‘‘திங்கள் கிழமை ராத்திரி திடீர்னு ஒரு கும்பல் எங்க ஊருக்குள்ள புகுந்து, கண்ணுல பட்ட அத்தனை ஆம்பளைங்களயும் அரிவாளால வெறித்தனமா வெட்டுச்சு. வீடுகளுக்குள்ள புகுந்து ஆம்பளைங்கள கண்மூடித்தனமா வெட்டுனாங்க. கொடூரமா வெட்டுப்பட்ட ஆறுமுகம், இங்கேயே இறந்துட்டார். எம்.பி.ஏ படிச்சிட்டு விவசாயம் பண்ணிட்டு இருந்த சண்முகநாதன் என்ற இளைஞரை அரிவாளால குதறியெடுத் துட்டாங்க. உயிருக்குப் போராடிட்டு இருந்த அவரும் இறந்துட்டார். கொடூரமா வெட்டுப்பட்ட ஏழெட்டு பேரு இப்போ சீரியஸா இருக்காங்க. எங்க பிள்ளைங்க படிச்சு, முன்னேறிட்டு வர்றதை அவங்களால ஜீரணிக்க முடியலை. அதான் சாதிவெறியோட எங்க ஆம்பளைங்களை வெட்டியிருக்காங்க” என்று கதறி அழுகிறார் கச்சநத்தம் கிராத்தைச் சேர்ந்த கலைச்செல்வி.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 குடும்பங்கள் வசிக்கும் கிராமம். இங்கு அந்த வட்டாரத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு கும்பல் அரிவாள், கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி, இருவரைக் கொலை செய்துள்ளது. படுகாயம் அடைந்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனால், சிவகங்கை மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கச்சநத்தம் கிராமத்தைச் சுற்றி மாரநாடு, ஆவரங்காடு உள்பட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. அவற்றைச் சேர்ந்தவர்கள் தங்களை சாதிரீதியில் ஆதிக்கம் செய்துவருவதாக கச்சநத்தத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாள மக்கள் புகார் கூறிவந்தனர். கச்சநத்தத்தில் மிகவும் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐந்து குடும்பங்கள் உள்ளன. அவர்கள்தான், இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த கலைச்செல்வி, “எங்க ஊர்ல கருப்பணசாமி கோயில் திருவிழா சனிக்கிழமை (மே 26) நடந்துச்சு. எங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்திருந்தாங்க. என் சித்தப்பா மகன் லிங்கராஜா, என் மாமா மகேந்திரன் எல்லாம் திண்ணையில பேசிக்கிட்டு இருந்தோம். ஆதிக்க சாதியைச் சேர்ந்த சந்திரகுமாரின் மகன் சுமன் அங்கே வந்து, எங்களைப் பார்த்து சாதியைச் சொல்லித் திட்டிட்டு, ‘கோயில் திருவிழாவுல எங்களுக்கு மரியாதை தரமாட்டீங்களா...’ன்னு சொல்லிட்டு, கத்தியை எடுத்து மகேந்திரனோட இடுப்புல குத்தினான். பெல்ட்ல கத்தி பட்டதால மகேந்திரன் தப்பிச்சிட்டாரு. அப்புறம், ராணுவத்துல வேலை செய்யிற எங்க ஊர்க்காரப் பையன் தெய்வேந்திரனும், அவரோட நண்பர் பிரபாகரனும் பைக்ல போயிருக்காங்க. அவங்களை சுமன், அருண், சந்திரகுமார் ஆகிய மூணு பேரும், ‘என்னடா... கறி விருந்து சாப்பிட்டுட்டு தெனாவெட்டா இருக்கீங்க. கோயில் திருவிழாவுல எங்களுக்கு மரியாதை தரமாட்டீங்குறீங்க...’ என்று கெட்டவார்த்தைகளால திட்டியிருக்காங்க. உடனே தெய்வேந்திரனும் பிரபாகரனும் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் செஞ்சிட்டாங்க. அந்த ஆத்திரத்துலதான், அவுங்க சாதி ஆளுகளைக் கூட்டிட்டு வந்து வெறியாட்டத்தை நடத்திட்டாங்க” என்றார் கண்ணீருடன்.

வெட்டிக்கொல்லப்பட்ட ஆறுமுகத்தின் மகன்தான், ராணுவத்தில் பணியாற்றும் தெய்வேந்திரன். அவரிடம் பேசினோம். “போலீஸ் முறையா நடவடிக்கை எடுத்திருந்தா, இந்தத் தாக்குதல் நடந்திருக்காது. சாதிவெறி பிடித்த இந்தக் கும்பலோட முழுநேர வேலையே, கூலிப்படையா செயல்படுறதுதான். எங்க ஊருக்குள்ள தாக்குதல் நடத்திட்டு, எங்க வீட்டுல இருந்த 32 பவுன் தங்க நகைகளையும், மூன்று லட்சம் ரூபாயையும் எடுத்துட்டுப் போயிட்டானுங்க. வீட்ல இருந்த டி.வி, பைக் எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டாங்க. இப்போ, நாங்க படிச்சிட்டு பொருளாதாரத்துல முன்னேறி யிருக்கோம். ஆனாலும், அவங்களுக்கு நாங்க அடிமையா இருக்கணும்னு நினைக்கிறாங்க” என்றார்.

