‘‘மக்கள் நம் அரசியல் அமைப்பின்மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அதனால்தான் கூடங்குளம், ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், தூத்துக்குடி போராட்டங்களில் எல்லாம் அரசியல் கட்சிகளை மக்கள் அனுமதிக்கவே இல்லை. ‘தாங்களாகவே திரண்டு தங்களுக்காகப் போராடினால்தான் வெற்றிபெற முடியும்’ என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் உருவாக்கியதில் எங்களின் பங்கும் இருக்கிறது’’ என்கிறார், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் பொருளாளர் காளியப்பன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வன்முறையின் பின்னணியில் இருந்ததாக, இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தேடித்தேடிக் கைது செய்துகொண்டிருக்கிறது காவல்துறை. இந்தச் சூழலில், காளியப்பனிடம் பேசினோம்.

‘‘மக்கள் அதிகாரம் அமைப்பு என்ன நோக்கத்துக்காக தொடங்கப்பட்டது?’’

‘‘இப்போதிருக்கும் அரசுக் கட்டமைப்பால் மக்கள் பிரச்னை எதையும் தீர்க்க முடியவில்லை. இந்த அரசு நிர்வாக நடைமுறை, பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இன்றைக்கும் இந்தியாவின் பல நகரங்களில் குடிதண்ணீருக்காகப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நாட்டில் மூன்று லட்சம் கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வில்லை. குடிநீர் என்பது உயிர்வாழ அடிப்படைத் தேவை. அதைக்கூட இன்னும் இந்த அரசுகளால் தரமுடிய வில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரமுடிய வில்லை. அனைத்து மட்டங்களிலும் ஊழல் புரையோடிக் கிடக்கிறது. கிரிமினல்களும் பெரும் பணக்காரர்களும் மட்டும்தான் இந்த அமைப்பில் அங்கமாக இருக்கிறார்கள். மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்கு இந்தக் கட்டமைப்பை நம்பிப் பயனில்லை. மக்களே தங்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்து, வாழ்வாதார உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு மக்களைத் தயார்படுத்தும் வகையில் ‘மக்கள் அதிகாரம்’ உருவாக்கப்பட்டது.’’

‘‘உங்கள் போராட்ட வடிவம் உக்கிரமாக இருக்கிறதே?’’

‘‘இதை மக்களின் கோபமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். யாரும் திட்டமிட்டு ஆயுதங்களை எடுத்துவந்து யாரையும் தாக்கவில்லை. ‘மூடு... மூடு...’ என்று கூக்குரலிட்டு ஓய்ந்துபோன மக்கள், தங்களுக்கருகில் கிடக்கிற கல்லையெடுத்து டாஸ்மாக் கடைமீது எறிகிறார்கள், அவ்வளவுதான். இதெல்லாம் திட்டமிட்ட வன்முறை கிடையாது. மகாராஷ்டிராவில் 50 ஆயிரம் விவசாயிகள் நாக்பூரிலிருந்து மும்பை வரை நடைபயணமாக வந்தார்கள். தலைநகரில் அவர்கள் கூடியவுடனே முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகளை அனுப்புகிறார். ‘உங்களின் 90 சதவிகிதக் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுகிறேன்’ என்கிறார். எல்லோரும் அமைதியாகக் கலைந்து போய்விட்டார்கள். சின்ன வன்முறைகூட இல்லை. மக்கள் எப்போதும் வன்முறையின் பக்கம் போக விரும்புவதேயில்லை. அவர்களின் பிரச்னையைக் காது கொடுத்துக் கேட்டுத் தீர்த்துவிட்டால், தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். வன்முறையைக் கையிலெடுப்பது ஆட்சியாளர்கள் தான்.’’

“தூத்துக்குடி வன்முறையின் பின்னணியில் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?”

“இது திட்டமிடப்பட்ட சதி. இந்த வன்முறைக்கும், 13 பேர் அநியாயமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கும் முழுக் காரணம், அரசும் காவல்துறையும்தான். இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகளும், அவர்களை ஆட்டுவிப்பவர்களும், தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மொத்தப்பழியையும் எங்கள்மீது போடுகிறார்கள். எங்கள் அமைப்பின் செயல்பாட்டை முடக்கி அவப்பெயரை உருவாக்கும் நோக்கத்தில்தான் இப்படியான தாக்குதல்களைத் தொடுக்கிறார்கள்.

வழக்குகள் மூலம் எங்களை ஒடுக்கலாம் என்று நினைத்தால் நாங்கள் மேலும் வளர்ந்து நிற்போம். மிரட்டல், தடைக்கெல்லாம் ஒருபோதும் பணியப்போவதுமில்லை; அஞ்சப்போவது மில்லை. எங்களை ‘எலிமினேட்’ செய்து முடித்து விடலாம். ஆனால், மக்களின் பிரச்னைகளைத் தீர்க்காதவரை போராட்டங்களை யாராலும் தடுக்க முடியாது. வீடுகளில் போய் மிரட்டுவது, சிக்குவோரை அள்ளிவந்து வழக்குப் போடுவதெல்லாம் நடக்கின்றன. 30 தோழர்களுக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆறு பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. இரண்டு பேர்மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டிருக்கிறார்கள். இவர்கள்மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்படலாம் என்று சந்தேகிக்கிறோம். தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டிருக்கும் ஆறு பேரில் கலீல் ரகுமான், முகமது அனஸ், முகமது இஷ்ரத் ஆகிய மூன்றுபேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனஸ், பி.எஸ்.எம்.எஸ் நான்காமாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இஷ்ரத் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பட்ட மாணவர். கலீல் ரகுமான், இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து எழுதிவருபவர். அதற்காகவே பல மிரட்டல்களைச் சந்தித்தவர். இவர்கள் ஆர்வத்தின் பேரில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்தான். மற்ற தோழர்களும்கூட எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். எல்லோரும் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசுக்கு நான் சவாலாகவே சொல்கிறேன்... எங்கள் இயக்கத்தினரோ, ஆதரவாளர்களோ, சிறு கல்லையெடுத்து எறிந்தார்கள் என்று ஆதாரம் காட்டுங்கள். மொத்தப்பழியையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.”

“திட்டமிட்டு வன்முறையை உருவாக்கும் அளவுக்கு அரசுக்கு என்ன உள்நோக்கம் இருக்கமுடியும்?”

“நிறைய... தமிழகத்தின் எல்லாத் திசைகளிலும் வாழ்வாதாரத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்ட உணர்வை முடக்க வேண்டும். ‘கூடிக் குரல் கொடுத்தால் சுட்டுத்தள்ளுவோம்’ என்று உணர்த்த வேண்டும். அச்சத்தை உருவாக்க வேண்டும். மக்கள் அதிகாரம் போல, மக்களுக்காக நிற்கிற அமைப்புகளை ஒடுக்க வேண்டும். இதுதான் அரசு வன்முறையின் நோக்கம். இதுவரை நாம் சந்தித்த அடக்குமுறைகளிலேயே இது மிகவும் கொடூரமானது. ஜெயலலிதாவால் பயிற்றுவிக்கப்பட்ட முதல்வர், அவரை விடவும் கொடூரமாக அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் ஆச்சர்யப்பட்டுப் போயிருப்பார். இதைக் கண்டிக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் அற்ப காரணங்களுக்கெல்லாம் துப்பாக்கியெடுத்து சுடுவார்கள்.”

- வெ.நீலகண்டன்
படம்: எல்.ராஜேந்திரன்