தமிழகத்தின் கலைப் பொக்கிஷங்களான கோயில் சொத்துகள், தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கொள்ளை போய்க்கொண்டிருக் கின்றன. ஆலயங்களைக் காப்பாற்றவேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த ஆலயங்களைப் பொலிவு மாறாமல் காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் தலைமை ஸ்தபதி என்று பலரும் கூட்டுச் சேர்ந்துகொண்டு கொள்ளை யடித்தது இப்போதுதான் அம்பலமாகிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் கடுமையாகக் கறார் காட்டி, குற்றவாளிகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக் கிறார், தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவின் ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல். அவரின் கைகளைக் கட்டிப்போட பலரும் துடிக்கின்றனர். குறிப்பாக, தமிழக போலீஸ் டி.ஜி.பி அலுவலகம் வரை இவர்களின் செல்வாக்கு சென்றிருப்பதுதான் கொடுமை.

தமிழகத்தில் நடந்திருக்கும் ஏராளமான சிலைக் கடத்தல்கள் தொடர்பான வழக்குகளை, பொன்.மாணிக்கவேல் டீம் விசாரிக்கிறது. பழனி பாலதண்டாயுதபாணி கோயில் சிலையை வடிவமைத்ததில் நிகழ்த்தப்பட்ட முறைகேடு தொடர்பான விவகாரத்தையும் இவர்கள் கையிலெடுத்தனர். இந்த விவகாரத்தில் தலைமை ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, தங்க நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஓய்வுபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் மட்டும் தலைமறைவாகிவிட்டார். அவரது முன்ஜாமீன் மனுவை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, தனபால் குறித்துத் துப்பு கொடுத்தால் ரூ.20 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிவிடாதபடி லுக்-அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளனர். தனபாலின் வீடு, அலுவலகம், அவருக்கு அடைக்கலம் கொடுப்பதாகச் சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் என 27 இடங்களில் விரைவில் ரெய்டு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் உள்ளூர் பிரமுகர் ஒருவருடன் பைக் பின்னால் அமர்ந்து சென்ற தனபால், காரில் பின்தொடர்ந்து வந்த போலீஸாரைப் பார்த்து எஸ்கேப் ஆகிவிட்டாராம். அதேபோல், சென்னையில் ஜோதி என்பவரின் பைக்கில் தனபால் போவது தெரிந்து போலீஸ் பின்தொடர, இங்கும் போலீஸாரின் கண்ணிலிருந்து மறைந்தாராம் தனபால். புதுச்சேரியில் பிரபல ஹோட்டல் உரிமையாளர் ஒருவரின் பாதுகாப்பில் தங்கியிருந்த தனபாலை போலீஸார் பிடிக்கப்போன தகவல் தெரிந்து, சில நிமிடங்களுக்குமுன்பு அவர் தப்பிவிட்டாராம். நம் திட்டமெல்லாம் எப்படி கசிகிறது என்று சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஆராய்ச்சியில் இறங்க, கறுப்பு ஆடு ஒன்று பிடிபட்டதாம்.

பழனி விவகாரத்தை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர்தான், அந்தக் கறுப்பு ஆடு. தனபால் வீட்டில் ரெய்டு நடத்த நீதிமன்றத்தில் அனுமதி வாங்காமல் இழுத்தடித்தது, தன் தாயார் இறந்தபோது வீட்டுக்கு வந்த தனபாலைக் கைது செய்யவிடாமல் போலீஸாரைக் குழப்பிவிட்டது என்று வரிசையாக அவருக்கு உதவி வந்திருக் கிறார் அந்த அதிகாரி. தற்போது, அந்தக் கறுப்பு ஆட்டை வேறு வழக்கு விசாரணைக்கு மாற்றவுள்ளார்கள்.

தனபால் தலைமறைவாகிவிட்ட நிலையில், சில விவரங்களைப் பெறுவதற்காக அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை நாடியுள்ளனர் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார். ஆனால், ஒத்துழைப்பு கிடைக்காததால், அந்த அலுவலகத்தில் ரெய்டு நடத்துவதற்காக அனுமதி பெறும் வேலை இப்போது நடக்கிறது.

