Published:Updated:

சரிகமபதநி டைரி 2011

வீயெஸ்விபடங்கள் : கே.ராஜசேகரன், சொ.பாலசுப்பிரமணியன், ச.இரா.ஸ்ரீதர்

##~##

கூட்டுக் குடும்பங்கள் வாரத்துக்கு ஒரு முறை கூடை நிறைய இஸ்திரிக்குத் துணி கொடுப் பது மாதிரி, நித்யஸ்ரீயின் கச்சேரிகளில் எப்போதுமே உருப்படிகள் நிறைய இருக் கும். தியாக பிரம்ம கான சபா கச்சேரியிலும் அப்படியே!

 வாணி மஹாலில் நித்யஸ்ரீ பாடிய சுப பந்துவராளியைக் கேட்டிருந்தால், வீணையை மடியில் இருந்து இறக்கி வைத்துவிட்டு, எழுந்து நின்று ஒரு ராயல் சல்யூட் அடித்திருப்பார் சரஸ்வதி. கீழ் ஸ்தாயியில் ஆரம்பித்து, படிப்படியாக விரிவாக்கம் செய்து, உச்சத்தில் சிறிது நேரம் நின்று நிதானித்து, சுபபந்துவராளியைச் சோக ரசம் ததும்ப நித்யஸ்ரீ அலசியபோது, நம் மனம் கொல் கத்தா மருத்துவமனை தீ விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத் தியது. மத்ஸ்யம், கூர்மம், வராஹம் முதலான 10 அவதாரங்களில் புகழ் அடைந்த பத்ரிநாத்தில் உள்ள சத்யநாராயணர் மீது தீட்சிதர் பாடியிருக்கும் பாடலின் எமோஷன் முழுவதையும் நித்யஸ்ரீயின் குரல் அழுத்த மாக வெளிப்படுத்தியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மத்யமாவதியில் மெயின் தவிர, ஊத்துக் காடு வெங்கடகவியின் 'பழமோ பழமோ பழம்’, கடலூர் சுப்ரமணியனின் மேக ரஞ்சனி ராகப் பாடல், மிஸ்ர சிவரஞ்சனி யில் பாபநாசம் சிவனின் 'ஆண்டவன் அன்பே சக்தி தரும்’ ஆகியவை நித்யஸ்ரீயின் மெனுவில் கிடைத்த சில அபூர்வ அயிட்டங் கள்.

சரிகமபதநி டைரி 2011

டுத்த மூன்றாவது நாள் பார்த்தசாரதி சபாவின் 'சங்கீத கலாசாரதி’ விருது வாங்கப்போகும் சந்தோஷ மிகுதியில் பிரம்ம கான சபா கச்சேரியைப் பிய்த்து உதறிவிட்டார் எஸ்.சௌம்யா. அன்றைய பொன் மாலைப் பொழுதில் சௌம்யா பாடிய வராளி ராக ஆலாபனை... அவராலேயே இன்னொரு முறை அந்த அளவுக்கு கிளாஸாகவும் கிளாஸிக்கலாகவும் பாட முடியுமா என்பது சந்தேகம். தேன்போன்ற இனிமையான, அதில் தோய்த்து எடுத்த அத்திப் பழம் மாதிரி மிருதுவான குரலில் சௌம்யா வராளியை வளர்த்திச் சென்ற விதம் சிலிர்ப்பானது. ஆலாபனையை நடுநடுவே சற்று அவர் நிறுத்தியபோது, நிலவிய மௌனம்கூட வராளியின் பல சங்கதிகளைப் பாடியது. ராகத்தை முடித்தபோது வராளிக்கு சௌம்யா கட்-அவுட் வைத்துப் பாலபிஷேகம் செய்த உணர்வு ஏற்பட்டது!

முன்னதாக, கமாஸ் ராகத்தில் தியாக ராஜரின் 'சுஜன ஜீவன...’ நிரவல் ஸ்வரங் களுடன், சுருட்டியில் திருப்பதி வேங்கடா சலபதி மீது தீட்சிதர் பாடியிருக்கும் கீர்த்தனை, பைரவியில் ஒரு ஸ்லோமோஷன் பதம், ஜாவளி... மூன்று மணி நேரத்துக்கும் மேலாக அனைவரின் காதுகளையும்நிரப்பி வீட்டுக்கு அனுப்பினார் சௌம்யா!

கிருஷ்ண கான சபாவின் காமகோடி கான மந்திரில் பகல் இரண்டு மணிக்குக் கல்யாணி வர்ணத்துடன் கச்சேரியைத் துவங்கிய சைத்ரா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீயின் சீனியர் மாணவி.

மோகனம் அன்று பிரதானம். 'மோகன ராமா’ கீர்த்தனை. எந்தவித சர்க்கஸ் வேலையும் கிடையாது. கைத்தட்டல்களைக் குறிவைத்து மலிவான சங்கதிகள் இல்லை. சுத்தபத்தமான மோகனம் அது.

குருவுக்கே உரிய மேடை ஒழுங்கு சைத்ராவிடமும் இருக்கிறது. ஃப்ளாஸ்கில் இருந்து வெந்நீர், பாட்டிலில் இருந்து தண்ணீர் என்று எதையும் ஒரு சொட்டுகூடக் குடிக்காமல், அலுங்கல் குலுங் கல் இல்லாமல், உச்சரிப்புக் குளறுபடி கள் செய்யாமல்... இது இப்படியே தொடர்ந்து உயரம் தொட சைத்ராவுக்கு மும்மூர்த்திகள் அருளட்டும்!

