Published:Updated:

கர்ச்சீஃப் முதல் கல் நகை வரை!

கர்ச்சீஃப் முதல் கல் நகை வரை!

கர்ச்சீஃப் முதல் கல் நகை வரை!

ரோடு பெரியவலசுப் பகுதியைச் சேர்ந்த சர்மிளாவின் கைவசம் 65 கைவினைத் தொழில்கள் இருக்கின்றன. அதன் மூலம் சம்பாதிப்பதோடு பெண்களுக்குக் கற்றுத்தரவும் செய்கிறார்.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''கல்யாணம் ஆன புதுசில் எனக்குச் சம்பாதிக்கிற எண்ணம் எதுவும் இல்லை. ஆனா, ரெண்டு குழந்தைகள் பிறந்ததும் அவங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டிய கட்டாயம். அதனால், தையல் வகுப்பில் சேர்ந்தேன். முதல்ல கர்ச்சீஃப் தைக்கச் சொல்லித் தந்தாங்க. நான் கர்ச்சீஃப் தைச்சு அதுக்கு நடுவில் பூ டிசைனும் போட்டுக் கொடுத்தேன். கொஞ்ச நாள்ல வீட்டிலேயே தையல் மெஷின் வாங்கிவெச்சு பிளவுஸ் தைக்க ஆரம்பிச்சுட்டேன். ரொம்ப நேர்த்தியா நான் தைக்கிறதைப் பார்த்துட்டு, கணிசமான கஸ்டமர்கள் உருவானாங்க. எடுத்த எடுப்பிலேயே மாசம் 2,000 ரூபாய் வருமானம் கிடைச்சுது. நான் சொல்றது 12 வருஷத்துக்கு முன்னாடி.
கர்ச்சீஃப் முதல் கல் நகை வரை!

அடுத்த முயற்சியா ஃபேப்ரிக் பெயின்டிங் கத்துக்கிட்டேன். சேலையில நம்ம கையாலேயே டிசைன் போட்டுத் தர்றதுதான் இந்த

கான்செப்ட். இதிலேயும் சொல்லிக்கிற மாதிரி வருமானம் வந்துச்சு. வெறும் டிசைனா மட்டும் இல்லாம சேலையில் கல்வெச்சு, ஆர்ட் வொர்க் செய்கிற 'ஆர்யா வொர்க்’  கத்துக்கலாமேனு அது தொடர்பான வகுப்புக்கும் போனேன். அந்த வேலை நுணுக்கமான, நேரம் அதிகமாகும் வேலைதான். ஆனா, நிறைய வருமானம் கிடைக்கும். என்னோட வேலை நேர்த்தியைப் பார்த்துட்டு ஈரோட்டில் இருக்கிற பெரிய துணிக் கடைகள்ல இருந்து நிறைய ஆர்டர்கள் வந்துச்சு.

இதுக்கு நடுவுல ஈரோட்டில் எங்கே எல்லாம் கைவினைத் தொழில் பயிற்சி நடக்குதோ அதை எல்லாம் தேடிப் பிடிச்சு கத்துக்க ஆரம்பிச்சேன். மண் பானை ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், கண்ணாடி பொருள்களில் ஓவியம், பொம்மைத் தயாரிப்பு, மூங்கில் கூடைகள் செய்றதுனு நிறைய கைவினைத் தொழில்கள் கத்துக்கிட்டேன். நானும் கத்துக்கிறேன் பேர்வழினு போயிட்டு வராம, அவங்க சொல்லிக்கொடுத்த விஷயத்தைத் தாண்டியும் புதுமையா ஏதாவது முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்.

சமீபத்தில் 'நகை தயாரிப்பு’ பற்றி ஒரு பேப்பர்ல படிச்சேன். அதுக்கான பயிற்சி வகுப்புகள் உள்ளூரில் இல்லை. அதுக்காக சென்னைக்குப் போய் கத்துக்கிட்டேன். இப்போ ஸ்படிகக் கற்கள்வெச்சு நகை வேலை செய்து உள்ளூர் நகைக் கடைகள், ஃபேன்சி ஸ்டோர்களில் விற்கிறேன். அருமையான தொழில் இது. புதுப்புது டிசைன்களை உருவாக்கினா நல்ல வரவேற்பு கிடைக்கும்.  

கர்ச்சீஃப் முதல் கல் நகை வரை!

10 வருஷத்துக்கு முன்னாடி மாசம் 2,000 சம்பாதிச்ச நான், இன்னைக்குக் 25,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறேன். நிறைய மகளிர் சுய உதவிக் குழுக்கள், வங்கிகள், தனியார் அமைப்புகள் எல்லாம் வகுப்பு எடுக்கக் கூப்பிடுறாங்க. அப்படிப் போனா, மாசம்  50,000-க்கும் மேல் சம்பாதிக்க முடியும். ஆனா, வீட்டையும் குழந்தைகளையும் கவனிச்சுக்க முடியாது. நான் சம்பாதிக்கிறதே அவங் களுக்காகத்தானே. அதனால், வீட்டிலேயே ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி உட்பட பல்வேறு தொழில் பயிற்சிகளை கத்துக்கொடுத்துட்டு வர்றேன். இதுவே மனசுக்கு நிறைவா இருக்கு'' என்கிறார் நெகிழ் வுடன்!

கர்ச்சீஃப் முதல் கல் நகை வரை!

- எஸ்.ஷக்தி
படங்கள்: தி.விஜய்