ஃப்ளேவர்டு யோகர்ட்

தேவை: கெட்டித் தயிர் - ஒரு கப், ஃப்ரெஷ் அத்திப்பழம் - 4 (சிறிய துண்டுகளாக்கவும்), சர்க்கரை - 4 டீஸ்பூன் (விரும்பினால்).

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் அத்திப்பழத் துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறி, கலவை பளபளப்பாக வரும்வரை வேகவிடவும். பழத்தை நன்கு மசிக்கவும். ஆறிய பிறகு அதனுடன் தயிர் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

குறிப்பு: அத்திப்பழத்துக்குப் பதிலாக விருப்பமான பழத்தைச் சேர்க்கலாம்.

ஆப்பிள் பட்டை நீர்

தேவை: தண்ணீர் - ஒரு லிட்டர், ஆப்பிள் - பாதியளவு (பொடியாக நறுக்கவும்), பட்டை - 2 இன்ச் துண்டு.

செய்முறை: ஒரு ஜக்கில் அல்லது பாத்திரத்தில் ஒரு லிட்டர் குடிநீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும். தண்ணீருடன் ஆப்பிள் துண்டுகள், பட்டை சேர்த்து குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஊறவைத்துப் பருகலாம். தண்ணீர் காலியானதும் மீண்டும் ஒரு லிட்டர் தண்ணீர் நிரப்பிப் பருகலாம். இதேபோல மூன்று முறை பயன்படுத்தலாம்.

இளநீர் கஸ்டர்டு

தேவை: இளநீர் - 2 (வழுக்கை, இளநீரைத் தனித்தனியாக வைக்கவும்), பொடியாக நறுக்கிய பழக்கலவை (நுங்கு, மாம்பழம், திராட்சை, கிர்ணி, தர்ப்பூசணி, ஆப்பிள், வாழைப்பழம், பலாச்சுளைகள்) - ஒரு கப், காய்ச்சி ஆறவைத்த பால் - கால் கப், அகர்அகர் - 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 3 டீஸ்பூன்.

செய்முறை: பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதில் அகர் அகர் சேர்த்துக் கரையும் வரை நன்கு கிளறி இறக்கி ஆறவிடவும். இளநீர் வழுக்கையுடன் இளநீர், சர்க்கரை, பால் சேர்த்து நைஸாக அரைக்கவும். அதனுடன் ஆறவைத்த அகர்அகர் கலவை சேர்த்து நன்கு அரைக்கவும். அகலமான கிண்ணத்தில் பழக்கலவையைச் சேர்க்கவும். அதனுடன் அரைத்த இளநீர் கலவை சேர்த்துப் பரிமாறவும்.

இளநீர் சர்பத்

தேவை: இளநீர் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை - 2 டீஸ்பூன், ஊறவைத்த சப்ஜா விதைகள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கண்ணாடி டம்ளர்களில் சிறிதளவு சப்ஜா விதைகளைச் சேர்க்கவும்.அதன் மீது இளநீர் வழுக்கைத் துண்டுகள் சேர்க்கவும். பிறகு அதன் மீது இளநீரை ஊற்றிப் பரிமாறவும்.

எலுமிச்சை வெள்ளரி புதினா நீர்

தேவை: தண்ணீர் - ஒரு லிட்டர், நறுக்கிய எலுமிச்சைத் துண்டுகள் - 3, வெள்ளரிக்காய் – பாதியளவு (பொடியாக நறுக்கவும்), புதினா இலைகள் – 10 (உள்ளங்கையால் கசக்கவும்).

செய்முறை: ஒரு ஜக்கில் அல்லது பாத்திரத்தில் ஒரு லிட்டர் குடிநீர் நிரப்பி வைத்துக்கொள்ளவும். தண்ணீருடன் எலுமிச்சைத் துண்டுகள், வெள்ளரிக்காய்த் துண்டுகள், புதினா இலைகள் சேர்த்து குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஊறவிடவும். எலுமிச்சை வெள்ளரி புதினா நீர் தயார். தண்ணீர் காலியானதும் மீண்டும் அதே போல மூன்று முறை தண்ணீரை நிரப்பி பயன்படுத்தலாம்.

