காவிரி உருவாகும் கர்நாடகத்தின் தலைக்காவிரியிலிருந்து வங்கக்கடலில் சங்கமமாகும் பூம்புகார் வரை, காவிரி உயிர் நீரோட்டக் காப்புப் பயணம் மேற்கொள்ளும் குடகு தேசியக் குழுவினர், மே 29-ம் தேதி மயிலாடுதுறைக்கு வருகை தந்தனர்.

ஏழு பேர் கொண்ட இந்த யாத்திரைக் குழுவினரை டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய குழுவின் தலைவரான நச்சப்ப கொடவா, ‘‘கர்நாடகா, பன்மொழி பேசும் மாநிலம். தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். கொடவா மொழி பேசும் நாங்களும் வசிக்கிறோம். ஆனால், கன்னட மொழி பேசும் மக்களுக்கு மட்டும்தான், அந்த மாநிலம் சொந்தம் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள். காவிரி உருவாகும் எங்கள் குடகுப் பகுதி, 1956-க்கு முன்புவரை தனி மாநில அரசாகத்தான் இருந்தது. மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது, எங்களைக் கர்நாடக மாநிலத்துடன் சேர்த்துவிட்டார்கள். அதிலிருந்து குடகுவாழ் மக்களைக் கர்நாடக அரசு நசுக்குகிறது.

எங்களுக்கென்று தனிப் பண்பாடு இருக்கிறது; தனி மொழி இருக்கிறது. ஆனால், எங்கள் குடகுப் பகுதியில் உள்ள ஊர்களின் பெயர்களையெல்லாம் கன்னட மொழியில் பெயர் மாற்றம் செய்கிறார்கள். குடகுவாழ் மக்களின் பண்டிகைகளுக்குக்கூட அரசு விடுமுறை அளிப்பதில்லை. அவர்களின் கன்னட மொழியை, குடகு மொழி பேசும் மக்கள்மீது திணிக்கிறார்கள். எங்களின் உரிமைகள் முற்றிலும் மறுக்கப்படுகின்றன. சர்வாதிகார அரசாக கர்நாடகா செயல்படுகிறது. தேர்தல் நேரத்தில் விலைபேசி வாக்குகளை வாங்கிவிடுகின்றனர். எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தி, வெற்றிபெற வைத்து, அவரை எங்களுக்கு எதிராகச் செயல்பட வைப்பது தொடர்ந்து நடக்கிறது.

கொடவா மக்களைப் பாதுகாக்க, நாடாளுமன்றத்தில் தனி மசோதா நிறைவேற்ற வேண்டும். கொடவா பகுதியில் சேரர், சோழர், பாண்டியர்கள் ஆட்சி நடத்தியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. காவிரி உருவாகும் எங்கள் பகுதியில், இரண்டு அணைகளைக் கட்டித் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு எங்களுக்கே தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடக அரசு. எனவேதான், தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை வற்றாத ஜீவநதியாய் ஆண்டு முழுவதும் காவிரியில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். புதுவை போல ‘சி’ பிரிவு அந்தஸ்துள்ள தனி மாநிலமாகக் குடகை அறிவித்தால், தமிழகத்துக்குத் தேவையான காவிரி நீரைத் தடையின்றி தருவோம். எங்களுக்கு ஆதரவு தாருங்கள்’’ என்றார்.

தலைக்காவிரியில் புறப்பட்ட இந்தக் குழுவினர், காவிரிக் கரையில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், தஞ்சை பெருவுடையார் கோயில், திருவையாறு அய்யாரப்பன், குடந்தை ஆதி கும்பேஸ்வரர், மயிலாடுதுறை மயூரநாத சுவாமி, பூம்புகார் திருச்சாங்காடு பல்லவனேஸ்வரர் போன்ற கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர். பூம்புகாரில் காவிரி அன்னைக்கு வழிபாடு செய்து காவிரியைக் காக்க வேண்டி, பயணத்தை நிறைவு செய்தனர்.

- மு.இராகவன், படம்: செ.ராபர்ட்