அவசர நேரத்தில் டாக்டர் இல்லாததால், நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பது இங்கு தொடர்கதை. நாட்டில் வாழும் நமக்கு மட்டுமல்ல, காட்டில் வாழும் யானைகளுக்கும் இதே கதிதான்! ஆசியாவின் முதல் யானைகள் முகாம், புலிகள் காப்பகம், உயிர்க்கோளக் காப்பகம் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது முதுமலை. 24 வளர்ப்பு யானைகள் உள்பட ஏராளமான காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கிற முதுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக வனவிலங்கு மருத்துவர் ஒருவர்கூட இல்லை. இதனால், உரிய சிகிச்சை இல்லாமல் யானைகள் இறப்பது தொடர்கதையாகிறது.

நீலகிரி மாவட்டம், படச்சேரி பகுதியில், ஜூன் 3-ம் தேதி பெண் யானை ஒன்று உடல்நிலை சரியில்லாமல் விழுந்து கிடந்தது. சேரம்பாடியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்தார். இவர், வனவிலங்கு மருத்துவர் கிடையாது; கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் மட்டுமே. இவர் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அதை லாரியில் ஏற்றி எலியாஸ்கடை என்ற இடத்திற்கு கொண்டுவந்தார். சில நிமிடங்களிலேயே யானை இறந்துபோனது. ஜூன் 4-ம் தேதி, பிதர்காடு வனச்சரகத்தில் மூன்று வயது குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் உடலில் விலங்குகள் கடித்ததற்கான தடயங்கள் இருந்தன. வேறு விலங்குகள் இந்தக் குட்டி யானையைத் தாக்கியிருக்கலாம் என வனத்துறை தரப்பில் சொல்லப்பட்டது.

ஜூன் 12-ம் தேதி காலை ஆறு மணியளவில், கூடலூர் கண்ணம்பாடி எஸ்டேட் பகுதியில் யானை ஒன்று வாயில் அடிபட்டு, நடக்க முடியாமல் கிடந்தது. உடனடியாக வனத் துறையினர் தகவல் கொடுத்தும், அன்று காலை 11 மணிவரை எந்த மருத்துவரும் வரவில்லை. பிறகு கால்நடை மருத்துவரான பிரபு, அங்கு சென்று சிகிச்சையளித்துள்ளார். கேரளா மாநிலம் முத்தங்கா வனஉயிரின சரணாலயத்திலிருந்து மருத்துவர்கள் குழு வந்து சிகிச்சையளித்தது. ஆனால், மறுநாள் இந்த யானை இறந்துவிட்டது.

முதுமலையில் வனவிலங்குகளுக்கு சிகிச்சையளிக்க பிரத்யேக மருத்துவர்கள் இல்லாததால், கோவையைச் சேர்ந்த மருத்துவரான மனோகரனையே வரவழைக்கிறார்கள். இவர், இதற்கு முன்னர் முதுமலையில் பணியாற்றியவர். தற்போது, கோவையில் பணியாற்றுகிறார். முதுமலை யானைகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், கோவையிலிருந்து இவர் வந்துசேர ஐந்து மணி நேரம் ஆகிவிடும். முதுமலை மட்டுமின்றி, ஆனைமலை யானைகள் முகாமிலும் முறையான வனவிலங்கு மருத்துவர்கள் இல்லை. எனவே முதுமலை, ஆனைமலை, கோவை ஆகிய மூன்று பகுதிகளுக்கும் ஒரே வனவிலங்கு மருத்துவர் மனோகரன் மட்டுமே. ஜூன் 13-ம் தேதி உயிரிழந்த யானை குறித்த தகவல், அதற்கு முந்தைய நாளே மனோகரனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மறுநாள் தான் அவர் சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன்பே யானை இறந்துவிட்டது.

மனோகரன் ஏன் தாமதமாகப் போனார்? ‘‘அன்று வனத்துறை தொடர்பான வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அதனால் போக முடியவில்லை. ஆனாலும், அந்த யானைக்கு கூடலூர் மற்றும் உதகையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். மறுநாள் நான் போய்ப் பார்த்தேன். ஆனால், அதற்குள் கடுமையான காயங்களால் யானை இறந்துவிட்டது” என்றார் மனோகரன்.

மரணமடைந்த இரண்டு யானைகளுக்கும் வாயில் கடுமையான காயங்கள் இருந்தன. அதற்கான காரணம் குறித்து அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்தோம். “இதற்குக் காரணம், ‘பன்றிக்காய்’. இது காட்டுப்பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் ஒருவகை வெடிமருந்து. இந்த வெடிமருந்து பந்துபோல இருக்கும். அழுத்தம் கொடுத்தால் வெடிக்கும். யானைகள் காலில் உருட்டியோ, தும்பிக்கையால் சோதித்தோதான் உணவை எடுத்துக்கொள்ளும். இப்போது கூடலூர் மற்றும் கேரளாவை ஒட்டிய வனப்பகுதிகளில் பலாப்பழ சீஸன் தொடங்கியிருக்கிறது. பலாப்பழ வாசனையால் தோட்டங்களில் புகும் யானைகள், பலாப்பழங்களைச் சாப்பிட்டுவிடும். இதைத் தடுக்க, பலாப்பழங்களுக்குள் பன்றிக்காயைச் சிலர் வைக்கிறார்கள். அந்தப் பழங்களைக் கடிக்கும்போது, அது வெடித்துவிடும். இதனால் வாயிலும் தாடையிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டு யானைகள் இறக்கின்றன’’ என்றனர்.

இதுகுறித்து முதுமலை கள இயக்குநர் தீபக் வத்சவாவிடம் பேசினோம். “யானைகள் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கிறோம். யானைக்கு உடல்நலக்குறைவு என்று தெரிய வந்தவுடன் உடனடியாக மனோகரனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வருவதற்குள், வேறு மருத்துவர்களை வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும்கூட, யானை இறந்துவிட்டது. முதுமலைக்கு நிரந்தர வனவிலங்கு மருத்துவரைக் கேட்டிருக்கிறோம். விரைவில் அதற்குத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

யானைகள் மட்டுமல்ல... புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை எனப் பல வகையான வனவிலங்குகள் முதுமலை காட்டில் உள்ளன. அவற்றுக்கு அடிபட்டாலும் இதுதான் கதி. எனவே, வனவிலங்குகளின் முக்கியத்துவம் கருதி தமிழக அரசு உடனடியாக வனவிலங்கு மருத்துவரை முதுமலையிலும், ஆனைமலையிலும் நியமிக்கவேண்டும்.

- அ.ஜார்ஜ்
படங்கள்: கே.அருண்