்கிவிட முடியாது. லாஜிஸ்டிக்ஸ் கடல் போன்றது. அதில் 3PL என்றால், தேர்டு பார்ட்டி லாஜிஸ்டிக்ஸ் என்று அர்த்தம். மூன்றாவது மனிதர் ஒருவர் நமக்கான பொருட்களை சப்ளை செய்வதில் ஓனர்ஷிப் எடுக்கிறார் என்றால், அதுதான் 3PL. இதில் நிறைய கட்டங்கள் உண்டு. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

என்னிடம் சரக்கு இருக்கிறது. பத்து டிரான்ஸ்போர்ட்டர்களை வரவைத்து லோடு அடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இது சிரமமான வேலை. அப்போது மூன்றாவது நபர் ஒருவர், இந்த பத்து டிரான்ஸ்போர்ட்டர்களையும் மொத்தமாக ஒரே கோட்டில் இணைத்து, ஒரே வேலையாக, ஒரே பில்லில் முடித்துத் தர முன்வருகிறார். எனக்கு பத்து பேரிடம் பேச வேண்டிய அவசியமில்லை. அந்த மூன்றாவது மனிதரிடம் லிங்க் வைத்துக்கொண்டால் போதும்; பில் தொகை, டிஸ்கவுன்ட் எல்லாம் நாம் பேசிக்கொள்ள வேண்டியதுதான். 3PL-ல் இது ஒருவகையான லெவல்.

மில்க் ரன் பற்றித் தெரியுமா? - 6

ஒரு தொழிற்சாலை இருக்கிறது. ஒரு ட்ரக்கில் லோடு ஏற்றி இடம் மாற்றுவார்கள். மூன்று நாட்கள் தயாராகும் பொருட்களை, மொத்தமாக ஒரே லோடில் அடித்தால்தான் லாபம் என்பது அவர்களின் கணிப்பு. அப்போது மூன்று நாட்கள் தயாராகும் பொருட்களை வைக்க ஸ்டோரேஜ் ஸ்பேஸ் தேவை. இங்கேயும் 3PL உதவும். ஒவ்வொரு நாள் தயாராகும் பொருட்களை தினமும் டெலிவரி செய்ய... மூன்றாவது நபர் வந்து அந்த ஆர்டரை எடுக்கலாம். இது ஸ்டோரேஜ் சம்பந்தமான தேவை.

உதாரணத்துக்கு, முன்பெல்லாம் அரிசியை மூட்டையாக வாங்கிப் பயன்படுத்தி வந்தோம். இப்போது மூட்டையை வாங்கிப் பயன்படுத்துபவர்கள் குறைந்துவிட்டார்கள். தேவைக்கேற்ப ஒரு கிலோவோ, இரண்டு கிலோவோ வாங்கி அந்தந்த நேரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். காரணம், அரிசி மூட்டை வீட்டில் இடத்தை அடைக்கிறது என்று நினைக்கலாம். அதை எலிகளிடம், பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய  அவசியம் இருக்காது. அந்த ஒரு கிலோ அரிசியும் உங்கள் வீட்டுக்கே டெலிவரி ஆகிவிடுகிறது. இது ஒரு வகையான 3PL.

இதுதான் கவனிக்க வேண்டிய ஸ்டேஜ். இதற்குப் பெயர் மில்க் ரன். இப்போது பாதி லாஜிஸ்டிக்ஸ், இந்த மில்க் ரன் அடிப்படையில்தான் இயங்குகிறது. அதாவது, முந்தைய காலங்களில் எல்லோர் வீட்டிலும் மாடுகள் இருக்கும். எல்லோர் வீட்டிலும் பால் கறப்பார்கள். இதில் ஒரு வியாபார யுத்தியைக் கடைப்பிடித்தார்கள். மாடு இல்லாதவர், மாடு உள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று லிட்டர் கணக்கில் பால் வாங்கி, சந்தைக்குக் கொண்டுவந்து விற்கவும் செய்வார்; மொத்தமாக ஓரிடத்தில் கைமாற்றியும் விடுவார். இதுதான் மில்க் ரன். அமெரிக்கக் கலாசாரத்தில் பால்காரர் ஒருவர், பால் பாட்டில்களை விநியோகம் செய்து, அடுத்த நாள் காலி பாட்டில்களை மக்களிடம் சேகரித்து, மறுபடியும் காலியை நிரப்பி ஃபுல் பாட்டிலை விநியோகம் செய்வார். இதையும் மில்க் ரன் கலாசாரம் என்கிறார்கள். இதுதான் அந்தக் காலத்து மில்க் ரன் லாஜிஸ்டிக்.

