தினகரன் பக்கம் போன 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு, பெரும் பரபரப்புகளுக்கு இடையே விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் ஆளுக்கொரு பக்கம் நின்று கோல் போட... மேட்ச் டிரா! இப்போது, மூன்றாவதாக ஒருவர் வந்து தீர்ப்பு சொல்லவேண்டும். இதற்கு நடுவில், 18 பேருக்கும் கவர்ச்சிகர ஆஃபர்களைக் கொடுத்து கவர எடப்பாடி தரப்பு முயற்சி செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுல ஏதாவது யூஸ் ஆகுமான்னு பாருங்க பாஸ்!

சின்ன இதய தெய்வம் தீபாம்மா ஒரு கட்சி, அவருக்குக் கணவராக இருக்கும் ஒரே காரணத்துக்காக மாதவன் ஒரு கட்சி, போதாக்குறைக்கு திவாகரன் ஒரு கட்சி என ஆளுக்கொரு கட்சி தொடங்குகிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒரு குடையின்கீழ் இணைத்து ‘பாத்தீங்களா? எல்லாரும் ஒண்ணா சேர்ந்துட்டோம்’ என மாஸ் காட்டி மிரட்டி இந்த எம்.எல்.ஏ-க்களையும் இழுக்கலாம்.

அமைச்சர் பதவி தருவதாகத்தான் டீல் பேசுகிறார்களாம். அப்புறம் இப்போதுள்ள அமைச்சர்கள் என்ன செய்வார்கள்... பாவம். எனவே, சினிமாவில் இணை இயக்குநர்கள் என நான்கைந்து பேர் போடுவதைப் போல இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு, துணை ஒருங்கிணைப்பாளர் மூன்று என்று பதினெட்டு பேருக்கும் கௌரவப் பதவிகளைக் கொடுத்து அலங்கரிக்கலாம்.

முதல் இரண்டு ஐடியாக்களும் வேலைக்கு ஆகாவிட்டால், ‘‘என்ன தம்பி... இன்னும் எத்தனை நாளைக்கு உறுப்பினராவே இருக்கப்போறீங்க? ஆளுக்கொரு கட்சி ஆரம்பிச்சுத் தர்றோம். தலைவரா இருந்துட்டுப் போங்க’’ என ஆசை காட்டவேண்டியதுதான். திராவிடம், எம்.ஜி.ஆர்., அம்மா போன்ற வார்த்தைகளைக் கலைத்துக் கலைத்துப் போட்டால் பல கட்சிகளுக்குப் பெயர் சூட்டலாம்.

அதற்கும் யாரும் ஒத்துவரவில்லையா? ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அந்த ஒரு முடிவை எடுத்தால் அவர்களுக்கு... தமிழக மக்களுக்கு என எல்லாருக்கும் நல்லது. பேசாம மொத்தமா ஆட்டையக் கலைச்சுட்டுப் போய்டலாம் ப்ரோ! மெகா சீரியலைவிட லென்த்தா போகுது. ப்ளீஸ்!

ஓவியம்: பிரேம் டாவின்ஸி