Published:Updated:

நூற்றாண்டு நூலகம்!

நூற்றாண்டு நூலகம்!

நூற்றாண்டு நூலகம்!

ண்ணா நூற்றாண்டு விழா நூலகம் இடமாற்றம் பற்றிய சர்ச்சை நீதிமன்றப் படி ஏறி நிற்கும் நிலையில், தனியார் நூலகம் ஒன்று தன்னுடைய நூற்றாண்டினை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

நூற்றாண்டு நூலகம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்து உள்ள அந்த நூலகத்தின் பெயர் 'வித்தியாபி விருத்தி சங்கம்’. ஷத்திரிய வித்தியாசாலை தலைமை ஆசிரியர் எஸ்.சுப்பராய அய்யர் துணையுடன், மதுரை-கமுதி வர்த்தகர் வெ.பி.சங்கர பாண்டியநாடார் முயற்சியினால் இந்த நூலகம் தொடங்கப்பட்டது. 1915-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் நாளில் தொடங்கப்பட்ட இந்த நூலகம், அனைத்து தரப்பு மக்க ளும் பயன்படுத்தும் வகையில் இன்று வரை இயங்கிவருகிறது. இந்த நூலகத் தின் தொடக்கக் காலங்களில் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் மாதாந்திரச் சொற் பொழிவுகள் நடைபெற்று இருக்கின்றன. சௌந்திரபாண்டியனார், தந்தை பெரியார், முன்னாள் அமைச்சர் சேதுரத்தினம்,   ஸ்ரீஅத்வைதானந்த சுவாமி, வி.எம். அப்துல் ரஹ்மான், பி.கே.எஸ்.ஏ. ஆறுமுக சாமி நாடார் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இது மட்டுமின்றி பி.டி.ராஜன், பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் ஆகியோர் இந்த நூலகத் துக்கு வருகைபுரிந்து பாராட்டி உள்ளனர்.  
நூற்றாண்டு நூலகம்!

பழமையான, விவேக போதினி (1914), சிந்தாமணி மாத இதழ் (1924) சுதேசமித்திரன் வார இதழ் (1944), காண்டீபம் (1951), ஆனந்தவிகடன் தீபாவளி மலர்கள் (1952 முதல்) அக்காலங்களில் வெளியான கலைக்கதிர், கலைமகள் உள்ளிட்டவை இங்கே உள்ளன. இந்த நூலகத்தின் தொடக்கம் முதல் தன்னுடைய இறுதிக் காலம் வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகராகப் பணியாற்றியவர் வீ.சரவணபாண்டிய நாடார். நூலகத்துக்கு வரும் அனைத்துஇதழ்களை யும் தொகுத்து, அவற்றை பைண்டிங் செய்து பாதுகாத்துவைத்து இருந்தார். இந்த நடை முறையே இன்றும் தொடர்கிறது. நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அதற்கான பிரத்தியேக 'பைண்டு’களில் வைத்தே வாசகர்களிடம் வாசிக்கக் கொடுக்கப்படுகிறது.

இந்த நூலகத்தின் மற்றுமொரு சிறப்பு, இங்கு உள்ள வானொலிப் பெட்டியாகும். 1944-ல் கமுதியில் முக்கியப் பிரமுகர்கள் இருவருடைய வீட்டில்தான் வானொலி இருந்துள்ளது. இதை அடுத்து இந்த நூலகத்தில் வானொலிப் பெட்டி வைக்கப்பட்டு, ஊரில் உள்ள அனைவரும் கேட் கும் வகையில் ஒலிப்பெருக்கி மூலம் செய்திகளும் திரை இசைப் பாடல்களும் ஒலி பரப்பப்பட்ட னவாம்.

வித்தியாபி விருத்தி சங்கத்தின் தற்போதையத் தலைவர் கவிராஜன், செயலாளர் சின்னமணி ஆகியோர் நம்மிடம், ''அரசு நூலகம் வந்த பிறகு சங்க நூலகத்தின் மதிப்பு குறைந்துவிட்டது. இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் விரும்பும் நவீன நூல்கள் தேவையான அளவு இல்லை. அதற்குக் காரணம் நிதி இல்லாததுதான். உறுப்பினர்கள் கொடுக்கும் சந்தா மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் வாங்கப்படுகின்றன. கூடுதல் நிதியைத் திரட்டி நவீன நூல்கள் பல வாங்குவதுடன், நூற்றாண்டைத் தொட இருக்கும் இந்த நூலகத்தின் பழமையான நூல் களைப்  பாதுகாத்து,  வருங்கால சந்ததியினர் வாசிக்க வழிவகுப்போம்'' என்கின்றனர்.

நூற்றாண்டு நூலகம்!

-இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி