‘அரசாணையோ, முதல்வரின் உத்தரவோ இல்லாமல் பவானிசாகர் அணையிலிருந்து அமைச்சர் கே.சி.கருப்பணன் உத்தரவின் பேரில் மூன்று நாள்களுக்கு மேல் முறைகேடாகத் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்தத் தண்ணீர், அமைச்சர் கருப்பணனின் கல்வி நிறுவனத்துக்காகக் கொண்டு செல்லப்பட்டது’ என்ற விவகாரம் கீழ்பவானி விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானிசாகர் அணைக்கு உள்பட்ட கொடிவேரி, காளிங்கராயன், கீழ்பவானி பாசனப் பகுதிகளில் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக, இந்தப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒருபோக பாசனத்துக்குக்கூட முழுமையாகத் தண்ணீர் பெற முடியவில்லை. அதனால், முறை வைத்துத் தண்ணீர் பெற்று வருகின்றனர். ஆனாலும்கூட, சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிர்கள் கருகும் நிலை உள்ளது. ‘இந்தப் பயிர்களைக் காப்பாற்ற குறைந்தபட்சம் 30 நாள் களுக்காவது தண்ணீர் திறந்துவிட வேண்டும்’ என்று கீழ்பவானி பாசன விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தனர். அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 29 முதல் மே 9 வரை 10 நாள்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து 2,200 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை பிறப்பித்தது. இது போதாது என விவசாயிகள் மறுபடியும் முறையிட்டனர். மேலும், ஈரோடு மாவட்டம் பவானிக்கு வரும் முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என விவசாயிகள் அறிவித்தனர். அதனால், கூடுதலாக மூன்று நாள்களுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டு, 12-ம் தேதி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மே 17-ம் தேதி இரவு முதல் எவ்வித அறிவிப்பும், அரசாணையும் இல்லாமல் பவானிசாகர் அணை திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 600 கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

‘‘அந்தத் தண்ணீர், கோபிசெட்டிப் பாளையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் நடத்திவரும் கல்வி நிறுவனங்களுக்காக ஓடத்துறை குளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்து முறைகேடாகத் தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. அரசாணை இல்லாமல், விதிமுறைகளைப் பின்பற்றாமல், பவானிசாகர் அணையை மூன்று நாள்களுக்கு மேலாக அமைச்சர் கருப்பணனின் உத்தரவின் பேரில் திறந்துவிட்டுள்ளனர்” என்று கொந்தளிக்கிறார், கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவர் நல்லசாமி.

இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞரும், கொடிவேரி அணைப் பாசன சங்கத் தலைவருமான சுபி.தளபதியிடம் பேசினோம். “மே 17-ம் தேதி இரவு முதல் பவானிசாகர் அணையிலிருந்து முறைகேடாகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 35 மைல் தூரம் வரை விவசாய நிலங்களுக்குச் செல்லும் அனைத்து ஷட்டர்களும் அடைக்கப்பட்டன. 35/6-வது மைலில் காவேரிபாளையம் என்கிற இடத்தில், வாய்க்காலின் குறுக்கே சுமார் 1500 ஹாலோபிளாக் கற்களை வைத்து, ஐந்தடி உயரத்துக்குச் சுவர் எழுப்பி நீரைத் தடுத்தனர். அங்கிருந்த அவசரகால மதகை உடைத்து, கரைப்பள்ளம் என்ற ஓடை வழியாக 14 கி.மீ தூரத்துக்குத் தண்ணீரைக் கொண்டுசென்று, கோபி - ஈரோடு சாலையில் உள்ள அமைச்சரின் கல்லூரியைச் சுற்றியுள்ள நீர் தேங்கக்கூடிய இடங்கள் மற்றும் குளங்களில் நீரைத் தேக்கியுள்ளனர். தன் கல்வி நிறுவனங்களுக்கு தினமும் பல ஆயிரம் செலவு செய்து தண்ணீர் வாங்குவதைத் தவிர்க்கவே, அமைச்சர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அணையைத் திறந்திருக்கிறார். அரசாணை இல்லாமல் பவானிசாகர் அணையின் ஷட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தது யார்? இதுபற்றி பவானிசாகர் அணையின் செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்டபோது, ‘அவசரகால மதகின் சாவி தொலைந்துவிட்டதால், அதை எடுத்து யாராவது திறந்திருப்பார்கள்’ என்கிறரீதியில் பதில் அளித்தார். தொலைந்துபோனதாகச் சொல்லப்பட்ட அந்தச் சாவியை, கோபியை அடுத்த ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி (கருப்பணனின் கல்லூரி) அருகே கண்டெடுத்தோம். அதை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளோம். முறைகேடாகத் தண்ணீர் திறக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை அதிகாரிகளிடம் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

அமைச்சர் கே.சி.கருப்பணனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “முறைகேடா எல்லாம் தண்ணி திறக்கலைங்க. அணையை மூடிய பிறகு, அந்த வடிதண்ணீர்தான் மூணு நாளா வந்திருக்கு. மத்தபடி என்னோட காலேஜுக்காக தண்ணி கொண்டு வந்தேன்னு சொல்றதுல அர்த்தமே இல்ல. என் காலேஜ்ல வந்து பாருங்க. மூணு போர்வெல் 24 மணி நேரமும் ஓடிக்கிட்டு இருக்கு. எங்க சி.பி.எஸ்.இ ஸ்கூலுக்குக்கூட, எங்க காலேஜ்ல இருந்துதான் தண்ணி புடிச்சிக்கிட்டுப் போறோம். அவ்ளோ தண்ணி இருக்கு. கோர்ட் ஆர்டர் படிதான், அணையில இருந்து தண்ணீர் திறந்திருக்காங்க. எங்க காலேஜுக்கும் அந்தக் குளத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. குளம் எங்க காலேஜுல இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கு” என மறுத்தார்.

எடப்பாடி ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்!

- நவீன் இளங்கோவன்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி