Published:Updated:

"மழை பெஞ்சா மணிமுத்தாறு... வெயிலடிச்சா கற்குளம் கண்மாய்!"

"மழை பெஞ்சா மணிமுத்தாறு... வெயிலடிச்சா கற்குளம் கண்மாய்!"

ரியூர் மாதவன் சுதர்சன நாச்சியப்பன்தான், இ.எம்.சுதர்சன நாச்சியப்பன். ஏரியூரில் பிறந்து காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா துணைத் தலைமை கொறடா வரை உயர்ந்திருப்பவர். தன் வேர்கள் பதிந்திருக்கும் ஏரியூர் பற்றி இங்கே பேசுகிறார்...

"மழை பெஞ்சா மணிமுத்தாறு... வெயிலடிச்சா கற்குளம் கண்மாய்!"
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மூன்று வயதில் தந்தையை இழந்த நான், ஆறு வயதில் சுவீகாரம் கொடுக்கப்பட்டேன். என் வளர்ப்புத் தந்தை மாதவன், போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்தார். அவருக்கு டிரான்ஸ்ஃபர் வரும்போது எல்லாம் நானும் டிரான்ஸ்ஃபர் ஆகிவிடுவேன். இருந்தாலும் ஏரியூரை நாங்கள் மறந்தது இல்லை. தைப் பொங்கலுக்கும் சித்திரை தமிழ் வருஷப் பிறப்புக்கும் என்னுடைய நண்பர்கள் அருணகிரியும் சூரியகுமாரும் எனக்காக ஏரியூரில் காத்திருப்பார்கள். ஊர் முகப்பில் இருக்கும் மருந்தீஸ்வரர் கோயில் மலையில் ஒன்றாகக் கூடுவோம். போகும்போதே புளியம்பிஞ்சுகள் பறித்துமலைப் பாறைகளில் உரசிச் சாப்பிடுவோம். மலை

உச்சியில் காய்ச்சுக்கிடக்கிற 'காக்கரட்டான்’ காய்களைப் பறிச்சு, மேலே தூக்கிப் போட்டு, அது காத்தாடி போல் சுற்றி வர்றதைப் பார்த்து ரசிப்போம். மழை பெய்யும் காலங்களில் மணிமுத்தாறில் ஊறிக்கிடப்போம். வெயிலடிச்சா கற்குளம் கண்மாயில் களிமண் எடுத்துவந்து வண்டி செஞ்சு உருட்டுவோம். எங்கள் மூவரின் சிநேகத்தின் மீது ஆண்டவனுக்கே பொறாமை போல... சின்ன வயதிலேயே என் நண்பர்களை என்னிடம் இருந்து பிரித்து விட்டான். அதுக்குப் பிறகு நான் யார்கூடவும் நெருங்கிப் பழகலை.

"மழை பெஞ்சா மணிமுத்தாறு... வெயிலடிச்சா கற்குளம் கண்மாய்!"

என்னுடைய பெரிய தகப்பனார் சொக்கலிங்கம் அம்பலம் 1958-ல், கவியரசு கண்ணதாசனை எதிர்த்து நின்று, திருகோஷ்டியூர் எம்.எல்.ஏ. ஆனார். அந்த நேரத்தில் காமராஜரும் நேருவும் எங்கள் ஊர் வழியாகத் திறந்த காரில் சிவகங்கைக்குச் சென்றார்கள். அவர்களை வர வேற்பதற்காகப் பெரிய தகப்பனாரோடு நானும் சென்று இருந்தேன். நேரு, காமராஜர் இருவரும் கழுத்தில் விழுந்த மாலைகளை மக்களை நோக்கி வீசினார்கள். அதை எடுக்க அத்தனை போட்டி. தலைவர்கள் கழற்றி வீசும் மாலைக்குக் கூட இத்தனை மவுசா?! என்று எனக்கு வியப்பாக இருந்தது. அரசியல்வாதியாக ஆன பின்பு அந்த வியப்புக்கு விடை தெரிந்தது. முதன்முதலில் எங்கள் ஊருக்கு 1958-ல் டீசல் இன்ஜினில் ஓடிய பஸ் வந்தது. ஆனந்தா டிரான்ஸ்போர்ட்டின் டீசல் 'கோச்’சை ஆச்சர்யத்துடன் தொட்டுப் பார்த்த கிராமத்தான்களில் நானும் ஒருவன். டிரைவர், கண்டக்டருக்கு மாலை மரியாதையும் நடந்தது.

