Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

##~##

ணையத்தை முதன்மையாகவும் அலைபேசி உட்கட்டமைப்பைத் துணை யாகவும்கொண்டு ஹைபிரிட் (பிஹ்தீக்ஷீவீபீ) பாணியில் தயாரிக்கப்பட்டு இருக்கும் ரிபப்ளிக் வயர்லெஸ் ( www.republicwireless.com) பற்றி சென்ற வாரம்தான் எழுதினேன். இந்த வாரமும் அவர்கள் குறிப்பிடத்தக்க மைல்கல் ஒன்றைத் தாண்டி இருக்கிறார்கள். உலகில் இருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் தொலைபேசி முதன்மை எண் ஒதுக்கப் பட்டு இருப்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். உதாரணமாக இந்தியாவுக்கு 91; அமெரிக்காவுக்கு 1; இங்கிலாந்துக்கு 44. இதே போல, ரிபப்ளிக் அலைபேசிகளுக்கு, ஒரு நாட்டுக்குச் சமமாக முதன்மைஎண்ணை வாங்கி இருக்கிறது இந்த நிறுவனம். உடனடியாக இது முக்கியமானதாகத் தெரியாவிட்டாலும், இந்தத் தொழில்நுட்பம் உலகின் பல நாடுகளில் வெளியாகும்போது இதன் சாத்தியக்கூறுகள் மலைக்கவைக்கும். அடிக்கோடிட்டு சொல்ல வேண்டியது இதுதான்: உலகில் எங்கே இருந்தாலும், யாருக்கும் இலவசமாக அலைபேசிக் கொள்ள முடியும் (இணையத்தில் இணைப்பதற்கான செலவு தவிர).

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்ற வாரத்தில் அமேசான் (www.amazon.com ) செய்த தடாலடிக் காரியம் அவர்களுக்கு நல்ல விளம்பரத்தையும்,  கல்லும் மண்ணும் வைத்துக் கட்டப்பட்ட கடைகள் ( Brick and Mortar ) மூலமாக வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு கடுமையான எரிச்சலையும் ஏற்படுத்தியது.

அப்படி என்ன செய்தது அமேசான்?

கடைகளில் விற்கப்படும் பொருட் களை அடுக்கிவைக்கவும் விற்பனையின் போது விலை பார்க்கவும் பார் கோட் எனப்படும் டிஜிட்டல் குறியீடு பயன் படுத்தப்படுகிறது. இந்தக் குறியீடுகளை அலைபேசியின் கேமரா மூலம் ஸ்கேன் செய்து, அது என்ன பொருள் என்பதை கண்டறியும் வசதிகொண்ட அலை மென்பொருள் (MobileApp) ஒன்றை வெளி யிட்டது அமேசான். தொடர்ந்து, தனது பயனீட்டாளர்களிடம் 'செல்லங்களா, அடுத்த முறை கடைக்குப் போகும்போது இதைப் பயன்படுத்தி முடிந்த வரை எத்தனை பொருட்களை உங்களால் ஸ்கேன் செய்ய முடியுமோ,  செய்யுங்கள். நீங்கள் ஸ்கேன் செய்யும் பொருள் கடையில் இருக்கும் விலையை விடக் குறைவாக இருந்தால், நீங்கள் அமேசானில் நேரடியாகவே வாங்கிக்கொள்ளலாம். அது மட்டும் அல்ல; உங்களது 'உதவி’யைக் கருத்தில்கொண்டு, நாங்கள் 5 சதம் விலை குறைத்துக் கொடுப்போம்' என்று சொல்லிவைக்க, அமேசான் பயனீட்டாளர் பட்டாளம் கடைகளுக்குப் படையெடுத்து ஸ்கேன் செய்தது. பயனீட்டாளர்களைப் பயன்படுத்தி, பல்வேறு இடங்களில் தனது போட்டியாளர்கள் விற்கும் விலைகளைக் கண்டறிய முடிந்த அமேசானின் நடவடிக்கை வரம்பு மீறும் செயல் எனத் துடிக்கின்றன கடைகள் மூலம் பொருட்களை விற்கும் வணிக நிறுவனங்கள். அமேசான் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இந்த பாணியை பலரும் பல விதங்களில் பயன்படுத்தப்போவது உறுதி.