சொல்லப்போனால், லாஜிஸ்டிக்கில் 3PL-ன் அடிப்படையே இந்த மில்க் ரன்னில் இருந்துதான் உருவானது என்று சொல்லலாம். ‘நீங்கள் 5 பேரிடம் சென்று உங்கள் சரக்குகளை என்னிடம் கொண்டுவந்து சேர்த்து விடுங்கள்’ என்று கூறுவது மாதிரிதான் இந்த பிசினஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மில்க் ரன் பற்றித் தெரியுமா? - 6

1999-ல் முதன்முறையாக ஃபோர்டு நிறுவனத்தை வைத்து இந்த கான்செப்ட்டை நாங்கள் ஆரம்பித்துவைத்தோம். அதாவது, ஃபோர்டு முதன்முதலில் மறைமலை நகருக்கு வந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஃபோர்டுக்கு 100 இடங்களில் இருந்து மெட்டீரியல்கள் சப்ளையர்கள் மூலம் நேரடியாக வந்துகொண்டிருந்தன. அப்படியென்றால், 100 வாகனங்கள் வருவதற்கு உள்ளே இடம் வேண்டும். இதில் 100 வாகனங்களும் ஃபுல் லோடு அடிக்கும் என்று சொல்ல முடியாது. பாதி லோடு இருக்கும்; முக்கால் லோடு இருக்கும்; இதனால் வேஸ்ட் ஆஃப் காஸ்ட் நிறைய ஆகும்’ என்று ஐடியா கொடுத்து, எங்கள் ட்ரக்கிலேயே மொத்தமாக கலெக்ட் செய்து, ஃபோர்டுக்கு டெலிவரி செய்தோம். இது மில்க் ரன் கான்செப்ட்டின் அடிப்படையில் உதித்த ஐடியா. இதன் மூலம் நிறைய கம்பெனிகளுக்கு நாங்கள் மில்க் ரன் லாஜிஸ்டிக்ஸ் ஆர்டர் எடுத்துச் செய்தோம். இது ஒரு வகையான லெவல். பொருட்கள் மட்டுமில்லை; ஆட்களுக்கும் லாஜிஸ்டிக்ஸ் உண்டு. எனக்கு 10 கம்பெனிகளிடம் லிங்க் உண்டு. 10 தொழில் வல்லுநர்கள் கைவசம் இருக்கிறார்கள். என்னிடம் பிஸினஸ் டீல் வைத்துக்கொண்டால், அந்தத் தொழில் வல்லுநர்களை வைத்துக்கொண்டு, லோடு சீக்கிரம் அடிப்பதற்கு உங்களுக்கு உதவுவேன்’ என்பதும் ஒரு வகையான லெவல்.