சட்டப் படிப்பை முடித்துவிட்டு, 1972-ல் ஊருக்கு வந்தேன். 300 ரூபாய்க்கு மோதிரத்தை அடகுவெச்சு, ஈ.வி.கே.சம்பத்தை ஏரியூருக்கு அழைத்துவந்து கூட்டம் போட்டேன். அதுதான் என் நேரடி அரசியல் பயணத்தின் தொடக்கம். ஊருக்கு மத்தியில் முளைக் கொட்டு திண்ணை. அந்தக் காலத்தில் எங்க பெரிய தகப்பனாரைத் தவிர யாரும் அதில் உட்கார மாட்டார்கள். மாசி மாதம் முளைப்பாரி போட்டுக்கொண்டு வந்து இங்கே வைத்து, பெண்கள் 'தானானா’ கொட்டுவார்கள். பங்குனி உத்திரத்தன்று இந்தத் திண்ணையில் சாதம் வடித்துக் கொட்டி, கிராம மக்களுக்கு அன்னதானம் நடக்கும். அருகில் உள்ள அம்மச்சியாபட்டியில் எங்க குலதெய்வம் மனைகோலி அம்மன் கோயில் இருக்கு. தமிழ்ப் புத்தாண்டுக்கு எங்கள் சொந்த பந்தங்கள் அனைவரும் இங்கு கூடு வோம். அப்போது அவரவர் தகுதிக்கு ஏற்ப சமையல் செய்து, பகிர்ந்து உண்போம். அந்த மகிழ்ச்சியான தருணங்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கம் எனக்குள் இப்போதும் உண்டு.

"மழை பெஞ்சா மணிமுத்தாறு... வெயிலடிச்சா கற்குளம் கண்மாய்!"

'உன் பெயரோடு கட்டாயம் 'ஏரியூர்’ இருக்க வேண்டும்’ என்பது என் வளர்ப்புத் தந்தையாரின் அன்புக் கட்டளை. நாடாளுமன்றத்தில், 'ஏரியூர் மாதவன் சுதர்சன நாச்சியப்பன்’ என, என்னுடைய பெயர் பதிவானபோது, நான் கொண்ட பெருமைக்கு அளவே இல்லை. கவலைக்கு மருந்து; களிப்புக்கு விருந்து எல்லாமே எனக்கு மருந்தீஸ்வரர்தான். அந்தக் கோயிலின் திருப்பணிக் குழுத் தலைவராக, இப்போது நான் இருப் பதும் பாக்கியம்தான். என் காலத்துக்குள் நான் பிறந்த ஊரை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்பதுதான் என் ஆசை'' - மருந்தீஸ்வரர் வாசலில் மனம்விட்டுச் சிரிக்கிறார் இ.எம்.எஸ்!  

"மழை பெஞ்சா மணிமுத்தாறு... வெயிலடிச்சா கற்குளம் கண்மாய்!"
"மழை பெஞ்சா மணிமுத்தாறு... வெயிலடிச்சா கற்குளம் கண்மாய்!"
"மழை பெஞ்சா மணிமுத்தாறு... வெயிலடிச்சா கற்குளம் கண்மாய்!"
"மழை பெஞ்சா மணிமுத்தாறு... வெயிலடிச்சா கற்குளம் கண்மாய்!"

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: பா.காளிமுத்து