தனது லேட்டஸ்ட் ஐ-போனில் இருக்கும் சிரி (Siri)தொழில்நுட்பத்தைப் படு பிரமாதம் என்ற விதத்தில் மார்க்கெட்டிங் செய்தது ஆப்பிள். அலைபேசியிடம் 'இந்த வாரத் தில் தட்பவெப்பம் எப்படி இருக்கும்?' என்றோ, 'பங்குச் சந்தை நிலவரம் எப்படி இருக்கிறது?' என்றோ கேட்டால், என்ன கேட்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப ஒரு பதிலை இணையத்தில் இருந்து கொண்டுவந்து காட்டுகிறது இந்த சிரி. வாய்ஸ் ரெகக்னிஷன் (Voice Recognition) எனப்படும் இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தை இப்போதே கொண்டுவந்துவிட்டது என்றெல்லாம் பில்ட்-அப் கொடுக்கப்பட்டது. கூகுளின் சேர்மேன் எரிக் ஸ்மிட், இந்தத் தொழில்நுட்பத்தால் தங்களுடைய தேடல் இயந்திரப் பிரபலத்துக்கே

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ஆபத்து வந்துவிட்டது என்கிறரீதியில் அறிக்கை கொடுத்தார்.  கடந்த சில வாரங்களாக, சிரியைப் பயன்படுத்தியதில் இருந்து அதன் செயல்பாடுகளைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா எனத் தெரியாமல் திகைத்து நிற்கிறேன். பேசுவதில் பாதிக்கு மேல் சிரியால் பதில் கண்டுபிடிக்க முடியாமல், கூகுளுக்கு நம்மை அனுப்புகிறது. எரிச்சலில் 'ஏன் இதுகூட தெரியவில்லை?' என்று கேட்டால் 'என்னால் முடிந்ததைச் செய்கிறேன்' என்று பதில் சொல்கிறது. சிரியின் மார்க்கெட்டிங்கில் மயங்கி இந்த ஐ-போனை வாங்கினால் ஏமாற்றம் நிச்சயம்.

ஐ-போன் இப்படி ஏமாற்றம் கொடுத்தது ஒருபுறம் இருக்க, மிகவும் பயன் உள்ள இணைய சாதனம் ஒன்றை சென்ற சில வாரங்களாகப் பயன்படுத்திவருகிறேன். அதன் முக்கிய இலக்கு: தூக்கம். நல்ல தூக்கம் முழுமையான இயக்கத்துக்கு மிக அவசியம். அதுவும், ஆழ்ந்த தூக்கம் கலைக்கப்படாமல் இருப்பது ரொம்பவும் முக்கியம். ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) எனப்படும் பிரச்னை உள்ளவர்கள் தூக்கத்துக்கு இடையே தொடர்ந்து மூச்சுத் திணறலால் எழுந்துகொண்டே இருப்பார்கள். இது அவர்களுக்கே தெரியாது என்பதால், எத்தனை மணி நேரம் தூங்கினாலும் அவர்களுக்குச் சோர்வாக இருக்கும். அதற்கான காரணமும் எளிதில் அவர்களுக்குத் தெரியாது. தூக்கம் பற்றிய ஆராய்ச்சி களும் அதற்கு உதவியாக இருக்கும் சாதனங்களுமாக தூக்கத்தைச் சார்ந்து 25 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் சந்தையே இப்போது உருவாகி இருக்கிறது.

நான் பயன்படுத்தும் சாதனத்துக்கு வருகிறேன். லார்க் (Lark) எனப்படும் இந்தச் சாதனத்தை இயக்கும் மென்பொருளை உங்கள் அலைபேசியில் பதிந்துகொள்ள வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன் எப்போது எழுந்துகொள்ள வேண்டும் என்பதை மென்பொருளில் செட் செய்து வைத்துக்கொண்டு, சாதனத்தை கைக் கடிகாரம் போல அணிந்துகொள்ள வேண்டும். உங்கள் இதயத் துடிப்பில் இருந்து, பல டேட்டாக்களை உங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு பதிந்துவைத்தபடியே இருக்கும் லார்க். குறித்த

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

நேரம் வந்ததும், சத்தம் இல்லாமல், அதிர்வு மூலமாக உங்களை எழுப்பும். மனித உடல் ஒரே விதமான அதிர்வுகளுக்குப் பழகிவிடும் என்பதால் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதங்களில் அதிர்வுகளை உருவாக்குகிறது லார்க். எழுந்து அலாரத்தை அணைக்க அலைபேசி மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும். அணைத்ததும், சாதனத்தில் இருக்கும் டேட்டா அனைத்தும் அலை பேசிக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. அதோடு இந்த டேட்டாவை அவர்களுடைய இணையதளத்தில் இருக்கும் உங்களுடைய கணக்குக்கு பதிவேற்றம் செய்துகொண்டால், அந்த டேட்டாவை அலசிப் பார்த்து உங்க ளுக்கான பிரத்யேக ஆலோசனைகளைச் சொல்கிறது லார்க்.

லார்க் வாங்கியிருப்பதாக ஃபேஸ்புக்கில் சொல்லியிருக்கும் மதுரை கார்த்திக் நாக ராஜன்... உங்களுக்கு இது ரொம்பவே பயன்படும்!

-LOG OFF