இன்னொரு லெவல் - IP சிஸ்டம். Intellectual Property. அதாவது, உங்கள் பார்ட்டிக்கு சிறந்த ஐடியா கொடுத்து, அதற்கான பேட்டன்ட் காப்பி ரைட்களைப் பெற்றுக் கொள்வது. இதற்கு பொதுவான அறிவு இருந்தாலே போதும். அவர்களின் மெட்டீரியலுக்கு சின்ன ட்ரக் போதுமா? வேஸ்ட்டேஜ் குறைப்பதற்கு என்ன செய்யலாம்? ட்ரெய்லர் அரேஞ்ச் செய்யலாமா போன்ற ஐடியாக்கள் கொடுப்பது. உதாரணத்துக்கு, சென்னையில் இருந்து ஓசூருக்கு ஒரு லோடு போக வேண்டியிருக்கிறது. அந்த டிரைவரை 10 மணிக்கு அனுப்பினால், 1 மணி தாண்டி வேலூரிலோ, கிருஷ்ணகிரியிலோ ரெஸ்ட் எடுப்பார். காலை எழுந்து ஓசூருக்குப் போய்விடலாம் என்பது அவரது ஐடியாவாக இருக்கும். இதில் குறையொன்றுமில்லை. ஏனென்றால், பாதுகாப்பும் முக்கியம். இப்போது இந்த டிரைவரை நாம் 8 மணிக்கு அனுப்பினால், அவர் 12 மணிக்குத் தூங்கி எழுந்து போனாலும், முன்கூட்டியே ஓசூருக்குப் போய்விடுவார். இந்த ஐடியாவை வேறு யாரும் பயன்படுத்த உரிமம் கிடையாது. இது ஒரு வகையான ஐடியா ஷேரிங் லாஜிஸ்டிக்ஸ்.

மில்க் ரன் பற்றித் தெரியுமா? - 6

இப்படி வெரைட்டி காட்டுவதுதான் 3PL லாஜிஸ்டிக்ஸின் அம்சம். இந்த 3PL-ல் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. ஒரு நடிகர் சண்டைக் காட்சிகளில் பின்னியெடுக்கிறார். ஆனால், அதற்குப் பின்னால் டூப் நடிகர் இருப்பார். பெயர்தான் டூப். ஆனால், இவர்தான் அங்கே ஹீரோ. அதுபோல் இங்கே லாஜிஸ்டிக்ஸ் என்பது ஹீரோ என்றால், இதற்குப் பின்னால் இருந்து இதை இயக்கும் டூப் நடிகர் - சப்ளை செயின் மேனேஜ்மென்ட். பெயர் கொஞ்சம் புரியாதபடி இருந்தாலும், இதன் லாஜிக் ரொம்ப சிம்பிள்.

ஒரு பொருளை எடுத்துக்கொண்டு இன்னொரு இடத்துக்குக் கொண்டுசெல்லும்போது என்னென்ன முக்கியம்? அந்தப் பொருளின் தரம் குறையாமல் இருக்க வேண்டும். அதாவது, டேமேஜ் ஆகக் கூடாது. டெலிவரி டைமிங் மிகவும் முக்கியம். அடுத்தது - காஸ்ட் ஆஃப் லோடிங். விலை மற்ற லாஜிஸ்டிக்ஸைவிட குறைவாக இருக்க வேண்டும். கடைசி அம்சம் - பாதுகாப்பு. இது பொருட்களுக்கு மட்டுமல்லாமல் உயிர்களுக்கும் சேர்த்து. இது போன்ற அம்சங்கள் சேர்ந்ததுதான் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்.

இப்போது 4PL சிஸ்டமே வந்துவிட்டது. 3PL-ல் கஸ்டமர்தான் சில முடிவுகளை எடுப்பார். 4PL-ஐ ‘Extended Arm of the Company’ என்று சொல்வார்கள். அதாவது, முக்கியமான எல்லாப் பொறுப்புகளையும் நாமே எடுப்பதுதான் 4PL.

3PL, 4PL எதுவாக இருந்தாலும் சரி, நான் திரும்பவும் சொல்வது ஒரே விஷயம்தான் - இந்த சப்ளை செயின் மேனேஜ்மென்ட் ஒழுங்கான முறையில் நடக்க வேண்டுமென்றால், டிரைவர்களுக்கும் நமக்கும் உண்டான பார்ட்னர்ஷிப் நன்றாக இருக்க வேண்டும். அப்படி  நன்றாக மாறும்பட்சத்தில் லாஜிஸ்டிக்ஸ் துறை உங்கள் வசம்தான்!

- சரக்கு பெயரும்

தொகுப்பு: தமிழ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism