போராட்டக்களங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல. அதுவும், இந்த ஆட்சியில் போராட்டங்கள் அன்றாட அலுவலாகி விட்டன. ஆனாலும், தூத்துக்குடி போராட்டத்தில் ஓர் அழகான மாறுதல். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வீதிக்கு வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கு நிகராக திருநங்கைகளும் பெருமளவில் களத்தில் நின்றனர். அமைதிப் போராட்டமாக இருந்தவரையில் முன்வரிசையில் நின்று குரல் கொடுத்தவர்கள், போலீஸாரின் வேட்டை தொடங்கியபோது அர(வா)ணாக நின்று சுற்றியிருந்தவர்களைக் காப்பாற்றினர். இப்போது, மோகினியாக உருக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவருகின்றனர். களத்தில் நின்ற திருநங்கைகள் சிலரைச் சந்திக்க அவர்களின் வீட்டுக்குச் சென்றோம்.

தூத்துக்குடியில் ஏறக்குறைய எல்லா வீடுகளுமே மயான அமைதியுடன் வெறுமை சூழ்ந்துள்ளன. நம்மை வரவேற்ற கையுடன் சோகம் பகிரத் தொடங்குகிறார் திருநங்கை ஆர்த்தி.

‘‘இந்த அறவழிப் போராட்டத்தைத் தொடங்குனது குமரெட்டியாபுரம் மக்கள்தான். அவங்க போராட்டம் தொடங்குன மூன்றாவது நாள், ‘நீங்களும் கலந்துக்கோங்க’ன்னு திருநங்கைகள் சமூகத்துக்கும் அழைப்புவிட்டாங்க. அப்ப இருந்து நாங்களும் கலந்துக்கிட்டோம். நூறாவது நாள் போராட்டத்துல எங்களோட குறிக்கோளே, கலெக்டர் ஆபீஸ் வாசல்ல உட்காரணும்ங்கிறது மட்டும்தான். அதுக்காக, முன்னாடியே ஏரியா வாரியா கமிட்டி அமைச்சுத் திட்டம் போட்டிருந்தோம். முதல்ல எங்களை ஃபயர் ஸ்டேஷன் முன்னாடி போலீஸ் மறிச்சது. அதுக்கப்புறம் வி.வி.டி சிக்னல்ல. ரெண்டு இடங்களையும் தாண்டி முன்னேறி வந்து, கலெக்டர் ஆபீஸ் ஆர்ச் தாண்டி உள்ளே நுழையுறப்போ, ஒரு பொண்ணை ரத்த வெள்ளத்துல தூக்கிட்டு வந்தாங்க. பின்னாடியே ரத்தம் வழிய ஒரு பையன் ஓடிவந்து, ‘அக்கா... போலீஸ்காரங்க சுடுறாங்கக்கா’ன்னு சொல்லிக்கிட்டே எங்க முன்னால விழுந்தான். ஐயோ... அதை இப்ப நினைச்சாலும் பதறுதுங்க’’ என அந்தத் துயர நினைவுகளில் மூழ்கி அவர் வார்த்தைகள் வராமல் தடுமாற, தொடர்கிறார் அவருடன் முதல் நாளிலிருந்தே களத்தில் இருந்த திருநங்கை சானியா.

‘‘துப்பாக்கியால சுட்டு ஒவ்வொருத்தரையா வெளியே தூக்கிட்டு வந்தாங்க. அவங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக முதல்ல ஆம்புலன்ஸைக்கூட உள்ளே விடலை. எங்கள்ல சில பேர் இதை எதிர்த்துக் கேள்வி கேட்டப்ப, ஆபாசமா திட்டினாங்க. பெண்களையும்கூட மோசமா அடிச்சுத் துரத்தினாங்க. ‘யாரையும் அடிக்காதீங்க’னு நாங்க குறுக்க போய் விழுந்தோம். உடனே எங்களையும் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இப்படியெல்லாம் நடக்கும்னு கனவுல கூட நினைக்கலைங்க. போராட்டம் ஆரம்பிச்ச 31-வது நாள், இதேமாதிரி ஒரு பேரணி போனோம். ஆயிரக்கணக்கான மக்கள் அதுல கலந்துக்கிட்டாங்க. அப்போ, சின்ன அசம்பாவிதம்கூட நடக்கல. வன்முறைதான் தீர்வுனு நாங்க நம்பியிருந்தா அன்னிக்கே கலாட்டா ஆயிருக்குமே. 31-வது நாளுக்கே இவ்வளவு பேர் வந்தாங்கன்னா, 100-வது நாள் போராட்டத்துக்கு எவ்வளவு கூட்டம் வரும்னு அவங்க சுலபமா கணக்கு போட்டிருக்க முடியும். ஆனா, அவங்க மெத்தனமா இருந்துட்டு இப்போ எங்க மேல பழிபோடுறது எந்தவகையில நியாயம்?’’ என்று கொதிக்கும் சானியா, தூத்துக்குடி மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸின் செயலாளராக இருக்கிறார்.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருணா. ‘‘100-வது நாள் போராட்டத்துல நீங்களும் கலந்துக்கணும்னு தூத்துக்குடி திருநங்கைகள் அழைச்சாங்க. நாங்களும் பல ஊர்கள்ல இருந்து வந்து கலந்துக்கிட்டோம். திருநங்கைகள், மாணவர்கள் தவிர மீதி எல்லாருமே குடும்பம் குடும்பமா கலந்துக்கிட்டவங்கதான். கலவரம் செய்ய நினைக்கிறவங்க வீட்டிலிருந்து மதிய சாப்பாடு கட்டிக்கிட்டு குடும்பத்தோடவா வருவாங்க? அவ்வளவு கூட்டத்துல முட்டியை நோக்கி சுட்டு எச்சரிக்கவே முடியாது. அப்படியும் ஃபயரிங் ஆர்டர் தர்றாங்கன்னா முன்முடிவோட களமிறங்கியிருக்காங்கனுதானே அர்த்தம்! போராட்டத்துல நிறைய திருநங்கைகளும் அடிபட்டாங்க. எங்களைக் கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி நடந்துபோச்சு போலீஸ். இப்போ, பாதிக்கப்பட்டவங்களை மருத்துவமனையில போய்ப் பார்த்துக்கிறோம். அடிபட்டவங்களைப் பார்க்கவரும் அரசியல் தலைவர்கள்கிட்ட நிலைமையை எடுத்துச் சொல்றோம். ஆலையை நிரந்தரமா மூடுறவரை தூத்துக்குடி மக்களுடன் எங்கள் திருநங்கை சமூகம் கைகோத்து களத்துல நிற்கும்’’ என உறுதியான குரலில் சொல்கிறார்.

‘அதிகார வர்க்கம் தொடர்ந்து வெற்றிபெறுவதற்கான காரணமே, பிரிந்துகிடக்கும் மக்களிடையே அது அரசியல் செய்வதால்தான்’ என ஒரு சொல்லாடல் இருக்கிறது. பாலின வித்தியாசமின்றி, வர்க்க பாகுபாடின்றி மக்கள் இப்படி ஒன்றிணைவதுதான் அவர்களை பயமுறுத்துகிறது போல!

- எஸ்.நித்திஷ்