Published:Updated:

சென்னையில் பிசினஸ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ் - டிசம்பர் 8, 15 & 16 தேதிகளில்!

புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கும், முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும், அவர்களுடைய அனுபவத்தை, நிபுணத்துவத்தைப் பகிர்ந்தளிக்கச் செய்து வழிகாட்டுவதற்காக, நாணயம் விகடன் இதழ் சார்பாக சென்னையில் மூன்று நாள் பிசினஸ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ் நடைபெற உள்ளது.

சென்னையில் பிசினஸ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ் - டிசம்பர் 8, 15 & 16 தேதிகளில்!
சென்னையில் பிசினஸ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ் - டிசம்பர் 8, 15 & 16 தேதிகளில்!

பிசினஸ் செய்வதற்கும் முதலீடு செய்வதற்கும் பணம் எவ்வளவு அவசியமோ, அதேபோல பிசினஸ், முதலீடுகள் குறித்த அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்வதும் மிகவும் அவசியம். இந்த துறைகளில் நன்முறையில் செயல்பட்டு உயர்நிலையை அடைந்திருப்பவர்களின், நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்பதன்மூலம் நம்முடைய அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அவர்களைத் தனிப்பட்டு சந்திப்பதும், ஆலோசனை கேட்பதும் அவ்வளவு எளிதான செயலல்ல. ஒவ்வொருவரும் அவரவர் பணியில் பிஸியாக இயங்கிக்கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கும், முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும், அவர்களுடைய அனுபவத்தை, நிபுணத்துவத்தைப் பகிர்ந்தளிக்கச் செய்து வழிகாட்டுவதற்காக, நாணயம் விகடன் இதழ் சார்பாக சென்னையில் மூன்று நாள் பிசினஸ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி, எண் 240, பாதரி ரோடு, சென்னை-6 என்ற முகவரியிலுள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேசன் அரங்கில் நடைபெறுகிறது. 

நாணயம் விகடன் பிசினஸ் கான்க்ளேவ், சென்னையில், டிசம்பர் மாதம் 8-ம் தேதி, சனிக்கிழமை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அந்த கான்க்ளேவில் சிறப்புப் பேச்சாளர்களாக, தைரோகேர் சேர்மன் டாக்டர் ஏ.வேலுமணி, நேச்சுரல்ஸ் சலூன் & ஸ்பா சி.இ.ஓ., சி.கே.குமாரவேல், அமேசான், டிஜிட்டல் ஆப்ஸ் & கேம்ஸ் சர்வீஸ் குரூப் டைரக்டர் மணிகண்டன் தங்கரத்னம், ஐ.ஐ.டி. மெட்ராஸ், பேராசிரியர் ஏ.தில்லை ராஜன், டெட்எக்ஸ் ஸ்பீக்கர் கே.வைத்தீஸ்வரன், கொஃப்ரூகல் நிறுவனர் & சி.இ.ஓ. குமார் வேம்பு ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள்.

நாணயம் விகடன் ஃபைனான்ஸ் கான்க்ளேவ், சென்னையில், டிசம்பர் மாதம் 15, 16-ம் தேதிகளில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் 15-ம் தேதி நிகழ்ச்சியில், மார்சிலஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவ்ரப் முகர்ஜி, இன்வெஸ்ட்மென்ட் அனலிஸ்ட் ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.டி.பி.ஐ. கேப்பிட்டல் ஹெட் ஆஃப் ரிசர்ச் ஏ.கே.பிரபாகர், ஃப்ராங்ளின் டெம்ப்லெட்டான் இந்தியா மேனேஜர் ஜானகிராமன் ரெங்கராஜு, எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் (ஈக்விட்டி) ஹெட் ஆர்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் சிறப்புறையாற்றுகிறார்கள். 
இரண்டாம் நாள், டிசம்பர் 16-ம் தேதி நிகழ்ச்சியில், ரிசர்ச் அனலிஸ்ட் டாக்டர் எஸ்.கார்த்திகேயன், எக்ட்ரா சி.இ.ஓ., டி.ஆர்.அருள்ராஜன், யுனிஃபை கேப்பிடல் பிரைவேட் லிமிடெட், எக்ஸிகியூடிவ் டைரக்டர் ஜி.மாறன், இன்டஸ்வெல்த்.காம் பிரின்சிபல் அட்வைஸர் பிரவீன் ரெட்டி, காம்ட்ரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் டைரக்டர் ஞானசேகர் தியாகராஜன், யூடிஐ அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட்., குரூப் ப்ரெசிடென்ட் வெற்றி சுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

பிசினஸ் & ஃபைனான்ஸ் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் மூன்று நாள்களும் கலந்துகொள்ள (நவம்பர் 20 வரை பதிவு செய்பவர்களுக்கு) ரூ.3500/-*, மாணவர்கள், பெண்களுக்கு, மாணவர்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர் ரூ.3,000/-*, கார்ப்பரேட் பல்க் புக்கிங் (5 நபர்களுக்கு மேல்) நபர் ஒருவருக்கு ரூ.3,000/-* என நிர்ணயித்துள்ளார்கள். இரண்டு நாள்களுக்கு மட்டும் (டிசம்பர் 15, 16) கலந்துகொள்ள (நவம்பர் 20 வரை பதிவு செய்பவர்களுக்கு) ரூ.3,000/-*, பெண்களுக்கு, மாணவர்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர் ரூ.2,500/-*, கார்ப்பரேட் பல்க் புக்கிங் (5 நபர்களுக்கு மேல்) நபர் ஒருவருக்கு ரூ.2,500/-* என நிர்ணயித்துள்ளார்கள். 
பிசினஸ் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொள்ள (நவம்பர் 20 வரை பதிவு செய்பவர்களுக்கு) ரூ.2,000/-*, மாணவர்கள், பெண்களுக்கு, மாணவர்களுக்கு ஸ்பெஷல் ஆஃபர் ரூ.1,500/-*, கார்ப்பரேட் பல்க் புக்கிங் (5 நபர்களுக்கு மேல்) நபர் ஒருவருக்கு ரூ.1,500/-* என நிர்ணயித்துள்ளார்கள். (* ஜி.எஸ்.டி. தனி.)

ரெஜிஸ்ட்ரேசன் செய்ய http://bit.ly/nvconclave இணைப்பில் பார்க்கவும். அல்லது செல்பேசி எண் 99404 15222 அணுக வேண்டும்.