ஐஸ் மின்ட் காபி

தேவை: காய்ச்சி ஆறவைத்த பால் - 2 கப், புதினா இலைகள் - 5 (நீரில் அலசவும்), சர்க்கரை - 3 டீஸ்பூன் , ஐஸ்கட்டி (அ) ஐஸ்க்ரீம் - ஒரு கப், இன்ஸ்டன்ட் காபித்தூள் - 3 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு கப் பாலுடன் சர்க்கரை, புதினா இலைகள், இன்ஸ்டன்ட் காபித்தூள் சேர்த்து மிக்ஸியில் சில நிமிடங்கள் அரைக்கவும். அதனுடன் மீதமுள்ள பாலைச் சேர்த்து நுரை வர அடித்தெடுக்கவும். இதை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி, மேலே ஐஸ்கட்டிகள் அல்லது ஐஸ்க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.

கிர்ணி ஜூஸ்

தேவை: கிர்ணிப்பழம் - ஒன்று (தோல், விதை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும்), ஆரஞ்சுச் சாறு - அரை கப், தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு, சீரகத்தூள் - கால் டீஸ்பூன், சோடா - 2 கப், தேன் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: கிர்ணிப்பழத் துண்டுகளுடன் சீரகத்தூள், ஆரஞ்சுச் சாறு, தேன், இஞ்சி, உப்பு சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும். அதைக் கண்ணாடி டம்ளர்களில் முக்கால் பங்கு வரை ஊற்றவும். அதன் மீது சோடா ஊற்றிக் கலந்து பரிமாறவும்.

குல்கந்து லஸ்ஸி

தேவை: தயிர் - 2 கப், காய்ச்சி ஆறவைத்த பால் - கால் கப், குல்கந்து - ஒரு டேபிள்ஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - 2 டீஸ்பூன், பாதாம் - 3, பிஸ்தா - 2.

செய்முறை: சுடுநீரில் பாதாம், பிஸ்தாவைச் சேர்த்துச் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் பாலுடன் குல்கந்து, ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு அடிக்கவும். அதனுடன் தயிர் சேர்த்து ஒரு சுற்று அடித்தெடுக்கவும். கண்ணாடி டம்ளர்களில் சிறிதளவு பாதாம், பிஸ்தா துண்டுகளைச் சேர்க்கவும். அதன் மீது அடித்த கலவையை ஊற்றிப் பரிமாறவும்.

தக்காளி பன்ச்

தேவை: தக்காளி - 5, எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன், புதினா இலைகள் - 3, சர்க்கரை - 3 டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளியுடன் புதினா, சீரகத்தூள், எலுமிச்சைச்சாறு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய விழுதுடன் மீண்டும் ஒரு கப் தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டவும். உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஐஸ்கட்டி சேர்த்துப் பருகலாம். சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தும் பருகலாம்.

தர்ப்பூசணி ஜூஸ்

தேவை: தர்ப்பூசணித் துண்டுகள் (கொட்டைகள் நீக்கவும்) - 2 கப், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: தர்ப்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதனுடன் சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் 30 நிமிடங்கள் குளிரவைத்து ஜில்லென்று பருகவும்.

தர்ப்பூசணி புதினா எலுமிச்சை நீர்

தேவை: தண்ணீர் - ஒரு லிட்டர், எலுமிச்சைப்பழம் - ஒன்று (சிறிய துண்டுகளாக்கவும்), தர்ப்பூசணித் துண்டுகள் - 3, புதினா இலைகள் – 10.

செய்முறை: ஒரு ஜக்கில் அல்லது பாத்திரத்தில் ஒரு லிட்டர் குடிநீர் நிரப்பி வைத்துக்கொள்ளவும். எலுமிச்சைத் துண்டுகள், தர்ப்பூசணித் துண்டுகள், கசக்கிய புதினா இலைகள் சேர்த்து குறைந்தபட்சம்
4 மணி நேரம் ஊறவிடவும். தண்ணீர் காலியானதும் மீண்டும் அதே போல மூன்று முறை தண்ணீரை நிரப்பி பயன்படுத்தலாம்.

திராட்சை கிரானிட்டா

தேவை: திராட்சை - அரை கிலோ, சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - அரை கப்.

செய்முறை: திராட்சையுடன் சர்க்கரை சேர்த்து விழுதாக அரைக்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்தெடுத்து வடிகட்டவும். இதை காற்றுப்புகாத டப்பாவில் ஊற்றி ஃப்ரீசரில் மூன்று மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறலாம்.

தௌஷா சர்பத்

தேவை: பிஞ்சு வெள்ளரி - 4 (தோல் சீவி, துருவவும்), தண்ணீர் - ஒரு கப், சர்க்கரை - 4 டீஸ்பூன்.

செய்முறை: வாய் அகன்ற பாத்திரத்தில் வெள்ளரித்துருவலுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து டம்ளர்களில் ஊற்றிப் பருகவும்.

நுங்கு பாயசம்

தேவை: காய்ச்சாத பால் - முக்கால் கப், தோல் சீவிய நுங்கு - 3 (பொடியாக நறுக்கவும்), ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி - 10, உலர் திராட்சை - 5 , சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.,

செய்முறை: 6 முந்திரியைத் தண்ணீரில் ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிச் சுண்டக் காய்ச்சவும், பக்கவாட்டில் சேரும் பாலேடுகளையும் பாலுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து இறக்கி ஆறவிடவும். மிக்ஸியில் நுங்குத் துண்டுகளுடன் ஊறவைத்த முந்திரி சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். நன்கு ஆறிய பாலுடன் நுங்கு விழுது சேர்த்துக் கலக்கவும் (பால் சூடாக இருக்கும்போது நுங்கு விழுதைச் சேர்த்தால் பால் திரிந்துவிடும்). வாணலியில் நெய்விட்டு உலர்திராட்சை, மீதமுள்ள 4 முந்திரி சேர்த்து வறுத்தெடுத்து, பால் - நுங்கு கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். சூப்பர் சுவையில் நுங்கு பாயசம் தயார். இதைக் குளிரவைத்தும் பருகலாம்.

நுங்கு ஷேக்

தேவை: தோல் சீவிய நுங்கு - 5 (சிறிய துண்டுகளாக்கவும்), காய்ச்சி ஆறவைத்த பால் - 3 கப், சர்க்கரை - 3 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்.

செய்முறை: சிறிதளவு நுங்குத் துண்டுகளைத் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள நுங்குத் துண்டுகளுடன் ஒரு கப் பால், சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து அரைக்கவும். அதனுடன் மீதமுள்ள பால் சேர்த்து அரைத்தெடுக்கவும். இதைக் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி, சிறிதளவு நுங்குத் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.

நன்னாரி பழரசம்

தேவை: மாம்பழம் - ஒன்று (தோல், கொட்டை நீக்கி, துண்டுகளாக்கவும்), திராட்சை - 15 (பொடியாக நறுக்கவும்), பலாச்சுளைகள் - 5 (பொடியாக நறுக்கவும்), வாழைப்பழம் - 2 (தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்), மாதுளை முத்துகள் - கால் கப், நன்னாரி சர்பத் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பழங்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு மசிக்கவும். அதனுடன் நன்னாரி சர்பத் சேர்த்துக் கலந்து சுவைக்கலாம்.

ஃபலூடா

தேவை: சேமியா - ஒரு கப், சப்ஜா விதைகள் - அரை கப், ஆப்பிள் - 2 (பொடியாக நறுக்கவும்), மாம்பழம் - 4 (தோல், கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்), ரோஸ் எசென்ஸ் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப், ஐஸ்க்ரீம் ஸ்கூப் - தேவையான அளவு.

செய்முறை: 4 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும், ஒரு டீஸ்பூன் ரோஸ்மில்க் எசென்ஸ் சேர்த்துக் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். ரோஸ் சிரப் தயார்.

ஒரு மாம்பழத்தைத் துண்டுகளாக்கி தனியே வைக்கவும். மீதமுள்ள 3 மாம்பழத்தைத் தோல், கொட்டை நீக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். சேமியாவுடன் தண்ணீர் சேர்த்து வேகவைத்து, வடிகட்டி, தட்டில் பரவலாக உலர்த்தவும். சப்ஜா விதைகளுடன் ஒரு கப் தண்ணீர்விட்டு 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ் சிரப் ஊற்றவும்.

அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் ஊறிய சப்ஜா விதைகளைச் சேர்க்கவும். அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் வேகவைத்த சேமியா, ஒரு டேபிள்ஸ்பூன் அரைத்த மாம்பழ விழுதைச் சேர்க்கவும். அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் ஆப்பிள், மாம்பழத் துண்டுகளைச் சேர்க்கவும். இதே போல இன்னொரு அடுக்குச் சேர்க்கவும். இறுதியாக மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் வைத்துப் பரிமாறவும்.

பானகம்

தேவை: எலுமிச்சைச் சாறு - கால் கப், வெல்லத்தூள் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்துடன் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைத்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

பான் குல்ஃபி

தேவை: கெட்டியான பால் - 3 கப் (காய்ச்சாதது), கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - முக்கால் டேபிள்ஸ்பூன், வெற்றிலை - 2 (காம்பு நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்), குல்கந்து - ஒன்றேகால் டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், முந்திரி 5, பாதாம், பிஸ்தா - தலா 6, பாக்குத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், அரிசி மிட்டாய் - சிறிதளவு.

செய்முறை: சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறவும். கால் கப் பாலைத் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள கொதிக்கும் பாலுடன் சோள மாவுக் கரைசல் சேர்த்து, மிதமான தீயில் கிளறியபடியே காய்ச்சவும். பக்கவாட்டில் படியும் பாலாடைகளைச் சுரண்டி சேர்த்துப் பால் சுண்டும் வரை காய்ச்சவும். பிறகு இறக்கி ஆறவிடவும்.

வெற்றிலையுடன் முந்திரி, பாதாம், பிஸ்தா, குல்கந்து, தனியாக எடுத்த வைத்த பால் சேர்த்து அரைத்தெடுக்கவும். ஆறவைத்த பாலுடன் வெற்றிலைக் கலவை சேர்த்துக் கலக்கவும். இதை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து செட் செய்து எடுக்கவும். மோல்டுகளைக் குழாய்த் தண்ணீரில் சிறிது நேரம் காட்டினால் குல்ஃபி வெளியே வரும். அதன் மீது பாக்குத்தூள், அரிசி மிட்டாய் தூவிப் பரிமாறவும்.

மாதுளை ஐஸ் டீ

தேவை: மாதுளை - ஒன்று (முத்துகளை உதிர்க்கவும்), சர்க்கரை - 3 டீஸ்பூன், ஐஸ் துண்டுகள் - 5, டீத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: ஒரு கப் தண்ணீருடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் டீத்தூளைத் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். மாதுளை முத்துகளுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். வடிகட்டியவற்றைச் சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். டம்ளரில் பாதியளவு வடிகட்டிய டீ டிகாக்ஷன் சேர்க்கவும். அதனுடன் டம்ளர் நிரம்பும் வரை மாதுளைச்சாறு சேர்க்கவும். ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

மாம்பழ சீஸ் கேக்

தேவை: மாம்பழம் - அரை கிலோ (தோல், கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும்), துருவிய பனீர் - கால் கிலோ, கண்டன்ஸ்டு மில்க் - ஒரு டின், அகர்அகர் - 6 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - அரை கப் , மில்க் பிஸ்கட் - 15, வெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், பட்டைத்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: பிஸ்கட்களைத் துண்டுகளாக உடைத்து, வெண்ணெய், பட்டைத் தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கிளறி வைக்கவும். அரை டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவிடவும். அதனுடன் அகர்அகர் சேர்த்துக் கரையும் வரை நன்கு கிளறி இறக்கி ஆறவிடவும். மாம்பழத் துண்டுகளுடன் பனீர் துருவல் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க், அகர்அகர் கலவை சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும். டிரேயில் பிஸ்கட் கலவையைப் பரப்பி, நன்கு அழுத்திவிடவும். அதன் மேல் அரைத்த மாம்பழக் கலவையைப் பரப்பவும். இதை ஃப்ரிட்ஜில் 6 மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

முக்கனி பால்

தேவை: தோல், கொட்டை நீக்கி நறுக்கிய மாம்பழத் துண்டுகள் - அரை கப், கொட்டை நீக்கி நறுக்கிய பலாச்சுளைத் துண்டுகள் - கால் கப், தோல் உரித்து, நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள் - அரை கப், காய்ச்சி ஆறவைத்த பால் - 4 கப், வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பழத்துண்டுகளுடன் பால், எசென்ஸ் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்தால் சுவையான முக்கனி பால் ரெடி.