ஒரு சின்ன யோசனை... பாப்புலரான கீர்த்தனைகளை மட்டும் இப்போதைக்குப் பாட வேண்டும் சைத்ரா. காலம் கனியும் வரை காத்திருந்துவிட்டு, அரிய உருப்படி களைக் கையில் எடுக்கட்டும். என்ன செய்ய? கலியுகத்தில் முதலில் கூட்டத்தை வசீகரிக்க வேண்டி இருக்கிறதே?

சுதாரகுநாதனின் மாணவி வி.தீபிகா, பாரதிய வித்யாபவனுக்காக ஜி.என்.பி., எம்.எல்.வி. பிரபலப்படுத்திய பாடல்களைப் பாடினார்.

சரிகமபதநி டைரி 2011

குரலைப் பொறுத்தமட்டில் இனிமை நிரம்ப உண்டு தீபிகா விடம். கீழ் ஸ்தாயியில் சிறிது சிரமப்படுகிறார். மேலே சென்று விட்டால், தரை இறங்க சிக்னல் கிடைக்காத விமானம் மாதிரி நடுவானில் வட்டம் அடிக்கிறார். இதையெல்லாம் தீபிகா சரிசெய்துகொள்ளோணும்!

'தீமாட்டிக்’ என்றாலே நிறையப் பேசணுமோ? தமிழ் கலந்த ஸ்டைலான ஆங்கிலத்தில் அதிகமாகப் பேசினார் தீபிகா. ஜி.என்.பி. சார், எம்.எல்.வி. அம்மா, பத்மஸ்ரீ சுதா ரகுநாதனின் பெருமை களை அதிகம் சொன்னார். 1959-ல் அகாடமியில், எம்.எல்.வி. அம்மா பாடிய 'கண்ணன் என்றதுமே மனதில் காதல் பொங்குதம்மா’ என்ற அம்புஜம் கிருஷ்ணா வின் பாடலை டேப்பில் கேட்டு தான் அசந்துபோனதைக் குறிப்பிட்டார்!

''இத்தனை நல்லாப் பாடற இவனுக்கு ஈவினிங் ஸ்லாட்டே தரலாமே...’

-கிருஷ்ண கான சபாவில் பகல் கச்சேரி முடிந்ததும் இரண்டு பெரிசுகள் பேசியது,  இளைஞர் சந்தீப் நாராயண்பற்றி. சஞ்சய் சுப்ரமணியனின் தயாரிப்பு. நிதானமாக சந்தீப் பாடிய சஹானாவில் விழுந்த சங்கதி களில் நிறையவே வாத்தியார் சாயல்! பந்து வராளி, மிளகாய் பஜ்ஜி மாதிரி விறுவிறு! தியாகராஜரின் 'ரகுவர நந்து’ கீர்த்தனையில் 'மநஸீந நீகே...’ வரியில் நிரவல் செய்து, ராகத்தின் முழு ரூபத்தை வெளிப்படுத்திய சந்தீப், ஸ்வரங்களை சாய்ஸில் விட்டுவிட்டு, இந்தோளத்துக்குள் பயணப்பட்டார். மூன்று ராகங்களையும் அவர் கையாண்ட விதம், 'எனக்கு வளமான வருங்காலம் உண்டாக்கும்’ என்று பிரகடனப்படுத்துவது போல் இருந்தது!

விஜய் சிவா சபா மேடையில் பாடி னாலே அது கோயிலில் பாடுவதுபோல் பரிசுத்தமாக இருக்கும். கோயிலில் பாடினால் கேட்கவே வேண்டாம் (பாட்டைச் சொல்லவில்லை)! கலாசார மறுமலர்ச்சி அறக்கட்டளை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நான்காவது வருடமாக நடத்திய இசை விழாவில் முதல் நாள் விஜய் சிவா.

கோயிலுக்குப் போனால் சூடாகப் பொங்கல் அல்லது சுவையான சுண்டல் கிடைக்கும். காபி

சரிகமபதநி டைரி 2011

கிடைக்குமா? அன்று கிடைத்தது, விஜய் சிவாவின் குரல் வண்ணத்தில். ஃப்ரெஷ் டிகாக்ஷனில், அப்போது கறந்த பாலை நீர் கலக்காமல் காய்ச்சி கலக்கப்பட்ட காபி மாதிரி விஜய் சிவா வழங்கிய காபி, திக்காக மணம் கமழ்ந்தது! வழக்கமாகக் கேட்கும் காபி ராகம் மாதிரியாக இல்லாமல், ஒருவித புது  ஃப்ளேவர் அதில் இருந்தது. வித்தியாசமான சங்கதிகள், அளவு மீறாத கார்வைகள்... அசத்தல்! 'இத்தனை இன்பம் இது என்பதை வர்ணிக்க என்னால் இயலுமா?’ என்று ராமனை உயர்த்திப் பேசும் 'இந்த ஸெளக்யமநி நே’ என்று துவங்கும் தியாகராஜரின் கீர்த்தனையை நிரவல், ஸ்வரங்களுடன்அப்பழுக்கு இன்றிப் பாடினார் விஜய் சிவா.

சென்ற இதழ் டைரியில் அனிதாகுஹா வின் நாட்டிய நாடகம்பற்றிய குறிப்பில் 'கிஷ்கிந்தா காண்டமும் ஆரண்ய காண்ட மும்’ என்று தவறுதலாக இடம் பெற்று விட்டது. 'கிஷ்கிந்தா காண்டமும் சுந்தர காண்டமும்’ என்பதே சரி!

- டைரி புரளும்