Published:Updated:

“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்!”

“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்!”
பிரீமியம் ஸ்டோரி
“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்!”

காஞ்சியில் வடகலை - தென்கலை மோதல்

“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்!”

காஞ்சியில் வடகலை - தென்கலை மோதல்

Published:Updated:
“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்!”
பிரீமியம் ஸ்டோரி
“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்!”

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை ஆகிய இரு பிரிவினர்களுக்கு இடையேயான நெடிய பகை தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீபத்தில் நடந்த பிரம்மோற்சவத் திருவிழாவில், இருதரப்புக்கிடையே ஏற்பட்ட கைகலப்பைக் கண்டு பக்தர்கள் அதிர்ந்துபோயுள்ளனர்

வைகாசி பிரம்மோற்சவத்தின்போது, மே 29-ம் தேதி கருடசேவை நடைபெற்றது. அன்று இரவு தென்கலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள், நம்மாழ்வார் சன்னதியில் வரதராஜ பெருமாளை வைத்து நாலாயிர திவ்ய பிரபந்தப் பாசுரங்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள். அங்கு வந்த வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள், ‘‘நீங்கள் சீக்கிரம் பாசுரங்களை முடித்தால்தான், கருட சேவைக்குப் பெருமாளை அலங்காரம் செய்ய முடியும்’’ என நிர்ப்பந்தம் செய்தனர். தென்கலையைச் சேர்ந்தவர்கள், “முழுப் பாசுரங்களையும் பாடி முடித்துவிட்டுத்தான் பெருமாளை அனுப்புவோம்” என வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்.

“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்!”

அவர்கள் பாசுரங்களைப் பாடிக் கொண்டிருக்கும்போதே, வடகலையைச் சேர்ந்தவர்கள் பெருமாளைத் தூக்கிக்கொண்டு சென்றனர். அதனால், தென்கலையைச் சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்தனர். வாக்குவாதம், அடிதடியாக மாறியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திருமலை விஞ்சமூர் வெங்கடேஷிடம் பேசினோம். ‘‘வடகலை, தென்கலை என்ற  பிரிவுகள் பெருமாளை வழிபடும் முறைகளால் பிற்காலத்தில் உருவானவை. 1852-ம் வருடம் நீதிமன்ற உத்தரவின்படி, வரதராஜ பெருமாள் கோயில் சுவாமி சிலைகளைக் கணக்கெடுத்தனர். அப்போது, ‘கோயிலில் ஓர் இடத்தில்கூட வடகலை பெருமாள் கிடையாது. எல்லா இடங்களிலும் தென்கலை பெருமாள்தான் உள்ளார்’ என்று நீதிபதி தீர்ப்பில் சொல்லியுள்ளார். அதன்பிறகு, இருதரப்பினரிடையே மோதல்கள் அதிகரித்தன. வடகலைப் பிரிவினர், கோயிலில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். நூறுகால் மண்டபத்தில் எல்லா இடங்களிலும் தென்கலைச் சிற்பங்கள்தான் உள்ளன. ஆனால், எல்லாவற்றுக்கும் மூக்கு பகுதி மட்டும் உடைந்திருக்கும். கேட்டால், இஸ்லாமியப் படையெடுப்பின்போது, அவர்கள் உடைத்துவிட்டனர் என்று சொல்லி சமாளிப்பார்கள். மந்திரம் சொல்வது, நாமம் போடுவது போன்ற அடையாளங்கள் பெரிய அளவில் இரு பிரிவினரையும் வேறுபடுத்துகின்றன. ஆனால், இருவருக்கும் இடையே தத்துவ ரீதியான வித்தியாசங்கள் மிகச்சிறிய அளவிலே உள்ளன.

“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்!”

தமிழகத்தில் நம்மாழ்வார் இல்லாமல் வைஷ்ணவமே கிடையாது. வரதராஜர் கோயிலில் தமிழ்ப் பாசுரங்களை முழுமையாகச் சொல்லி முடித்த பிறகுதான், ஆழ்வார் சன்னதியில் வரதராஜ பெருமாளுக்கு மரியாதை செய்ய வேண்டும். பிறகுதான், பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும். சம்பவத்தன்று தென்கலை பிரிவினர் பாசுரங்களைப் பாடிக் கொண்டிருந்தபோதுதான் பிரச்னை ஏற்பட்டது. 20 பாசுரங்களே மீதமிருந்த நிலையில், பத்து நிமிடங்கள் பொறுத்திருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது. சுவாமிக்கு மரியாதை செய்யாமல் வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எடுத்துச் செல்ல முயன்றனர். ‘பரிவட்டம் கட்டுவதற்காகச் சடாரியைக் கொண்டுவந்தபோது, தென்கலையைச் சேர்ந்த ஒருவர் அதைத் தட்டிவிட்டுவிட்டார்’ என்ற புரளி கிளம்பியது. மேலும், திருமால்மீது மண்அள்ளிப் போட்டதாக வாய்க் கூசாமல் சொல்கிறார்கள். அந்தப் பெருமாள் எங்களுக்கும்தானே கடவுள்? வடகலையைச் சேர்ந்தவர்கள் பிரச்னையைக் கிளப்ப வேண்டும் என்று திட்டமிட்டே அன்று வந்திருந்தனர். நம்மாழ்வார் சன்னதி, மணவாள மாமுனி சன்னதி ஆகியவை மட்டுமே வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ளன. அதைக்கூட வடகலையைச் சேர்ந்தவர்கள் நிம்மதியாக வழிபட விடமாட்டேன் என்கிறார்கள்” என்றார் வேதனையாக.

“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்!”

வடகலைப்பிரிவைச் சேர்ந்த ஸ்ரீவத்சன் பட்டர், “ஒவ்வொரு உற்சவத்தின்போதும் தேவஸ்தானத்தில் முன்கூட்டியே மீட்டிங் போட்டு எந்தெந்த நேரத்தில் எவற்றைச் செய்யவேண்டும் எனச் சொல்லி விடுவார்கள். இந்த வருடமும் கோயில் செயல் அலுவலர் நேர அட்டவணையைப் போட்டுக் கொடுத்துவிட்டார். அன்று வாகன சன்னதியிலிருந்து நம்மாழ்வார் சன்னதிக்கு வந்த பிறகு, அதிலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் பாசுரங்கள் பாடி முடித்துவிடச் சொன்னார்கள். அதற்கு, ‘நாங்கள் நிதானமாகத்தான் பாடுவோம்’ என அவர்களுக்குள்ளேயே இருபிரிவாகச் சண்டைபோட்டுக்கொண்டனர். இப்படி தென்கலையைச் சேர்ந்தவர்கள் காலம் கடத்திக்கொண்டே இருந்தனர். நேரமானதால் மணியக்காரர் சுவாமியை வெளியே கொண்டுவரச் சொன்னார். அப்போது தென்கலையைச் சேர்ந்தவர்கள், நம்மாழ்வார் சன்னதி கதவைச் சாத்திவிட்டனர். பரிவட்டம் கட்டும் நேரத்தில் தென்கலையைச் சேர்ந்த அர்ச்சகர், மாலையைப் பிடித்து இழுத்ததால் இருதரப்பினருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டது. ஆதிகாலத்திலிருந்தே இந்தப் பெருமாள் வடகலைதான். ராமானுஜர் காலத்துக்குப் பிறகு எல்லாக் கோயில்களையும் தென்கலையாக மாற்ற அவர்கள் முயற்சி செய்கிறார்கள்’’ என்கிறார்.

- பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism