Published:Updated:

50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்... பறிபோன ஐந்து லட்சம் வேலைகள்!

50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்... பறிபோன ஐந்து லட்சம் வேலைகள்!
பிரீமியம் ஸ்டோரி
50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்... பறிபோன ஐந்து லட்சம் வேலைகள்!

அரசின் கணக்கும் அதிர வைக்கும் விளக்கமும்

50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்... பறிபோன ஐந்து லட்சம் வேலைகள்!

அரசின் கணக்கும் அதிர வைக்கும் விளக்கமும்

Published:Updated:
50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்... பறிபோன ஐந்து லட்சம் வேலைகள்!
பிரீமியம் ஸ்டோரி
50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்... பறிபோன ஐந்து லட்சம் வேலைகள்!

‘‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடத்தப்படும்’’ என்று தமிழக சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் சம்பத் அறிவித்தார். அதே சட்டமன்றத்தில் அரசு தாக்கல் செய்த கொள்கைவிளக்கக் குறிப்பில், ‘தமிழகத்தில் 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது’ என்று புள்ளிவிவரம் தந்திருப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்... பறிபோன ஐந்து லட்சம் வேலைகள்!

ஊரகத் தொழில் துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் பென்ஜமின் தாக்கல் செய்தார். அப்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கொள்கைவிளக்கக் குறிப்பு அவையில் வைக்கப்பட்டது. அதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஆண்டு வளர்ச்சிப் பட்டியலில், 2016-17-ம் ஆண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 2,67,310 எனவும், இவற்றின்மூலம் 18,97,619 பேர் வேலைவாய்ப்புப் பெற்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டில் இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 2,17,981 ஆகக் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 13,78,544 பேர் என்ற அளவுக்குக் குறைந்திருந்தது. அதேபோல், 2016-17-ம் ஆண்டில் உற்பத்தி அளவு 36,221 கோடியாக இருந்தது. இது 2017-18-ம் ஆண்டில் 25,373 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் குறு, சிறு நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 49,329 என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது. அதாவது, சுமார் 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அரசின் கொள்கைவிளக்கக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ‘‘ஒரே ஆண்டில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பறிபோயிருப்பது இதுவே முதல்முறை. கடந்த ஓராண்டில் ரூ.11,000 கோடி முதலீடு சிறுதொழில் துறையிலிருந்து வெளியேறியுள்ளது. 2009-10-ம் ஆண்டில் தொடங்கி கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறதே தவிர, ஓராண்டு கூட குறைந்ததில்லை. அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல், ஆளுங்கட்சியினரின் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால்தான் முதலீடுகள் தமிழகத்தைவிட்டு வெளியேறியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழகத்திலிருந்து பல்வேறு காரணங்களால் வெளியேறியதால், அவற்றை நம்பி அவற்றுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்து வந்த சிறு நிறுவனங்கள் வெளியேறியதும் பின்னடைவுக்குக் காரணம்” என்று கடுமையாகச் சாடினார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்... பறிபோன ஐந்து லட்சம் வேலைகள்!

ஆனால், ‘‘தமிழகத்தில் எந்தத் தொழில் நிறுவனமும் மூடப்படவில்லை, நாங்கள் கொள்கைவிளக்கக் குறிப்பில் கொடுத்த தகவலை அனைவரும் தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள்” என்று ஊரகத் தொழில் துறை சார்பில் விளக்கம் கொடுத்து வருகிறார்கள். 

தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.தியாகராஜன் ‘‘ 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன என்பதை அரசின் கொள்கைவிளக்கக் குறிப்பில் அறிவித்துள்ளனர். ஒரு மாநிலம் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறதென்றால், ஆண்டுக்கு ஆண்டு தொழில் வளம்பெருக வேண்டும். அதன்மூலம் வேலைவாய்ப்பும் பெருகவேண்டும். ஆனால், இரண்டுமே குறைந்துவிட்டதென்றால் மாநிலம் ஆபத்தை நோக்கிச் செல்கிறது என்று அர்த்தம். ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்தது ஆபத்து. ஜி.எஸ்.டி-யை முறைப்படுத்தாதது தான் எல்லா பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம்” என்கிறார்.

50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்... பறிபோன ஐந்து லட்சம் வேலைகள்!

இது குறித்து ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமினிடம் கேட்டோம். ‘‘தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன என்பது தவறான தகவல். இதுகுறித்து எங்கள் அதிகாரி மூலம் உரிய விளக்கத்தை அளிக்கச் சொல்கிறேன்’’ என்றார்.

ஊரகத் தொழில் வணிகத் துறை கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம், ‘‘இந்தக் கணக்கீடு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.  2016-17-ம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் 2,67,310.  2017-18-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கைதான் 2,17,981. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பதிவுசெய்த நிறுவனங்களின் எண்ணிக்கைதான் குறைவு. அதற்காக 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல. தமிழகத்தில் மொத்தம் 17 லட்சத்து 79 ஆயிரம் நிறுவனங்கள் செயல்படுகின்றன. உத்யோக் ஆதார் பதிவு முறையை மத்திய அரசு 2015-ல் கொண்டு வந்ததால், 2016-ல் பதிவுசெய்த தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதுதான் நிதர்சனம். கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையே 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்படவில்லை. புதிய நிறுவனங்கள் பதிவுசெய்யவில்லை என்ற கணக்குதான் உண்மை. ஐந்து லட்சம் பேர் வேலை இழக்கவும் இல்லை. இதை நிர்வாகரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

ஊரகத் தொழில் துறை அதிகாரிகள் பலரும், ‘குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை’ என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ‘இதற்கு பணமதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி-யும் மட்டும் காரணமல்ல... தொழில்ரீதியாக பல்வேறு காரணங்கள் உள்ளன’ என்கிறார்கள். ‘‘முதலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்திவிட்டு, அதன்பிறகு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துங்கள்’’ என்கின்றனர் தொழில் துறையினர்.

- அ.சையது அபுதாஹிர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism