Published:Updated:

உலகின் நம்பர் 1 ரெஸ்டாரன்ட் மெக்டொனால்ட்ஸ் உருவானது எப்படி?

உலகின் நம்பர் 1 ரெஸ்டாரன்ட் மெக்டொனால்ட்ஸ் உருவானது எப்படி?
News
உலகின் நம்பர் 1 ரெஸ்டாரன்ட் மெக்டொனால்ட்ஸ் உருவானது எப்படி?

"ஒரு சிறிய உணவகத்தில், மக்கள் வெள்ளம் திரண்டு இருக்கிறது... இதுபோன்ற கூட்டத்தை நான் எங்கும் பார்த்ததேயில்லை. இவர்களிடம் ஏதோ இருக்கிறது."

ரம்பக் காலம் முதல் இன்று வரை, சுமார் 75 ஆண்டுகளாக `உலகின் நம்பர் 1 ரெஸ்டாரன்ட்' என்ற இடத்தைத் தக்க வைத்திருக்கிறது `மெக்டொனால்ட்ஸ்'. பர்கர், ஃபிரைஸ், சாலட்ஸ், சாண்ட்விட்ச், டெஸ்ஸர்ட்ஸ் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில `ஃபாஸ்ட் ஃபுட்' வகைகளை விற்றுவரும் இவர்களின் பிசினஸ் தந்திரம்தான் இன்று உலகமெங்கிலும் கொண்டாடவும் பின்பற்றவும்படுகிறது. அப்படி அவர்களிடம் என்ன ஸ்பெஷல்?

வரலாறு:

1940-ம் ஆண்டு, கலிபோர்னியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் மற்றும் மோரிஸ் மெக்டொனால்டு சகோதரர்களால் மிகவும் சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட `டிரைவ்-இன்' ஹாம்பர்கர் ரெஸ்டாரன்ட்தான் இன்று உலகமே கண்டு வியக்கும் `மெக்டொனால்ட்ஸ்'. அந்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்தது இந்த உணவகம். தேர்ந்தெடுக்கப்பட்ட மெனு, சட்டென ரெடியாகும் உணவு என அந்தக் காலத்து `மாடர்ன் உபகரணங்களை' கொண்டு தரமான `ஹாம்பர்கர்களை' விற்றுக்கொண்டிருந்தது. எதிர்பார்த்ததைவிட ஏராளமான மக்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருந்ததால், 1948-ம் ஆண்டு தங்களின் மெனு மற்றும் உணவு தயாரிக்கும் முறையை மாற்றியமைத்தனர். ஒற்றை சிறிய உணவகத்தில் ஆரம்பித்த இவர்கள், ஆறு உணவகங்கள் அமைக்கும் அளவுக்கு முன்னேறினர். அளவான மெனு, விறுவிறுவெனத் தயாராகும் உணவு வகைகள், சுத்தம், தரம், சுவை என மக்களுக்கு விருப்பமானதை சலிக்காமல் தொடர்ந்து கொடுத்து வந்ததே இவர்களின் வெற்றிக்குக் காரணம். அப்போதுதான், மெக்டொனால்ட்ஸின் `ரியல் ஹீரோ', ரே கிராக்கின் (Ray Kroc) அறிமுகம் இவர்களுக்குக் கிடைத்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரே கிராக் (Ray Kroc):

தனது பதினைந்தாவது வயதில், `ரெட் க்ராஸின்' ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிய வேண்டும் என்பதற்காக, தன் வயதை மிகைப்படுத்திக்கூறி, தன் வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தார் ரே கிராக். பிறகு, பியானோ வாசிப்பாளராகவும், `காகித கப்' வியாபாரியாகவும் சிறிது காலம் தன் வாழ்க்கையை நகர்த்தியுள்ளார். அதுவரை அவர் கடந்து வந்த பாதைகளின் அனுபவக் கற்களை ஒன்று திரட்டி, `Multimixer' வியாபாரம் தொடங்கினார். பல புதுமையான உபகரணங்களை தயாரித்து, பல ஹோட்டல்களுக்கும், கடைகளுக்கும் விற்றுவந்தார்.

இந்நிலையில்தான், ஒரே உணவகத்துக்கு 8 Multimixer ஆர்டர் வந்ததைக் கண்டு வியந்தார் ரே. `அப்படி என்ன அந்த உணவகத்தில் செய்கிறார்கள்!' என்ற ஆச்சர்யத்துடன், மெக்டொனால்ட்ஸ் உணவகத்தைப் பார்ப்பதற்காக விரைந்தார். அங்கு சென்ற ரே கிராக், ஆச்சர்யத்தில் உறைந்துபோனார். ``ஒரு சிறிய உணவகத்தில், மக்கள் வெள்ளம் திரண்டு இருக்கிறது... இதுபோன்ற கூட்டத்தை நான் எங்கும் பார்த்ததேயில்லை. இவர்களிடம் ஏதோ இருக்கிறது. நிச்சயம் இதுபோன்ற உணவகத்தை இரண்டு மூன்று நாமும் திறந்தால் எப்படி இருக்கும்!" என்றபடி அவரின் பகல் கனவு நீண்டுகொண்டேபோனது.

மெக்டொனால்ட்ஸ் சகோதரர்களைச் சந்தித்து, தன் விற்பனையிலிருந்து அவர்களுக்கு 0.5 சதவிகிதம் தருவதாகக் கூறி, `ரெஸ்டாரன்ட் செயின்' வைப்பதற்கு அனுமதி பெற்றார். ஐந்து ஆண்டுகளில், வெவ்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சுமார் 228 உணவகங்களை அமைத்தார். மேலும், குழந்தைகளை ஈர்ப்பதற்காக, `ரொனால்டு மெக்டொனால்டு' எனும் கோமாளி உருவத்தை விளம்பரங்களில் சேர்க்க ஆரம்பித்தார். அதைத்தொடர்ந்து 1960-களில், இந்த உணவகம் சுமார் 56 மில்லியன் டாலர் லாபம் பெற்றது. ஆனாலும், கிராக் கையைவிட்டு போகும் அந்த 0.5 சதவிகிதம் அவருக்கு அதிருப்தியைத் தந்தது. எனவே, McD சகோதரர்களிடமிருந்து எல்லா உணவகங்களையும், அதன் பெயர் உரிமையையும் வாங்க முடிவு செய்தார் ரே. இந்த எண்ணம்தான், இவர்களுக்குள் `ஈகோ' உருவானதற்கு காரணம். 2.7 மில்லியன் டாலரில் ஆரம்பித்து, 14 மில்லியன் டாலருக்கு மொத்த உரிமையையும் பெற்றார். ஆனால், அந்த ஒரிஜினல் உணவகத்தை மட்டும் McD சகோதரர்கள் இறுதிவரை விட்டுக்கொடுக்கவில்லை.

பலகட்ட போராட்டத்துக்குப் பிறகு, ஒரிஜினல் உணவகத்திற்கு பெயர்மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும், இன்றுவரை கிராக்தான் McD-யின் உரிமையாளர் என்று பலராலும் அறியப்படுகிறது. சாதாரண உணவகமாய் இருந்ததை, உலகறியச் செய்தவர் ரே கிராக்தானே. என்றாலும், நாங்கள் இல்லையென்றால் கிராக் இல்லை என்று மறுபுறம் McD சகோதரர்கள் ஆதங்கத்தில் உறைத்தனர்.

சில உண்மைகள்:

1967-ம் ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியாவில்தான், முதல் சர்வதேச McD உணவகம் திறக்கப்பட்டது.

1988-ம் ஆண்டு, விர்ஜினியாவில் பத்தாயிரமாவது உணவகம் திறக்கப்பட்டது.

2008-ம் ஆண்டு, 118 நாடுகளில் மொத்தமாய் 31,967 உணவகங்கள் இருந்தன. தற்போது சுமார் 36,200 உணவகங்கள் இருக்கின்றன.

2010-ம் ஆண்டு, 28,000 உணவகங்களில் இலவச WiFi இணைப்புகள் வழங்கப்பட்டன.

தினமும் 69 மில்லியன் வாடிக்கையாளர்களை இந்த உணவகம் வரவேற்கிறது.

40 சதவிகித வருவாய் ஐரோப்பாவிலிருந்தும் (லண்டன், பிரான்ஸ், ரஷியா மற்றும் ஜெர்மனி), 32 சதவிகித வருவாய் அமெரிக்காவிலிருந்தும், 23 சதவிகித வருவாய் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்தும் பெறுகின்றனர்.

சுமார் 4,20,000 ஊழியர்களை இந்த உணவகம் பெற்றுள்ளது.