மெலன் பாப்சிகல்

தேவை: தர்ப்பூசணித் துண்டுகள் - அரை கப், கிர்ணிப்பழத் துண்டுகள் - அரை கப், திராட்சை - 10 (பொடியாக நறுக்கவும்), சர்க்கரை - கால் கப்.

செய்முறை: தர்ப்பூசணித் துண்டுகளுடன் கிர்ணிப்பழத் துண்டுகள், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதனுடன் திராட்சை சேர்த்துக் கலக்கவும். இதை பாப்சிகல் மோல்டுகளில் நிரப்பி ஃப்ரீசரில் வைத்து செட் செய்து எடுக்கவும். மோல்டுகளைக் குழாய்த் தண்ணீரில் சிறிது நேரம் காட்டி பாப்சிசலை வெளியே எடுத்துப் பரிமாறவும்.

லிச்சி ஷேக்

தேவை: லிச்சி பழம் - 12 (தோல், கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்), காய்ச்சி ஆறவைத்த பால் - 3 கப், சர்க்கரை - 4 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: சிறிதளவு லிச்சி பழத்துண்டுகளைத் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள லிச்சி பழத்துடன் ஒரு கப் பால், சர்க்கரை, எசென்ஸ் சேர்த்து விழுதாக அரைக்கவும். அதனுடன் மீதமுள்ள பால் சேர்த்து அரைத்தெடுக்கவும். இதைக் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி, மேலே சிறிதளவு லிச்சி பழத்துண்டுகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

ஸ்ட்ராபெர்ரி புதினா நீர்

தேவை: தண்ணீர் - ஒரு லிட்டர், ஸ்ட்ராபெர்ரி - 3 (பொடியாக நறுக்கவும்), புதினா இலைகள் - 20.

செய்முறை: ஒரு ஜக்கில் அல்லது பாத்திரத்தில் ஒரு லிட்டர் குடிநீர் நிரப்பி வைத்துக்கொள்ளவும். தண்ணீருடன் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள், கசக்கிய புதினா இலைகள் சேர்த்து குறைந்தபடம்
4 மணி நேரம் வரை ஊறவிடவும். தண்ணீர் காலியானதும் மூன்று முறை நிரப்பிப் பருகலாம்.

ஸ்பைஸி லெமனேட்

தேவை: எலுமிச்சை - 2 (சாறு பிழியவும்), ஐஸ்கட்டிகள் - 3, உலர்ந்த புதினா இலை - 5, காய்ந்த மிளகாய் - ஒன்று, சர்க்கரை - 4 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சோடா - 3 கப்.

செய்முறை: காய்ந்த மிளகாயைப் பொடியாக நறுக்கி சீரகம், மிளகுத்தூள், உலர்ந்த புதினா இலை சேர்த்துத் தட்டவும். கண்ணாடி டம்ளர்களில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு ஊற்றவும். அதன் மீது தேவையான அளவு தட்டிய மசாலா சேர்க்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பிறகு ஐஸ்கட்டிகள் போட்டு, சோடா ஊற்றிப் பரிமாறவும்.

இஞ்சி எலுமிச்சை ஜூஸ்

தேவை: துருவிய இஞ்சி - கால் கப், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: ஒரு கப் தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும். பின்னர் துருவிய இஞ்சி சேர்த்து, இஞ்சி மசியும் வரை கொதிக்கவிடவும். இஞ்சி தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு கிளாஸில் அரை கிளாஸ் தண்ணீர், தேன், உப்பு, எலுமிச்சைச்சாறு மற்றும் 2 டீஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