இந்நிலையில்தான், டி.ஜி.பி அலுவலகத்திலிருந்தே சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்குக் கடுமையான நெருக்கடி கொடுக்கப்படுவதாகத் தகவல்கள் கசிகின்றன. இதுபற்றிப் பேசும் பழனி ஆன்மிக ஆர்வலர்கள் சிலர், ‘‘டி.ஜி.பி ராஜேந்திரன் ஏற்கெனவே பழனி கோயில் வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதைக் கடுமையாக எதிர்த்தார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல். இவ்விஷயத்தில் இருவருக்குமிடையே கடுமையான கடித மோதல் நடத்ததாகக்கூட சொல்கிறார்கள். நாங்கள் நீதிமன்றம் போனதால், ‘பொன்.மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிக்கவேண்டும்’ என்று உத்தரவு வந்தது.

ஆனால், இப்போது ‘தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளின் மீடியேட்டர்’ என்று அழைக்கப்படும் ஒரு பிரமுகர், இதில் மூக்கை நுழைத்திருக்கிறார். அவரை ஓர் உயர் அதிகாரி முடுக்கிவிட்டிருக்கிறார் எனத் தகவல். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் துடிப்பான அதிகாரியை அந்த மீடியேட்டர் சந்தித்து, டி.ஜி.பி ஆபீஸ் உச்ச அதிகாரியின் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டாராம். துடிப்பான அதிகாரியை அழைத்துப்போய், போலீஸாரின் ரகசிய நடவடிக்கைகள் அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டாராம். ‘ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்’ என்று விசாரித்த போதுதான், யாரையோ காப்பாற்றும் நோக்கில் செயல்படுகிறார் என்பது தெரியவந்தது. தனபாலை நெருங்கவிடாதபடி பொன்.மாணிக்கவேலை பாலிடிக்ஸ் சுழற்றியடிக்கிறது’’ என்கிறார்கள்.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் இதுபற்றிப் பேசியபோது, ‘‘இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், வக்கீல்கள், சிலைகளின் தன்மையைக் கண்டறிய வந்த ஐ.ஐ.டி டீம் என்று லிஸ்ட் எடுத்துப்பார்த்தால், முருகனின் பெயர் எல்லோருக்கும் இருக்கும். சிலை மோசடியை விசாரிக்கும் நாங்கள் ஒரு கருவி. எங்களை இயக்குவது முருகன்தான். அதனால், வேறு எந்தச் சக்தியையும் கண்டு நாங்கள் பயப்படப்போவதில்லை’’ என்றனர்.

- சூரஜ்

விசாரணைக்கு ஒத்துழைப்பார்!

தனபால் பற்றி அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் விசாரித்தோம். ‘‘ஜூன் 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று சென்னையில் உள்ள தனபால் வீட்டில் சம்மன் கொடுத்தார்கள். ஆனால், கைது செய்யத்தான் தன்னை விசாரணைக்கு அழைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டவர், ஜாமீன் பெறும் முயற்சியில் இறங்கினார். விசாரணைக்கு வராததால், 9-ம் தேதி காலை மீண்டும் சம்மன் வழங்கினார்கள். இந்நிலையில், தனபாலுக்குச் சொந்தமான பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்து வீட்டிலும், சென்னை வீட்டிலும் தினமும் போலீஸார் விசாரித்தபடி இருக்கிறார்கள். வீட்டை வீடியோ எடுக்கிறார்கள். ‘எங்கள் வீட்டில் ஏதாவது பொருள்களை வைத்து, பிரச்னையில் சிக்கவைக்க போலீஸ் திட்டமிடுகிறது’ என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனபாலின் மனைவி புகார் கொடுத்திருக்கிறார். கோர்ட் மூலமாக முன்ஜாமீன் பெற்றுவிட்டு, அதன்பிறகு விசாரணைக்கு ஒத்துழைக்கும் மனநிலையில்தான் தனபால் இருக்கிறார்’’ என்றார்கள் அவர்கள்.