மூவேந்தர் புலிப்படை அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், “திருப்பாச்சேத்தி, ஆவாரங்காடு, ஆலடிநத்தம், மாரநாடு ஆகிய பகுதிகளில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர், நீண்டகாலமாக அராஜகத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இவர்கள்தான், திருப்பாச்சேத்தி சப்-இன்ஸ்பெக்டராக இருந்த ஆல்வின் சுதனைப் படுகொலை செய்தனர். போலீஸ் அதிகாரியையே கொலை செய்கிறார்கள் என்றால், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களை எப்படி நடத்துவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

மானாமதுரை டி.எஸ்.பி-யான சுகுமாறனிடம் பேசினோம். “கச்சநத்தம் சம்பவம் கொடூரமானது. அதில் தொடர்புடைய குற்றவாளிகள் ஐந்து பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இன்னும் எட்டுப் பேரைப் பிடித்துள்ளோம். 17 பேர்மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காவல்துறைமீது சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். அதில் உண்மையிருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கொடூரமாக வெட்டப்பட்ட மலைச்சாமி, சந்திரசேகர், தனசேகரன், சுகுமாறன், தேவேந்திரன், மகேஸ்வரன் உள்ளிட்டோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கந்தசாமியிடம் பேசினோம். “தேவேந்திரகுல வேளாள மக்களில் பலர், நன்கு படித்து அரசுப் பணிகளில் பணியாற்றுகின்றனர்; விவசாய நிலங்களை வாங்கி, பம்புசெட் போன்ற வசதிகளுடன் சிறப்பாக விவசாயம் செய்துவருகின்றனர். சாதிவெறி பிடித்த சிலருக்கு இது பிடிக்கவில்லை. அவர்களின் தொடர் அராஜகங்களால், சுமார் 50 குடும்பங்கள் கச்சநத்தத்திலிருந்து வெளியேறிவிட்டன. இந்தக் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட அருண், சுமன், சந்திரகுமார் உள்ளிட்டோர் கஞ்சா வியாபாரம் செய்பவர்கள். பலர் கூலிப்படையாகச் செல்பவர்கள். இங்கிருக்கும் பி.சி.ஆர் கமிட்டியோ, தலித் மக்களுக்கு விரோதமானதாக இருக்கிறது” என்றார் காட்டமாக.

- தெ.பாலமுருகன்
படங்கள்: சாய் தர்மராஜ்

“கால்மேல் கால்போட்டு உட்கார்ந்ததால் கொல்லப்பட்டனர்!”

எவிடென்ஸ் அமைப்பின் உண்மை அறியும் குழுவினர் கச்சநத்தம் சென்று பல்வேறு தகவல்களைத் திரட்டி வந்துள்ளனர். எவிடென்ஸ் செயல் இயக்குநர் கதிரிடம் பேசினோம். ‘‘சாதிரீதியான படுகொலைகளும், வன்செயல்களும் அதிகளவில் நடக்கும் மாவட்டமாக சிவகங்கை உள்ளது. தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த தெய்வேந்திரனையும், பிரபாகரனையும் பார்த்து, ‘எவ்வளவு தைரியம் இருந்தா எங்க முன்னாடியே கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பீங்க?’ என்று சாதியைச் சொல்லி இழிவாகத் திட்டியிருக்கிறார்கள், ஆதிக்க சாதியைச் சேர்ந்த சந்திரகுமாரின் மகன்கள் சுமன், அருண் ஆகியோர்.

‘தேவையில்லாமல் சாதியைப் பற்றிப் பேசினால் போலீஸில் புகார் செய்வோம்’ என்று தெய்வேந்திரனும் பிரபாகரனும் சொல்லியுள்ளனர். அதற்கு, ‘இவ்வளவு திமிராகிவிட்டதா... உங்களைக் கொல்லாம விடமாட்டோம்’ என்று அவர்கள் கூறிச் சென்றுள்ளனர். உடனே, தெய்வேந்திரனும் பிரபாகரனும் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். உடனே, சுமனையும் அருணையும் இன்ஸ்பெக்டர் எச்சரித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த சுமன், அருண், சந்திரகுமார், இளையராஜா உள்பட 20 பேர் கொண்ட கும்பல், மே 28-ம் தேதி இரவு 9 மணிக்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கச்சநத்தம் கிராமத்தில் வசிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஐந்து குடும்பங்கள்தான், பல்வேறு அராஜகங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக, அருகிலுள்ள ஆவாரங்காடு, மாரநாடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஆதிக்க சாதியினரில் பலர் செயல்படுகின்றனர். சாதிரீதியில் ரவுடியிசம் செய்வதை அவர்கள் பெருமையாக நினைக்கின்றனர். இந்தக் குற்றவாளிகளில் சிலர், தலித் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் முருகனைக் கொலை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட ஆறுமுகம், சண்முகநாதன் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையும், தலா ரூ. 5 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில், சாதி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு போலீஸ் பிரிவை உருவாக்க வேண்டும். கச்சநத்தம் பகுதியில் ஆயுதம் தாங்கிய போலீஸாரைப் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்த வேண்டும்” என்றார் கதிர்.

- செ.சல்மான்
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்