பன்னீர் ஃப்ரூட் சோடா

தேவை: பன்னீர் பழம் (மலைப்பிரதேசங்களில் கிடைக்கும்) – 5, (அல்லது) ரோஸ் வொயிட் எசென்ஸ் – 2 டீஸ்பூன், சர்க்கரை – முக்கால் கப், சோடா – ஒரு கப், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பன்னீர் பழத்தைக் கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும், பின்னர் நறுக்கிய பன்னீர் பழத்தைச் சேர்த்து நன்கு வேகவிடவும் (அல்லது) ரோஸ் வொயிட் எசென்ஸ் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு சர்க்கரை சேர்த்துச் சிறிது கெட்டியாகும் வரை (சிரப் பதம்) கொதிக்கவிடவும். பின்னர் வடிகட்டிக்கொள்ளவும். கண்ணாடி டம்ளரில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் வடிகட்டிய எசென்ஸ் ஊற்றி உப்பு மற்றும் சோடா கலந்து பரிமாறவும்.

இளநீர் வெள்ளரி சர்பத்

தேவை: இளநீர் – 2, வெள்ளரி – பாதியளவு, சப்ஜா விதை – ஒன்றரை டீஸ்பூன், குளுக்கோஸ் – 2 டீஸ்பூன்.

செய்முறை: சப்ஜா விதைகளை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவிடவும். வெள்ளரிக்காயைத் தோல் சீவி விதையுடன் நறுக்கி எடுத்துக்கொள்ளவும். சிறிதளவு வெள்ளரியைப் பொடியான துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். நறுக்கிய வெள்ளரியை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். கண்ணாடி டம்ளர்களில் சிறிதளவு சப்ஜா விதை, சிறிதளவு அரைத்த வெள்ளரி, சிறிதளவு பொடியாக நறுக்கிய வெள்ளரி, சிறிதளவு குளுக்கோஸ், கொஞ்சம் இளநீர் சேர்த்து நன்றாகக் கலந்து எடுத்துக்கொள்ளவும். இளநீர் வெள்ளரி சர்பத் ரெடி. இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.

நாவல்பழ மாக்டைல்

தேவை: நாவல்பழம் - அரை கிலோ (கழுவி, கொட்டை நீக்கவும்), மாதுளைச் சாறு - 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா இலை - 8, சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை: நாவல்பழத்துடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, மாதுளைச்சாறு, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். புதினா இலைகளைக் கைகளால் கசக்கி சேர்த்துக் கலந்து, ஃப்ரிட்ஜில் குளிரவைத்துப் பருகவும்.

இயற்கை தரும் இனிமை!

உடல் உஷ்ணம், நாவறட்சி, வியர்வை... இவற்றால் ஏற்படும் சோர்வு எனக் கோடைக்காலம் தரும் சிரமங்களுக்குப் பரிகாரமாக அனைவரும் நாடுவது குளிர்பானங்கள். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவுடன் பெரும்பாலானவர்களின் கால்கள் தானாக ஃப்ரிட்ஜை நோக்கிச் செல்லும். ஐஸ்வாட்டர், குளிர்பானங்கள் அடைக்கப்பட்ட பாட்டில்களை எடுத்துக் கண்மூடி கண்திறக்கும் நேரத்தில் காலி செய்துவிடுவார்கள்.

``இது தற்காலிக நிவாரணம்தான். அதுவே, கோடைக்காலத்தில் நமக்கு உதவுவதற்காகவே இயற்கை நமக்குக் கொடையாகத் தந்துள்ள தயிர், இளநீர், எலுமிச்சை, வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, நுங்கு, நன்னாரி, நாவல்பழம் போன்றவற்றைப் பயன்படுத்தி குளிர்பானங்கள் செய்து பருகினால் நீண்ட நேரத்துக்கு நிவாரணம் கிடைப்பதுடன், ஆரோக்கியமும் மேம்படும்’’ என்று கூறும் சமையல் கலைஞர் மதராஸி தீபா (Madraasi.com), நுங்கு மில்க்ஷேக், நாவல்பழ மாக்டைல், தக்காளி பன்ச், குல்கந்து லஸ்ஸி என மிகவும் எளிதில் செய்யக்கூடிய, சுவைமிக்க குளிர்பானங்களின் ரெசிப்பிகளைப் படங்களுடன் இந்த இணைப்பிதழில் வழங்குகிறார்.